இன்றைய போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இந்தியா, நியூஸிலாந்து..!

இன்றைய போட்டியில் இந்தியா, நியூசிலாந்து மோதுகிறது. உலக கோப்பை டி20 போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. டி20 உலககோப்பையில் நியூசிலாந்து, இந்தியா விளையாடிய ஒரு போட்டியில்  தோல்வியை தழுவியுள்ளது. இரண்டு அணிகளுமே பாகிஸ்தான் தோற்கடித்தது. இன்று நடைபெறவுள்ள போட்டியில் இந்தியா, நியூசிலாந்து மோதுகிறது. இன்று தோல்வியடையும் அணிகள் அரை இறுதி வாய்ப்பை இழக்க அதிக வாய்ப்புள்ளதால் இன்றை போட்டி மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இன்றைய போட்டி துபாய் மைதானத்தில் நடைபெறுவதால் டாஸ் வெல்வது முக்கியமாக பார்க்கப்படுகிறது. … Read more

“ஊதியம் வழங்க பணமில்லை:மாகாத்மா காந்தி வேலை உறுதிதிட்டத்திற்கு மத்திய அரசு கூடுதல் நிதி வழங்க வேண்டும்” – பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை..!

அடுத்த 45 நாட்களுக்கு ஊரக வேலைவாய்ப்புத் திட்ட தொழிலாளர்களுக்கு ஊதியம் கிடைக்குமா? என்பது கேள்விக்குறியாகி இருப்பதாக ராமதாஸ் தெரிவித்துள்ளார். மகாத்மா காந்தி வேலை உறுதி திட்டத்திற்கு மத்திய அரசு கூடுதல் நிதி வழங்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.மேலும்,இது தொடர்பாக அவர் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது: “இந்தியாவில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதி முழுமையும் நடப்பு நிதியாண்டின் முதல் பாதியிலேயே தீர்ந்து விட்டதாகவும், இதுவரை பணியாற்றிய … Read more

விடுதலைப் போரில் தமிழகப் புகைப்பட கண்காட்சியை நாளை தொடங்கி வைக்கும் முதலமைச்சர்..!

‘விடுதலை போரில் தமிழகம் ‘ என்ற புகைப்பட கண்காட்சி மற்றும் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி வாழ்க்கை வரலாறு குறித்து அரசு பேருந்தில் அமைக்கப்பட்டுள்ள நகரும் புகைப்பட கண்காட்சியை நாளை முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார். இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், சென்னை, கோயம்பேடு புறநகர் பேருந்து நிலைய வளாகத்தில் நாளை (1.11.2021) திங்கட்கிழமை அன்று காலை 11.00 மணியளவில் 75வது சுதந்திர தின விழா, சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழா ஆண்டையொட்டி, செய்தி … Read more

உத்தரகாண்ட் கோர விபத்து : 12 பேர் உயிரிழப்பு; 4 பேர் படுகாயம்!

உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட பயங்கரமான சாலை விபத்தில் 12 பேர் உயிரிழந்துள்ள நிலையில், நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர். உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள டேராடூன் மாவட்டத்தின் சக்ராட்டா தெஹ்சில் எனும் இடத்தில் நடந்த பயங்கரமான சாலை விபத்தில் 12 பேர் உயிரிழந்து உள்ளனர். மேலும் இந்த விபத்தில் 4 பேர் படுகாயமடைந்துள்ளனர். தகவலறிந்து மீட்பு படையுடன் சம்பவ இடத்துக்கு விரைந்த சக்ராத் பகுதி காவல்துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக  மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேலும் விபத்து தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு … Read more

பெண் போலீசை கிண்டல் செய்த இருவர் சிறையில் அடைப்பு..!

பாதுகாப்பு பணியில் இருந்த பெண் போலீசை கிண்டல் செய்த இருவர் கைது. சென்னை முத்துராமலிங்க தேவர் குருபூஜையில் பாதுகாப்பு பணியில் இருந்த பெண் போலீசை கிண்டல் செய்த இருவர் கைது செய்யப்பட்டனர். நந்தனத்தில் பெண் போலீசை கிண்டல் செய்த விஜயபாண்டி, தர்மேந்திரன் ஆகியோரை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர். பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டம், ஆபாசமாகப் பேசுதல் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது

சிறுநீர் மூலம் செல்போனை சார்ஜ் செய்யலாம் – இங்கிலாந்து விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு..!

இங்கிலாந்து விஞ்ஞானிகள் சிறுநீர் மூலம் செல்போனை சார்ஜ் செய்யும் முறையை கண்டுபிடித்துள்ளனர். இங்கிலாந்தின்,பிரிஸ்டலில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் குழு மனித கழிவுகளை(யூரினை) மின்சாரமாக மாற்றும் புதிய சுத்தமான ஆற்றல் எரிபொருள் கலத்தை (battery) உருவாக்கியுள்ளது.இதன்மூலம்,செல்போன் உள்ளிட்டவற்றை சார்ஜ் செய்து கொள்ளலாம்.மேலும் அதை ஒருநாள் முழு வீடுகளுக்கும் மின்சாரம் வழங்குவதற்கு பயன்படுத்த விரும்புகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு கிளாஸ்டன்பரி திருவிழாவில் ‘பீ பவர்’ திட்டம் முதன்முதலில் பகிரங்கமாக சோதனை செய்யப்பட்டது, அங்கு விஞ்ஞானிகள் கழிப்பறைகள் நிலையான மின்சாரத்தை உருவாக்க முடியும் … Read more

இந்திரா காந்தி நினைவு நாள் : நினைவிடத்தில் ராகுல்காந்தி மரியாதை!

இந்திரா காந்தி நினைவு நாளான இன்று அவரது நினைவிடத்தில் ராகுல்காந்தி மலர் தூவி மரியாதை செலுத்தியுள்ளார். இந்தியாவின் முதல் பெண் பிரதமரான இந்திரா காந்தி அவர்கள் கடந்த 1984 ஆம் ஆண்டு அக்டோபர் 31 ஆம் தேதி சுட்டுக் கொலை செய்யப்பட்ட நிலையில், இந்திரா காந்தியின் நினைவு தினமான அக்டோபர் 31 ஆம் தேதி ஒவ்வொரு வருடமும் டெல்லி சக்தி ஸ்டால் பகுதியில் உள்ள அவரது நினைவிடத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் மரியாதை செலுத்துவது … Read more

கே.பாலகிருஷ்ணனிடம் உடல் நலம் விசாரித்த முதலமைச்சர் ..!

மாா்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் கே.பாலகிருஷ்ணன் உடல்நலம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் விசாரித்தார்.  மாா்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் கே.பாலகிருஷ்ணன் நேற்று பிற்பகல் உடல்நலம் பாதிக்கப்பட்டு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டு சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இந்நிலையில், சென்னை ராஜிவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்-ஐ சந்தித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடல்நிலை குறித்து விசாரித்தார்.

BIGG BOSS 5 : விடுங்க அக்ஷரா இதுக்கெல்லாம் அழலாமா….!

பிக் பாஸ் கொடுக்கும் டாஸ்கில் அதிகப்படியான போட்டியாளர்கள் அக்ஷராவை குறிவைத்து விளையாடியதால் அவர் கண்கலங்கியுள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவ்வப்போது ஏதாவது பிரச்சனைகள் வருவது சகஜம். தற்பொழுதும் ஒரு தட்டில் சில அட்டைகளை வைத்து ஒவ்வொருவருக்கும் போட்டியாளர்கள் மாறி மாறி கொடுத்து கொள்ளுமாறு கூறுகிறார். அந்த வகையில் அக்ஷராவுக்கு அதிக அளவில் அட்டைகள் கொடுக்கப்பட்டது. பிரியங்காவும் அக்ஷராவும் மாறி மாறி கொடுத்து கொண்டனர். நிரூப்பும் அக்ஷராவுக்கு கொடுத்ததால் அவர் அழுதுள்ளார். இதோ அந்த புரோமோ வீடியோ,   View … Read more

“தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளை,மீண்டும் தமிழகத்துடன் இணைக்க நடவடிக்கை தேவை” – பாமக நிறுவனர் ராமதாஸ்..!

நவம்பர் 1 ஆம் தேதி தமிழ்நாடு நாளாக நாளை கொண்டாடப்படும் நிலையில் தமிழ்நாட்டு மக்களுக்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளை மீண்டும் தமிழகத்துடன் இணைப்பதற்கான சட்டப்பூர்வ நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.மேலும்,இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது: “இந்தியாவில் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டு, இன்றைய தமிழ்நாடு உருவாக்கப்பட்ட நாளான நவம்பர் ஒன்றாம் தேதி தமிழ்நாடு நாளாக … Read more