பேட்டிங்கை தேர்வு செய்த நியூசிலாந்து.! கோப்பையை வெல்லும் முனைப்பில் களம் களமிறங்கும் இந்திய அணி.!

ind vs nz tosss

நியூசிலாந்தில் நடைபெற்று வரும் டி20 தொடரின் 3வது போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.  ஹார்திக் பாண்டியா தலைமையில் இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்திற்கு விளையாட சென்றுள்ளது. மூத்த வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில் இளம் வீரர்களுடன் தொடரில் இந்திய கிரிக்கெட் அணி விளையாடி வருகிறது. இதில் முதல் டி20 போட்டி மழையின் காரணமாக ரத்து செய்யப்பட்டது. இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து இன்று … Read more

#INDvNZ: இன்று 3-ஆம் நாள் ஆட்டம் தொடக்கம்..!

இன்று இந்தியா – நியூஸிலாந்து இடையேயான 3-ஆம் நாள் ஆட்டம் காலை 9:30 மணிக்கு தொடங்கவுள்ளது. இந்தியா – நியூஸிலாந்து இடையே 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் தேர்வு செய்தனர். அதன்படி முதலில் இறங்கிய இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 109.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 325 ரன்கள் எடுத்தனர். 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தி நியூசிலாந்து வீரர் அஜாஸ் பட்டேல் சாதனை படைத்தார். … Read more

காயம் காரணமாக சுப்மன் கில் களமிறங்கவில்லை – பிசிசிஐ அறிவிப்பு..!

2-வது இன்னிங்ஸில் சுப்மன் கில் காயம் காரணமாக தொடக்க வீரராக களமிறங்கவில்லை என பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்தியா – நியூஸிலாந்து இடையே 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. முதலில் இறங்கிய இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 325 ரன்கள் எடுத்தனர். நியூசிலாந்து வீரர் அஜாஸ் பட்டேல் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தி சாதனை படைத்தார். இதைத்தொடர்ந்து, தனது முதல் இன்னிங்ஸில் தொடங்கிய … Read more

#INDvNZ: 2-ஆம் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 332 ரன்கள் முன்னிலை..!

இந்திய அணி 21 ஓவர் முடிவில் விக்கெட்டை இழக்காமல் 332 ரன்கள் முன்னிலையுடன் உள்ளது. இந்தியா – நியூஸிலாந்து இடையே 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் தேர்வு செய்தனர். அதன்படி முதலில் இறங்கிய இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 109.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 325 ரன்கள் எடுத்தனர். 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தி நியூசிலாந்து வீரர் அஜாஸ் பட்டேல் சாதனை படைத்தார். இதைத்தொடர்ந்து, … Read more

#INDvNZ: 8 விக்கெட்டை இழந்து தடுமாறும் நியூசிலாந்து..!

நியூசிலாந்து அணி 21 ஓவரில் 8 விக்கெட்டை இழந்து 54 ரன் எடுத்துள்ளது.  இந்தியா – நியூஸிலாந்து இடையே 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தனர். அதன்படி இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 109.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 325 ரன்கள் எடுத்தனர். இந்திய அணியின் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தி நியூசிலாந்து வீரர் … Read more

இந்தியாவை திணறவைத்த இந்திய வம்சாவளி ; 325 ரன்களுக்கு ஆல்அவுட்..!

இறுதியாக இந்திய அணி 109.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 325 ரன்கள் எடுத்தனர். இந்தியா – நியூஸிலாந்து இடையே 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தனர். அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரர்கள் மயங்க் அகர்வால் மற்றும் சுப்மான் கில் ஆகியோர் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 80 ரன்கள் … Read more

2ndTest: முதல் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 221 ரன்கள் குவிப்பு..!

முதல் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 70 ஓவர் முடிவில் 4 விக்கெட்டை இழந்து 221 ரன்கள் சேர்த்தனர். இந்தியா – நியூஸிலாந்து இடையே 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தனர். அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரர்கள் மயங்க் அகர்வால் மற்றும் சுப்மான் கில் ஆகியோர் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். இருவரும் இணைந்து … Read more

சர்ச்சைக்குள்ளான விராட் அவுட் – நடுவர்கள் மீது ரசிகர்கள் பாய்ச்சல்..!

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரின் முதல் இன்னிங்சில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி சர்ச்சைக்குரிய வகையில் ஆட்டமிழந்தார். மும்பை வான்கடே மைதானத்தில் இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தனர். அதன்படி இந்தியா தனது  முதல் இன்னிங்சை தொடங்கியது. இந்திய அணிக்கு மயங்க் அகர்வால் மற்றும் சுப்மான் கில் ஆகியோர் சிறப்பான தொடக்கத்தை அளித்தனர். இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு … Read more

நாளை 2-வது டெஸ்ட்: கோலி தலைமையில் களமிறங்கும் இந்திய படை..!

நாளைய 2-வது டெஸ்ட் போட்டி காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் தற்போது செய்து விளையாடி வருகிறது. இந்தியா -நியூசிலாந்து ஆகிய இரு அணிகள் இடையே 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்று வருகிறது. முதலில் நடைபெற்ற 20 ஓவர் தொடரை இந்தியா 3-0 என்ற கணக்கில் ஒயிட் வாஷ் செய்து தொடரை கைப்பற்றியது. இதைத்தொடர்ந்து, 2 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் கான்பூரில் நடந்த முதல் … Read more

#INDvNZ: இன்று 4-ஆம் நாள் ஆட்டம் தொடக்கம்..!

இன்று 4-ஆம் நாள் ஆட்டம் காலை 9;30 மணிக்கு தொடங்கவுள்ளது. இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையே முதல் டெஸ்ட் போட்டி கடந்த 25-ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று இந்தியா முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. முதல் நாள் ஆட்ட இறுதியில் 84 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 258 ரன்களை இந்தியா எடுத்திருந்தது. தொடர்ந்து 2-ஆம் நாள் விளையாடிய இந்தியா தனது முதல் இன்னிங்சில் 111.1 ஓவர் முடிவில் அனைத்து … Read more