பவதாரிணி மறைவுக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இரங்கல்!

bhavatharini

பிரபல பின்னணி பாடகியும், இசைஞானி இளையராஜாவின் மகளுமான பவதாரிணி நேற்று (ஜனவரி 25) ஆம் தேதி காலமானார். இவர் கல்லீரல் புற்று நோயால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், இலங்கையில் சமீபத்தில் புற்றுநோய்க்கு ஆயுர்வேத மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார். இதனையடுத்து, சிகிச்சை பலனின்றி நேற்று (ஜனவரி 25)-ஆம் தேதி இலங்கையில் காலமானார். இவருடைய மறைவு சினிமாத்துறையில் பெரும் சோகத்தையும். அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இவருடைய மறைவுக்கு சினிமா பிரபலங்கள் முதல் அரசியல் தலைவர்கள் வரை இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். … Read more

அம்மாவுக்கு தான் அதிக சந்தோசம்.! அமைச்சர் உதயநிதிக்கு இளையராஜா ஆடியோ மூலம் வாழ்த்து.!

நீங்கள் அமைச்சரானது உங்கள் அம்மாவுக்கு மிகவும் சந்தோசத்தை கொடுத்திருக்கும் என்பதை நான் எண்ணி பார்க்கிறேன். – அமைச்சர் உதயநிதிக்கு இளையராஜா வாழ்த்து.  சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் நேற்று தமிழக அமைச்சரவையில் இடம் பிடித்தார். அவர் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சராக பதவியேற்றார். இதற்கு பலரும் அமைச்சர் உதயநிதிக்கு வாழ்த்து தெரிவித்தனர். உதயநிதி ஸ்டாலின் திரைத்துறைக்கு மிகவும் நெருக்கமானவர் என்பதால் திரைத்துறையில் ரஜினி, கமல் உட்பட பலரும் … Read more

இளையராஜாவுக்கு டிடிவி தினகரன் வாழ்த்து..!

நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள இசைஞானி ‘ பத்ம விபூஷன்’ திரு.இளையராஜா அவர்களுக்கு மனப்பூர்வமான வாழ்த்துக்கள் என டிடிவி தினகரன் ட்வீட்.  இசையமைப்பாளர் இளையராஜா,பி டி உஷா, வீரேந்திர ஹெக்கடே மற்றும்  வி.விஜயேந்திர பிரசாத் ஆகியோர்  மாநிலங்களவை நியமன உறுப்பினர்களாக  அறிவிக்கப்பட்டுள்ளனர்.இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் வாழ்த்து செய்தியை வெளியிட்டுள்ளார். இதனையடுத்து அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், டிடிவி தினகரன் அவர்கள் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், … Read more

#Breaking:இசையமைப்பாளர் இளையராஜா, தடகள வீராங்கனை பி டி உஷா உள்ளிட்ட நால்வர் ராஜ்யசபாவுக்கு பரிந்துரை

இசைஞானி இளையராஜா,தடகள வீராங்கனை பி டி உஷா ஆகியோர்  மாநிலங்களவை நியமன எம்.பி.க்கள் ஆகின்றனர். பழம்பெரும் தடகள வீராங்கனை பி டி உஷா மற்றும் இசைஞானி இளையராஜா உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் புதன்கிழமை மாநிலங்களவைக்கு பரிந்துரைக்கப்பட்டனர். தர்மஸ்தலா கோவிலின் பரோபகாரரும், நிர்வாகியுமான வீரேந்திர ஹெக்கடே மற்றும் பிரபல திரைக்கதை எழுத்தாளர் வி.விஜயேந்திர பிரசாத் ஆகியோரும் பாராளுமன்ற மேல்சபைக்கு பரிந்துரைக்கப்பட்டனர். இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் வாழ்த்து செய்தியை வெளியிட்டுள்ளார்.அதில் அவர் கூறியிருப்பதாவது பி.டி. உஷா … Read more

ஒரே படத்தில் மீண்டும் இணைந்த இளையராஜா – யுவன்.! வெங்கட் பிரபுவின் அடுத்த சம்பவம் லோடிங் …

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் கடைசியாக வெளியான மாநாடு, மன்மதலீலை ஆகிய படங்கள் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வெற்றியை பெற்றுவிட்டது. இந்த வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக வெங்கட் பிரபு தெலுங்கு நடிகர் நாக சைதன்யா வை வைத்து ஒரு படம் இயக்கிவருகிறார். இந்த படம் நாக சைதன்யாவின் 22-வது படம் என்பதால் படத்திற்கு தற்காலிகமாக “NC22” தலைப்பு வைக்கப்பட்டிள்ளது. இந்த படத்தை ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது.  படத்தில் நாக சைதன்யாவிற்கு ஜோடியாக … Read more

இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து.!

அன்னக்கிளி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான இசையமைப்பாளர் இளையராஜா அன்றிலிருந்து இன்றுவரை தமிழ் நாட்டில் இவரது இசைக்கு மயங்காதவர்கள் யாருமில்லை. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என இதுவரை 1000 படங்களுக்கும் மேல் 7000 பாடல்களுக்கும் மேல் இசையமைத்திருக்கிறார் ராஜா. இன்று இளையராஜா தனது 80-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இவருக்கு சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் தங்களது பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில், இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு … Read more

இசைஞானி இளையராஜாவை அவமானப்படுத்துவதா.? – ஜே.பி.நட்டா கடும் கண்டனம்

இளையராஜாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கருத்து சொல்பவர்கள் மீது பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா கண்டனம். இசையமைப்பாளர் இளையராஜா புத்தகம் ஒன்றுக்கு எழுதிய முன்னுரையில், பிரதமர் மோடி தலைமையில் நாடு வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. சமூக நீதி தொடர்பாக பிரதமர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். மோடியின் முத்தலாக் தடை போன்ற பல்வேறு சமூகப் பாதுகாப்பு திட்டங்களைக் கண்டு அம்பேத்கர் பெருமிதம் கொள்வார் என்றும் அம்பேத்கரும், மோடியும் இந்தியா குறித்து பெரிய கனவு கண்டவர்கள் எனவும் … Read more

இளையராஜா மேல்முறையீட்டு வழக்கில் உயர் நீதிமன்றம் உத்தரவு!

காப்புரிமை தொடர்பாக இசையமைப்பாளர் இளையராஜா தொடுத்த வழக்கில் இன்ரிகோ பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு. தயாரிப்பாளர்களிடம் இருந்து காப்புரிமை பெற்றால்தான் இசையை பயன்படுத்தலாம் என்ற உத்தரவை எதிர்த்து இசையமைப்பாளர் இளையராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவில், தயாரிப்பாளர்களுக்கு பட காப்புரிமை மட்டுமே உள்ளது. இசை பணிகளுக்கு அவர்கள் உரிமையாளர்கள் அல்ல என்று தெரிவித்ததை தொடர்ந்து, இன்ரிகோ, அகி, யுனிசிஸ் இன்போ நிறுவனங்கள் 4 வாரங்களில் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. … Read more

31 ஆண்டுகளுக்கு பிறகு ரகசியத்தை உடைத்த இளையராஜா.! வைரலாகும் வீடியோ.!

பேர் வச்சாலும் பாடல் உருவான விதம் குறித்து இளையராஜா பேசும் வீடியோ வைரலாகி வருகிறது.  இயக்குனர் சிங்கீதம் சீனிவாச ராவ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 1991-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் மைக்கேல் மதனா காம ராஜன். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்திருந்தார். படத்திலிருந்து வெளியான அணைத்து பாடல்களும் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தற்போது வரை மக்கள் பாடல்களை கேட்டுக்கொண்டு வருகிறார்கள். குறிப்பாக இந்த படத்தில் இடம்பெற்ற “பேர் வச்சாலும்” பாடலும் ரசிகர்களுக்கு … Read more

இசைஞானி இளையராஜாவை சந்தித்த உலகநாயகன் கமல்ஹாசன்.!

நடிகர் கமல்ஹாசன் இசையமைப்பாளர் இளையராஜவுடன் மரியாதை நிமிர்த்தமாக சந்திப்பு. தமிழ் சினிமாவில் இசைஞானி என்ற அழைக்கப்படும் இளையராஜா கடந்த பிப்ரவரி மாதம் சென்னை தீ நகரில் “இளையராஜா ஸ்டுடியோ” என்ற பெயரில் ஸ்டுடியோ ஒன்றை தொடங்கியிருந்தார் அங்கு தற்போது படங்களுக்கான இசைப்பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. இளையராஜா ஸ்டுடியோ தொடங்கியதை தொடர்ந்து ரஜினி, வெற்றிமாறன், விஜய் சேதுபதி, இசையமைப்பாளர் கீரவாணி ஆகியோர் நேரடியாக ஸ்டுடியோவிற்கு சென்றனர். இவர்களை தொடர்ந்து உலகநாயகன் கமல்ஹாசன் சென்னை தீ நகரில் இளையராஜா … Read more