இந்திய பால்வளத்துறையின் உண்மையான தலைவர்கள் இவர்கள் தான் – பிரதமர் மோடி

உலகில் மற்ற வளர்ந்த நாடுகளைப் போல் அல்லாமல், இந்தியாவில் பால்வளத்துறையின் உந்து சக்தியாக சிறு விவசாயிகள் உள்ளனர் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 

இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், உ.பி-யில், உலக பால்வள உச்சிமாநாடு 2022-ஐ தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து அந்த நிகழ்வில் உரையாற்றிய அவர், 2014-ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது, கடந்த 8 ஆண்டுகளில் 44 சதவிகிதம் உற்பத்தி அதிகரித்துள்ளது.

இந்தியாவில் சுமார் 8 கோடி குடும்பங்கள் பால் உற்பத்தி  துறை மூலமாக வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர். இந்தியாவில் பால்வளதுறையின் உண்மையான தலைவர்கள் பெண்கள் தான். உலகிலேயே அதிக அளவில் பால் பொருட்களை உற்பத்தி செய்யும் நாடாக இந்தியா மாறி இருக்கிறது.

இந்தியாவில் உள்ள பால் கூட்டுறவு சங்கங்களில் மூன்றில் ஒரு பங்கு அதிகமான பெண்கள் தான். உலகில் மற்ற வளர்ந்த நாடுகளைப் போல் அல்லாமல், இந்தியாவில் பால்வளத்துறையின் உந்து சக்தியாக சிறு விவசாயிகள் உள்ளனர். 2025 ஆம் ஆண்டுக்குள் கால்நடைகளுக்கு புரூசெல்லா தடுப்பூசி 100 சதவீதம் போடப்படும் என தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment