#JUSTIN: பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டாவுடன் அண்ணாமலை சந்திப்பு.!

Jul 13, 2023 - 07:10
 0  1
#JUSTIN: பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டாவுடன் அண்ணாமலை சந்திப்பு.!

பாஜக தேசியத்தலைவர் ஜெ.பி.நட்டாவுடன் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை சந்தித்துள்ளார்.

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை திடீரென இன்று டெல்லிக்கு சென்றார். இந்நிலையில், டெல்லியில் பாஜக தலைவர்களை சந்தித்து ஆலோசனை செய்ய உள்ளதாக தகவல் வெளியானதை தொடர்ந்து, தற்போது பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டாவுடன் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.

இந்த அலோசனை கூட்டத்தில், தமிழ்நாடு அரசியல் சூழல், அதிமுகவுடனான கூட்டணி, தமிழக அரசு ஆளுநர் இடையிலான மோதல், உள்ளிட்டவை குறித்தும் "என் மண் என் மக்கள்" என்ற பெயரில் 200 நாட்கள் நடைபெறவுள்ள பாதயாத்திரை தொடர்பாகவும்ஆலோசனை நடைபெறுகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow