மின் கட்டண உயர்வு – விரைவில் போராட்டம் நடத்தப்படும் : ஜி.கே.வாசன்

மின்கட்டண உயர்வை திரும்ப பெறவில்லை என்றால், விரைவில் போராட்டம் நடத்தப்படும் என ஜி.கே.வாசன் அறிவிப்பு.  தமிழகத்தில், புதிய மின் கட்டண உயர்வு நேற்று முதல் அமலுக்கு வருவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. 8 ஆண்டுகளுக்கு பின்னர் தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த மின்கட்டண உயர்வு பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், ஜி.கே.வாசன் அவர்கள், கடந்த சில நாட்களுக்கு முன்னதாக தான் சொத்து வரி உயர்த்தப்பட்டது. அதனை தொடர்ந்து, தற்போது … Read more

ஏலத்தில் விடப்படவுள்ள பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்ட 1200-க்கும் மேற்பட்ட பரிசு பொருட்கள்..!

வரும் 17-ஆம் தேதி 4-வது முறையாக ஆன்லைன் மூலமாக பிரதமர் மோடியின் பரிசு பொருட்கள் ஏலம் விடப்பட உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு, அவர் எங்கு சென்றாலும் அரசியல் பிரபலங்கள் உள்ளிட்ட பலர் பரிசுகளை வழங்குவது உண்டு. அந்த வகையில், பிரதமர் மோடி அவர்கள் பெற்ற 1,200-க்கு மேற்பட்ட பரிசு பொருட்கள் ஏலம் விடப்படுகின்றன. ஏற்கனவே 3 தடவை ஆன்லைன் மூலம் ஏலம் நடந்துள்ள நிலையில், வரும் 17-ஆம் தேதி 4-வது முறையாக ஆன்லைன் மூலமாக … Read more

இன்றும், நாளையும் இந்த 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

திருப்பூர், தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழக மற்றும் புதுவையில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி திருப்பூர், தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், நீலகிரி, கோவை மாவட்டங்களில் நாளை கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்திய பால்வளத்துறையின் உண்மையான தலைவர்கள் இவர்கள் தான் – பிரதமர் மோடி

உலகில் மற்ற வளர்ந்த நாடுகளைப் போல் அல்லாமல், இந்தியாவில் பால்வளத்துறையின் உந்து சக்தியாக சிறு விவசாயிகள் உள்ளனர் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.  இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், உ.பி-யில், உலக பால்வள உச்சிமாநாடு 2022-ஐ தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து அந்த நிகழ்வில் உரையாற்றிய அவர், 2014-ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது, கடந்த 8 ஆண்டுகளில் 44 சதவிகிதம் உற்பத்தி அதிகரித்துள்ளது. இந்தியாவில் சுமார் 8 கோடி குடும்பங்கள் பால் உற்பத்தி  துறை மூலமாக … Read more

நீட் தேர்வு மட்டுமின்றி 10, 12 வகுப்பு மாணவர்களுக்கும் மனநல ஆலோசனை வழங்க உள்ளோம் – அமைச்சர் ம.சுப்பிரமணியன்

நீட் தேர்வு மட்டுமின்றி 10, 12 வகுப்பு மாணவர்களுக்கும் மனநல ஆலோசனை வழங்க உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சு.  சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மனநல நல்லாதரவு மன்றம் திட்ட துவக்க விழாவில் அமைச்சர் மா.சுப்பிரமணியன்  அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், நீட் தேர்வு மட்டுமின்றி 10, 12 வகுப்பு மாணவர்களுக்கும் மனநல ஆலோசனை வழங்க உள்ளோம். 1.32 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு நீட் தேர்வு குறித்து மன நல ஆலோசனை … Read more

பாரத சாரண, சாரணியர் இயக்கத்தின் தமிழ்நாடு தலைவராக பொறுப்பேற்றார் அன்பில் மகேஷ்..!

இன்று பாரத சாரண, சாரணியர் இயக்கத்தின் தமிழ்நாடு தலைவராக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டார்.  கடந்த சில நாட்களுக்கு முன்னதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் சாரண சாரணியர் இயக்கத்தின் தலைவர் பொறுப்புக்கு தேர்வானார். இதற்கான தேர்தல் கடந்து செப்டம்பர்10-ஆம் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், பள்ளி கல்வித்துறை அமைச்சரை எதிர்த்து போட்டியிட யாரும் மனு அளிக்காத காரணத்தால் அமைச்சர் அன்பின் மகேஷ் பொய் அவர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இந்த நிலையில், … Read more

செப்-15 ஆம் தேதி அண்ணா சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை…!

மதுரை நெல்பேட்டையில் உள்ள அண்ணா சிலைக்கு செப்.15-ஆம் தேதி மாலையணிவித்து மரியாதை செலுத்துகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். செப்.15-ஆம் தேதி அறிஞர் அண்ணாவின் 114-வது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. இதனையடுத்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், மதுரை நெல்பேட்டையில் உள்ள அண்ணா சிலைக்கு செப்.15-ஆம் தேதி மாலையணிவித்து மரியாதை செலுத்த உள்ளார்.

ஆடுகளம் தகவல் மையத்தை தொடங்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்…!

அமைச்சர் மெய்யநாதன் ‘ஸ்போர்ட்ஸ் நாதன்’ ஆகவே மாறிவிட்டார் என முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி.  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் விளையாட்டு வீரர்களுக்கான சந்தேகங்களை கேட்டறிவதற்காக ஆடுகளம் தகவல் மையத்தை தொடங்கி வைத்தார். விளையாட்டுப் போட்டிகள் தொடர்பான சந்தேகங்களை தொலைபேசி மூலம் கேட்டறிய இந்த உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் கோப்பை மாநில விளையாட்டு போட்டிக்கான இணையதள பதிவையும் முதலமைச்சர் தொடக்கி வைத்துள்ளார். இதனை தொடர்ந்து இந்த நிகழ்வில் பேசிய அவர், கடந்த … Read more

இன்னும் சில மாதங்களில் பேருந்து கட்டணம் உயரும் – எடப்பாடி பழனிசாமி

அதிமுக அரசால்  கொண்டுவரப்பட்ட திட்டங்களுக்கு தான் திமுக அரசு தற்போது ரிப்பன் வெட்டி தொடங்கி வைக்கிறது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.  எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், நேற்று கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில், பேசிய அவர், இந்தியாவில் சூப்பர் முதல்வர் மு.க.ஸ்டாலின் என்று சொல்லியிருக்கிறார்கள். ஆனால் லஞ்சம் வாங்குவதில் தான் சூப்பராக இருக்கிறார். இந்த ஆட்சியில் கலெக்ஷன், கமிஷன், கரப்ஷன் ஆகியவற்றை திமுக துல்லியமாக செய்து வருகிறது. … Read more

கால்நடை மருத்துவ படிப்புகளுக்கு இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பம்….!

கால்நடை மருத்துவ படிப்புகளுக்கு இணையதளத்தில் இன்று முதல் 26ம் தேதி மாலை 5 மணிவரை விண்ணப்பிக்கலாம்.  இளநிலை கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு செப்டம்பர் 12ம் தேதி முதல் 26ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, கால்நடை மருத்துவ படிப்புகளுக்கு இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். http://adm.tanuvas.ac.in என்ற இணையதளத்தில் இன்று முதல் 26ம் தேதி மாலை 5 மணிவரை விண்ணப்பிக்கலாம்.