மின் கட்டண உயர்வு – விரைவில் போராட்டம் நடத்தப்படும் : ஜி.கே.வாசன்

மின்கட்டண உயர்வை திரும்ப பெறவில்லை என்றால், விரைவில் போராட்டம் நடத்தப்படும் என ஜி.கே.வாசன் அறிவிப்பு. 

தமிழகத்தில், புதிய மின் கட்டண உயர்வு நேற்று முதல் அமலுக்கு வருவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. 8 ஆண்டுகளுக்கு பின்னர் தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த மின்கட்டண உயர்வு பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், ஜி.கே.வாசன் அவர்கள், கடந்த சில நாட்களுக்கு முன்னதாக தான் சொத்து வரி உயர்த்தப்பட்டது. அதனை தொடர்ந்து, தற்போது மின் கட்டணம் உயர்ந்துள்ளது. எனவே, இந்த மின் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என்றும், அவ்வாறு திரும்ப பெறவில்லை என்றால், இது தொடர்பாக விரைவில் போராட்டம் நடத்தப்படும் என்றும் தெரிவித்து உள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment