ராஜேந்திர பாலாஜிக்கான ஜாமீன் நிபந்தனையில் தளர்வு!

அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தமிழ்நாட்டை விட்டு செல்ல தடை என உச்சநீதிமன்றம் திட்டவட்டம்.

பண மோசடி வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு விதிக்கப்பட்டிருந்த ஜாமீன் நிபந்தனையில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பாஸ்போர்ட்டை புதுப்பித்துக்கொள்ள அனுமதி அளித்தது உச்சநீதிமன்றம். மேலும், ராஜேந்திர பாலாஜி தமிழகத்தில் எந்த இடங்களுக்கும் செல்லலாம் என அனுமதி வழங்கி நிபந்தனையை தளர்த்தியது உச்சநீதிமன்றம்.

விருதுநகர் மாவட்டத்தை விட்டு வெளியே செல்லும்போது விசாரணை அதிகாரியிடம் தெரிவிக்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. ஜாமீன் நிபந்தனைகள் தளர்த்தப்பட்டாலும் பாஸ்போர்ட்டை அவரிடம் கொடுக்கக்கூடாது என வெளி மாநிலங்களுக்கு பயணிக்கும் வகையில் நிபந்தனையில் தளர்வு தேவை என்ற ராஜேந்திர பாலாஜியின் கோரிக்கையை ஏற்க மறுப்பு தெரிவிக்கப்பட்டது. ஆவினில் வேலை வாங்கி தருவதாக பணமோசடி செய்த புகாரில் கைதான ராஜேந்திர பாலாஜி ஜாமீனில் வெளியே இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment