மாணவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடுமையான நடவடிக்கை…! அமைச்சர் அன்பில் மகேஷ் எச்சரிக்கை..!

Schools will be restricted - Anbil Mahesh

மாணவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவுறுத்தல்.  சென்னையில், நேற்று தனியாா் அமைப்புகள் சாா்பில் பள்ளி மாணவா்களுக்காக நடத்தப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் கலந்து கொண்டார். அதன்பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் தேவைக்கு அதிகமாக உள்ள அரசுப் பள்ளி ஆசிரியா்களை மட்டுமே தொழிற்பயிற்சி மைய ஆசிரியா்களாகப் பணி மாற்றம் செய்யப்படுகிறது. கூடுதல் ஆசிரியா்கள் இல்லாத … Read more

மாணவர்கள் கவனத்திற்கு..! நாளை பொதுவிடுமுறையா? – தமிழ்நாடு அரசு

School Leave in Delhi

நாளை (ஜன.18) வழக்கம் போல் பள்ளி, கல்லூரிகள் இயங்கும் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு.  பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 14-ஆம் தேதி முதல் 17-ஆம் தேதி வரை கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில், நாளையும்  விடுமுறை அளிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு மாணவர்கள் மத்தியில் எழுந்துள்ளது. மேலும், நாளை விடுமுறை என்ற வதந்தியான செய்திகளும் பரவி வருகிறது. இந்த நிலையில், இதுகுறித்து நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், ஜனவரி 18ம் … Read more

தைத் திங்களில் தமிழர் பெருமை என இந்த மாதம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் – அமைச்சர் அன்பில் மகேஷ்

Minister Anbil Mahesh speech

நம் அனைவரையும் ஒன்றிணைப்பது தமிழ் – தமிழர் என்ற உணர்வுதான் என அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி.  சென்னை இலக்கியத் திருவிழாவை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், தைத் திங்களில் தமிழர் பெருமை என இந்த மாதம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு திட்டமிடப்பட்டுள்ளது, தமிழர்களின் பெருமையை தமிழ்நாடு அரசு எப்படி பறைசாற்றுகிறது என்பதற்கு இந்த நிகழ்ச்சிகளே எடுத்துக்காட்டு. நம் அனைவரையும் ஒன்றிணைப்பது … Read more

இவர்களது கோரிக்கைகளுக்கு செவி சாய்க்க திறனற்ற திமுக அரசு மறுக்கிறது – அண்ணாமலை

The incompetent DMK government refuses to listen to their demands - Annamalai

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு அன்பில் மகேஷ் அவர்கள் இடைநிலை ஆசிரியர்களை சந்திக்காமல் இருப்பது இந்த திறனற்ற திமுக அரசுடைய மெத்தனப் போக்கின் வெளிப்பாடு என அண்ணாமலை ட்வீட்.  ஊதிய முரண்பாட்டை களைய வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் சென்னை டிபிஐ வளாகத்தில் 4-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தில் கலந்துகொண்ட ஆசிரியர்கள் பலருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், இதுகுறித்து பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ஊதிய முரண்பாட்டை களைய வலியுறுத்தி … Read more

எதிர்க்கட்சி சொல்வதெல்லாம் கேட்கக்கூடாது – அமைச்சர் அன்பில் மகேஷ்

Anbil Mahesh

உதயநிதி அமைச்சராக பொறுப்பேற்பது மகிழ்ச்சியாக உள்ளது என அன்பில் மகேஷ் பேட்டி.  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், உதயநிதி அமைச்சராக பொறுப்பேற்பது மகிழ்ச்சியாக உள்ளது. அவருக்கு  வாழ்த்துக்கள். அவர் அமைச்சராக மிகவும் சிறப்பாக செயல்படுவார். முதல்வரின் அறிவிப்பிற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எதிர்க்கட்சி சொல்வதெல்லாம் கேட்கக்கூடாது. 30 வருடம் கழித்து அமைச்சர் பதவி கொடுத்தாலும் விமர்சிக்க தான் செய்வார்கள் என தெரிவித்துள்ளார்.

அமைச்சர் அன்பில் மகேஷை சந்தித்த துரை வைகோ…!

DuraiVaiko

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷை சந்தித்த துரை வைகோ. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களை துரை வைகோ அவர்கள் சந்தித்து பேசியுள்ளார். இதுகுறித்து துரை வைகோ தனது ட்விட்டர் பக்கத்தில், ‘தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களை இன்று சந்தித்தேன். தலைவர் வைகோ அவர்களின் உடல் நலம் குறித்து விசாரித்த அமைச்சர், நாடாளுமன்றத்தில் தலைவர் வைகோ அவர்களின் செயல்பாடுகள் மகிழ்ச்சி அளிக்கக்கூடிய வகையில் இருப்பதாக தெரிவித்தார்.’ என … Read more

LKG, UKG வகுப்புகளுக்கான தற்காலிக ஆசிரியர்களுக்கான தொகுப்பூதியம் உயர்கிறதா? – அமைச்சர் அன்பில் மகேஷ்

anbilmahesh

நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு கிடைக்கும் வரை, தேர்வுக்கான பயிற்சி தொடரும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி.  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் அவர்கள் சென்னையில்  செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், LKG, UKG வகுப்புகளுக்கான தற்காலிக ஆசிரியர்களுக்கான தொகுப்பூதிய உயர்வு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர் அதற்கு பதிலளித்த அவர், வரும் 10-ம் தேதி நிதியமைச்சருடன் ஆலோசனை நடத்தி உரிய முடிவு எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.  மேலும், அரசுப் பள்ளிகளில் … Read more

பாரத சாரண, சாரணியர் இயக்கத்தின் தமிழ்நாடு தலைவராக பொறுப்பேற்றார் அன்பில் மகேஷ்..!

anbil magesh

இன்று பாரத சாரண, சாரணியர் இயக்கத்தின் தமிழ்நாடு தலைவராக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டார்.  கடந்த சில நாட்களுக்கு முன்னதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் சாரண சாரணியர் இயக்கத்தின் தலைவர் பொறுப்புக்கு தேர்வானார். இதற்கான தேர்தல் கடந்து செப்டம்பர்10-ஆம் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், பள்ளி கல்வித்துறை அமைச்சரை எதிர்த்து போட்டியிட யாரும் மனு அளிக்காத காரணத்தால் அமைச்சர் அன்பின் மகேஷ் பொய் அவர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இந்த நிலையில், … Read more

அமைச்சர் அன்பில் மகேஷை சந்தித்த நல்லாசிரியர் விருதுபெற்ற ஆசிரியர் ராமசந்திரன்..!

anbil magesh - ramasanthiran

நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர் ராமசந்திரன் தனது குடும்பத்துடன், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். கடந்த செப்.5-ஆம் தேதி, தமிழகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட இராமநாதபுரம் மாவட்டம் கிளாம்பால் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆசிரியர் ராமச்சந்திரன் அவர்கள் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்களிடம் நல்லாசிரியர் விருதை பெற்றார். இந்த விருதினை அவர் தன்னுடைய பள்ளி சீருடை சென்று பெற்றுக்கொண்டார். இந்த நிலையில், நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர் ராமசந்திரன் தனது … Read more

டெல்லி முதல்வரை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ்…!

anbilmahesh

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்திக்கும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி. ஆசிரியர் தினமான செப்டம்பர் 5-ஆம் தேதி மூன்று புதிய திட்டங்கள் தொடங்கப்பட உள்ளது. அதன்படி 15 மாதிரி பள்ளிகள், 26 சீர்மிகு பள்ளிகள், கல்லூரி மாணவியருக்கு மாதம் ரூ.1,000  வழங்கும் திட்டம் ஆகிய திட்டங்களின் தொடக்க விழா நடைபெற உள்ளது. இந்த விழாவில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள் கலந்து கொள்ள உள்ளார். இதனையடுத்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் டெல்லி … Read more