தமிழகப் பட்டியலின மக்களில் முதல் பட்டதாரி – முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்வீட்

மக்களின் விடியலுக்காக உழைத்த “திராவிடமணி” இரட்டைமலையாரின் பிறந்தநாளில் அவரது பங்களிப்புகளை நினைவுகூர்ந்து போற்றுகிறேன் என முதல்வர் ட்வீட். 

இரட்டைமலையாரின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து ட்விட் செய்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘தமிழகப் பட்டியலின மக்களில் முதல் பட்டதாரி; அண்ணல் அம்பேத்கர், அயோத்திதாசப் பண்டிதர், காந்தியடிகள் போன்ற பேராளுமைகளோடு இணைந்து ஒடுக்கப்பட்ட மக்களின் விடியலுக்காக உழைத்த “திராவிடமணி” இரட்டைமலையாரின் பிறந்தநாளில் அவரது பங்களிப்புகளை நினைவுகூர்ந்து போற்றுகிறேன்.’ என பதிவிட்டுள்ளார்.

Leave a Comment