கட்டுப்பாட்டை இழந்து 50 அடி பள்ளத்தில் விழுந்த கேரள அரசு பேருந்து.!

கேரளா மாநிலம், கொச்சி – தனுஷ் கோடி தேசிய நெடுஞ்சாலையில் 50 அடி பள்ளத்தில் அரசு பேருந்து கவிழ்ந்தது. இதில் ஒருவர் பலியானார். 20 பேர் காயமுற்றனர்.

கேரள மாநிலம் மூணாறு பேருந்து டிப்போவில் இருந்து இன்று (செப்டம்பர் 12) காலை 5 மணிக்கு எர்ணாகுளத்திற்கு அரசு பேருந்து ஒன்று 60 பயணிகளுடன் புறப்பட்டு சென்றது.

அந்த கேரள அரசு பேருந்து கொச்சி – தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருக்கும் போது, கட்டுப்பாட்டை இழந்த அந்த பேருந்து அடிமாலி வாளரா பகுதி அருகே இருந்த சுமார் 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பஸ்சில் பயணித்த மற்ற பயணிகள் 20க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர். அவர்கள் தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உயிரிழந்தவர் கேரளா, வாளரா அருகே மலைவாழ் மக்கள் வசிக்கும் குளமாங்குழி பகுதியை சேர்ந்த 45 வயது மதிக்கத்தக்க சஜீவ்ஜோஸ் என்பது தெரியவந்தது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment