வேறு சமூகத்தை சேர்ந்த இளைஞரை திருமணம் செய்து கொண்டதால்,பெண்ணுக்கு பெற்றோர் செய்த சடங்கு..!

மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த ஒரு பெண் வேறு சமூகத்தை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்ததால்,நர்மதா நதியில் குளிக்க செய்து, ‘தூய்மைப்படுத்துதல்’ சடங்கின் போது அவரது தலைமுடி வெட்டப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. மத்தியப் பிரதேசத்தின் பெதுலில் உள்ள ஒரு இளம் பெண்,வேறு சமூகத்தைச் சேர்ந்த ஒருவருடன் திருமணம் செய்து கொண்டதால், அவரது குடும்பத்தினரால் ‘தூய்மைப்படுத்துதல்’ சடங்கு செய்ய வற்புறுத்தப்பட்டார். அச்சடங்கின் போது,அவரது தலைமுடி வெட்டப்பட்டு,பின்னர் நதியில் குளிக்க வைக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்தது,ஆனால் அந்த … Read more

புதிய கல்விக்கொள்கை அமல்படுத்தப்படமாட்டாது- எம்.பி கனிமொழி..!

தமிழ்நாட்டில் புதிய கல்விக்கொள்கை அமல்படுத்தப்பட மாட்டாது என எம்.பி  கனிமொழி தெரிவித்தார். சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மார்பக பரிசோதனை முகாமின் நிறைவு விழா இன்று நடைபெற்றது. இதில் எம்.பி  கனிமொழி கலந்து கொண்டார். விழாவில் பேசிய எம்.பி  கனிமொழி , ஒரு மாதம் நடைபெற்ற இந்த முகாமில் 650 பெண்களுக்கு மார்பக பரிசோதனை செய்யப்பட்டு 22 பேருக்கு புற்றுநோய் கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறினார். அப்போது, தமிழ்நாட்டில் புதிய கல்விக்கொள்கை அமல்படுத்தப்பட … Read more

உத்தரகாண்ட் சாலை விபத்து – உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு பிரதமர் நிதி உதவி அறிவிப்பு!

உத்தரகாண்ட் சாலை விபத்தில் உயிரிழந்த 12 பேரின் குடும்பத்திற்கும், காயமடைந்தவர்களுக்கும் பிரதமர் நிதி உதவி அறிவித்துள்ளார். உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள டேராடூன் மாவட்டத்தின் சக்ராட்டா தெஹ்சில் எனும் இடத்தில் வந்து கொண்டிருந்த பேருந்து திடீரென பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாக்கியது. இந்த பயங்கரமான சாலை விபத்தில் 12 பேர் உயிரிழந்து உள்ளனர். மேலும் இந்த விபத்தில் 4 பேர் படுகாயமடைந்தனர். இந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு உத்தரகாண்ட் முதல்வர் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 2 … Read more

#T20WorldCup: முகமது ஷாஜாத் அதிரடி……நமீபியா அணிக்கு 161 ரன்கள் இலக்கு..!

ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் எடுத்துள்ள நிலையில்,நமீபியாவுக்கு 161 ரன்கள் இலக்கு. கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை போட்டியின் சூப்பர் 12 குரூப் சுற்றின் இன்றைய தினத்தில் ஆப்கானிஸ்தான் மற்றும் நமீபியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகிறது. இப்போட்டியானது அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் மைதானத்தில் இன்று மதியம் 3.30 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.அதன்படி, போட்டிக்கு முன்னதாக டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் … Read more

தலிபான்களின் ஆட்சியை அங்கீகரிக்காவிட்டால் கடும் விளைவுகள் ஏற்படும் – தலிபான்கள் எச்சரிக்கை!

தலிபான்களின் ஆட்சியை உலக நாடுகள் அங்கீகரிக்காவிட்டால் கடும் விளைவுகள் ஏற்படும் என தலிபான்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் கடந்த ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி முதல் தலிபான்கள் நாட்டை கைப்பற்றிய நிலையில், அந்நாட்டில் உள்ள பிற நாட்டு மக்கள் மற்றும் அந்த நாட்டை சேர்ந்த பலர் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறி உள்ளனர். இந்நிலையில் தொடர்ச்சியாக அந்நாட்டில் பெண்களுக்கு எதிரான சட்டங்கள் மறுக்கப்பட்டு வரும் நிலையில், பல்வேறு உலக நாடுகளும் ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட தலிபான்கள் ஆட்சிக்கு எதிர்ப்பு … Read more

ஒன்றரை ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் இயங்கும் முனையம்..!

இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் மீண்டும் முதலாவது முனையம் இயங்கத்தொடங்கியது. டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் முதலாவது முனையம் 18 மாதங்களுக்குப் பின் மீண்டும் இயங்கத் தொடங்கியுள்ளது. கொரோனா காரணமாக டெல்லி விமான நிலையத்தில் முதலாவது முனையம் கடந்த 18 மாதங்களாக  மூடப்பட்டிருந்தது. இந்நிலையில், டெல்லி விமான நிலையத்தில் முதலாவது முனையம் மீண்டும் செயல்படத் தொடங்கியது. இதன் காரணமாக விமான பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

14 மாவட்டங்களில் பட்டாசு விற்க, வெடிக்க தடை – ஹரியானா அரசு!

ஹரியானா மாநிலத்திலுள்ள 14 மாவட்டங்களில் பட்டாசுகளை விற்கவும், வெடிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. வருகிற நவம்பர் மாதம் நான்காம் தேதி நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், பல்வேறு மாநிலங்களில் இது தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தற்போது முதல் எடுக்கப்பட்டு வருகிறது. ஒருசில மாநிலங்களில் பட்டாசுகளை வெடிப்பதற்கு கால நேரங்கள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், சில மாநிலங்களில் பட்டாசுகளுக்கு முற்றிலுமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ஹரியானாவில் பட்டாசுகள் வெடிப்பதற்கு அனுமதி கொடுக்கப்பட்டிருந்தாலும் டெல்லிக்கு அருகிலுள்ள பிவானி, … Read more

BIGG BOSS 5 : உங்களுக்கு வந்தது தன்மான கோவம் கூட கிடையாது…!

உடை பற்றி எழுந்த விமர்சனம் குறித்து கமல் சார் தாமரையிடம் கேள்வி கேட்பது தொடர்பான வீடியோ மூன்றாவது ப்ரோமோவில் காண்பிக்கப்பட்டுள்ளது. பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சி கடந்த 28 நாட்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் வார இறுதி நாட்களான இன்று கமல் சார் போட்டியாளர்களிடம் பேசியுள்ளார். அப்பொழுது போட்டியில் இடையில் நடந்த பட்டிமன்றத்தில் பேசப்பட்ட உடையை குறித்த விமர்சனம் குறித்து தாமரைச்செல்வி மற்றும் சிபியிடம் கமல் சார் கலந்துரையாடுவது மூன்றாவது ப்ரோமோவில் … Read more

தமிழ்நாடு நாள்:”குழந்தை என்று பிறந்ததோ அன்றுதான் பிறந்தநாள்” – ஓபிஎஸ் கண்டனம்…!

ஜூலை 18-ம் தேதி ‘தமிழ்நாடு நாள்’ என்ற அறிவிப்பை திரும்பப்பெற வேண்டும் என்று ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். ஜூலை 18 ஆம்‌ நாள்‌ தமிழ்நாடு நாளாக இனிக்‌ கொண்டாட விரைவில் அரசாணை வெளியிடப்படும்‌ என்று முதல்வர் ஸ்டாலின் நேற்று அறிவித்த நிலையில்,இதற்கு கண்டனம் தெரிவித்து ஒரு குழந்தை என்றைக்குப் பிறக்கின்றதோ அந்த நாள்‌தான்‌ பிறந்த நாளாக கொண்டாடப்பட வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். மேலும்,இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: “தமிழ்நாடு என பெயர்‌ … Read more

தங்க மகன் நீரஜ் சோப்ராவுக்கு,XUV700 காரை பரிசளித்த ஆனந்த் மஹிந்திரா..!

டோக்கியோ ஒலிம்பிக்ஸில் தங்கப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு, மஹிந்திரா XUV700 காரை ஆனந்த் மஹிந்திரா நிறுவனம் பரிசளித்துள்ளது. டோக்கியோ ஒலிம்பிக்ஸ் 2020 ஈட்டி எறிதல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்ற ஒலிம்பிக் தங்கமகன் நீரஜ் சோப்ராவுக்கு மஹிந்திரா நிறுவனம் தனது XUV700 மாடல் காரை பரிசாக வழங்கியுள்ளது. இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நீரஜ் சோப்ரா காருடன் உள்ள புகைப்படத்தை பகிர்ந்து கூறியதாவது:”சில சிறப்பான தனிப்பயனாக்கலுடன் உள்ள புதிய … Read more