நீட் தேர்வு மட்டுமின்றி 10, 12 வகுப்பு மாணவர்களுக்கும் மனநல ஆலோசனை வழங்க உள்ளோம் – அமைச்சர் ம.சுப்பிரமணியன்

நீட் தேர்வு மட்டுமின்றி 10, 12 வகுப்பு மாணவர்களுக்கும் மனநல ஆலோசனை வழங்க உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சு. 

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மனநல நல்லாதரவு மன்றம் திட்ட துவக்க விழாவில் அமைச்சர் மா.சுப்பிரமணியன்  அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், நீட் தேர்வு மட்டுமின்றி 10, 12 வகுப்பு மாணவர்களுக்கும் மனநல ஆலோசனை வழங்க உள்ளோம். 1.32 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு நீட் தேர்வு குறித்து மன நல ஆலோசனை வழங்கி இருக்கிறோம்.அதில் 564 மாணவர்கள் high risk மாணவர்கள் என்று கருதப்பட்டு தொடர்ந்து அவர்களுக்கு ஆலோசனை வழங்கி வருகிறோம் என தெரிவித்துள்ளார்.

Leave a Comment