அடேங்கப்பா...இந்த மாம்பழத்தின் விலை ரூ. 2.75 லட்சமா.?

Jun 10, 2023 - 05:09
 0  0
அடேங்கப்பா...இந்த மாம்பழத்தின் விலை ரூ. 2.75 லட்சமா.?

மேற்கு வங்காளம் சிலிகுரியில்சர்வதேச சந்தையில் மாம்பழ கண்காட்சி விழா நடைபெற்று வருகிறது. இந்த கண்காட்சியில்  உலகின் மிக விலையுயர்ந்த மாம்பழமான 'மியாசாகி' வைக்கப்பட்டுள்ளது.

இந்த 'மியாசாகி' மாம்பழமால  ஒரு கிலோ ரூ. 2.75 லட்சத்துக்கு விற்கப்படுகிறது. மாடல்லா கேர்டேக்கர் சென்டர் & ஸ்கூல் (எம்சிசிஎஸ்), அசோசியேஷன் ஃபார் கன்சர்வேஷன் & டூரிஸம் (ஏசிடி) மூலம் சிலிகுரியில் உள்ள ஒரு மாலில் ஜூன் 9 அன்று திருவிழா தொடங்கியது. திருவிழாவில் 262க்கும் மேற்பட்ட மாம்பழங்கள் காட்சிப்படுத்தப்படும்.

மியாசாகி மாம்பழம் முதலில் ஜப்பானின் கியூஷு மாகாணத்தில் உள்ள மியாசாகி நகரில் வளர்க்கப்பட்டது, அதன் பெயர் பிறந்த நகரத்திலிருந்து பெறப்பட்டது. (ஜப்பானிய மொழியில் Taiyo-no-Tamago) என்று அழைக்கப்படும் இந்த மாம்பழம் பொதுவாக 350 கிராம் எடையும், 15 சதவிகிதம் அல்லது அதற்கும் அதிகமான சர்க்கரை உள்ளடக்கமும் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow