பேச்சுவார்த்தையில் தோல்வி..போக்குவரத்து தொழிற்சங்கம் போராட்டம் அறிவிப்பு..!

போக்குவரத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் கடந்த மாதம் வேலை நிறுத்தம் செய்வதாக அறிவித்திருந்தனர். போக்குவரத்து தொழிலாளர் ஊதியம் பேச்சுவார்த்தை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கி இருக்க வேண்டும் ஆனால் இன்னும் ஊதிய ஒப்பந்தம் பேச்சுவார்த்தை குறித்து அரசு பேசவில்லை. அதே நேரத்தில் காலியாக உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். காலி பணியிடங்கள் நிரப்புவதில் ஒப்பந்தம் செய்யக்கூடிய பணி நியமனத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வலியுறுத்தி இருந்தனர். இன்று சென்னையில் தொழிலாளர் … Read more

14 எம்பிக்கள் சஸ்பெண்ட் – எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டம்..! இரு அவைகளும் ஒத்திவைப்பு..!

Parliment

நேற்று முன்தினம் பாராளுமன்ற பார்வையாளர்கள் கேலரியில் இருந்த ஒரு பெண் , ஒரு ஆண் என இரு நபர்கள் மக்களவையில் பாதுக்காப்பு அரண் மீறி உள்ளே நுழைந்த சம்பவம் இந்திய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக, 4 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில், மக்களவையில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு விளக்கம் கோரிய எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் 14 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு அரசியல் தலைவர்கள் கண்டனம்  தெரிவித்து வருகின்றனர். … Read more

திமுக அரசை கண்டித்து நாளை நடைபெற இருந்த போராட்டம் ஒத்திவைப்பு – எடப்பாடி பழனிசாமி

திமுக அரசை கண்டித்து நாளை நடைபெறவிருந்த போராட்டம் 14 மாவட்டங்களில் ஒத்திவைக்கப்படுவதாக ஈபிஎஸ் அறிவிப்பு.  திமுக அரசை கண்டித்து தமிழக முழுவதும் நாளை போராட்டம் நடைபெறும் என்று எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக இடைக்காலர் பொது செயலாளருமான எடப்பாடி பழனிசாமி அவர்கள் அறிவித்திருந்தார். இந்த நிலையில் மழை காரணமாக 14 மாவட்டங்களில் இந்த போராட்டம் 21ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுவதாக அறிவித்துள்ளார். அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர், கடலூர், தஞ்சை, விருதுநகர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, … Read more

தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும் – ஈபிஎஸ் அறிவிப்பு

திமுக அரசை கண்டித்து தமிழக முழுவதும் போராட்டம் நடத்தப்படும் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு. கோவையில் திமுக அரசை கண்டித்து முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி தலைமையில் அதிமுகவினர் உண்ணாவிரத போராட்டம் தொடங்கியுள்ளது. சிவானந்தா காலனியில் உண்ணாவிரத போராட்டத்தை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் உரையாற்றிய ஈபிஎஸ், ஒரு ஆட்சி எப்படி நடக்க கூடாது ஒரு முதலமைச்சர் எப்படி ஆட்சி நடத்தக்கூடாது என்பது இந்த 18 மாத ஆட்சியில் காட்டியுள்ளனர். அதிமுகவை பற்றி … Read more

கோவையில் திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம்..!

கோவை மாவட்ட அ.தி.மு.க சார்பில் தி.மு.க அரசை கண்டித்து இன்று ஆர்ப்பாட்டம்.  கோவை மாவட்ட அ.தி.மு.க சார்பில் தி.மு.க அரசை கண்டித்து இன்று கோவை சிவானந்தா காலனியில் உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது. இந்த போராட்டத்திற்கு முன்னாள் அமைச்சரும், கோவை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளருமான எஸ்.பி.வேலுமணி தலைமை தாங்குகிறார். காலை 9 மணிக்கு உண்ணாவிரதம் போராட்டம் தொடங்குகிறது. இந்த போராட்டத்தை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு போராட்டத்தை தொடக்கி வைத்து சிறப்புரையாற்றுகிறார். தமிழகத்தில் ஆட்சி … Read more

கள்ளக்குறிச்சி மாணவிக்கு நீதி கேட்டு மாதர் சங்கம் போராட்டம்.! டிஜிபி அலுவலகம் முற்றுகை.!

கள்ளக்குறிச்சி மாணவி வழக்கில் காவல்துறையினர் விரைவான உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாதர் சங்கத்தினர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.  கடந்த ஜூலை மாதம் கள்ளக்குறிச்சியில், கனியாமூர் தனியார் பள்ளியில் பயின்று வந்த 12ஆம் வகுப்பு மாணவி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக துரித நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் சென்னையில் போராட்டம் நடைபெற்றது. ஜனநாயக மாதர் சங்கம் சார்பில், இன்று சென்னை மயிலாப்பூர் டிஜிபு அலுவலகம் முன்பு ஏராளமான பெண்கள் போராட்டத்தில் … Read more

கால்பந்து வீராங்கனை பிரியா மரணம்..! அமரர் அறை முன் உறவினர்கள் போராட்டம்..!

மாணவி பிரியாவுக்கு தவறான சிகிச்சை அளித்த மருத்துவர்களை கைது செய்தால் தான் மாணவியின் உடலை வாங்குவோம் என உறவினர்கள் போராட்டம்.  கால்பந்தாட்ட வீராங்கனை பிரியாவுக்கு (17) பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் வலது கால் முட்டி ஜவ்வு சீரமைப்பு அறுவை சிகிச்சை நடந்த நிலையில், தவறான சிகிச்சை காரணமாக அறுவை சிகிச்சைக்கு பின் பிரியாவுக்கு ரத்த ஓட்ட பாதிப்பு ஏற்பட்டதால் வலது கால் அகற்றப்பட்டது. இதனையடுத்து சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை … Read more

அண்ணாமலை மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு..!

அண்ணாமலை மீது 6 பிரிவுகளில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். நேற்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில், ஆளும் திமுகவினர் தொடர்ந்து பெண்களை இழிவாக பேசுவதை கண்டித்து, பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்களும் கலந்து கொண்டார். இந்த நிலையில், அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் மகளிர் அணி உறுப்பினர்களை காவல்துறையினர் கைது  செய்தனர். இந்த நிலையில், கைது செய்யப்பட்ட அண்ணாமலை மீது 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு … Read more

#Breaking : பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கைது…!

அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக தலைவர் அண்ணாமலை கைது. சென்னை வள்ளுவர் கோட்டத்தில், ஆளும் திமுகவினர் தொடர்ந்து பெண்களை இழிவாக பேசுவதை கண்டித்து, பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்களும் கலந்து கொண்டார். இந்த நிலையில், அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் மகளிர் அணி உறுப்பினர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

போதுமான ஆசிரியர்கள் இல்லாததால் மாணவர்களின் எதிர்காலம் சீரழிந்து விடும் – ஆசிரியர் சங்கத்தினர்

போதுமான ஆசிரியர்கள் இல்லாமல் பள்ளிகளில் எப்படி மாணவர்கள் நன்றாக படிப்பார்கள்? என TNTET தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் சங்கத்தினர் பேட்டி.  TNTET தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கான மறுநியமன போட்டித் தேர்வு என்ற அரசாணையை நீக்க கோரிக்கை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், TNTET தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் சங்கத்தினர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது பேசிய … Read more