பெண்களுக்கு மாதம் ரூ.3000.. ரூ.10 லட்சம் வைப்பு தொகை… பாமக தேர்தல் வாக்குறுதிகள்…

PMK Anbumani Ramadoss

PMK : 40 வாக்குறுதிகள் அடங்கிய தேர்தல் வாக்குறுதிகளை பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் மக்களவைத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி, பாஜக தலைமையிலான கூட்டணியில் தேர்தலை சந்திக்கிறது. பாஜக கூட்டணியில் பாமக 10 தொகுதிகளில் போட்டியிடுகிறது. பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மனைவி சௌமியா அன்புமணி தர்மபுரியிலும், இயக்குனர் தங்கர்பச்சான் கடலூர் தொகுதியிலும் போட்டியிடுகிறார்கள். வேட்பாளர்கள் அறிவிப்பு, வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் நிறைவு செய்யப்பட்டதை அடுத்து, தற்போது பாமகவின் தேர்தல் வாக்குறுதிகளை பாமக … Read more

மக்களவை தேர்தல்… கூட்டணி குறித்து முக்கிய தீர்மானங்கள்.. பாமக அறிவிப்பு.!

PMK Leader Ramadoss

இன்று சென்னை எழும்பூரில் ராணி மெய்யம்மை அரங்கில் பாமக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் பாமக நிறுவுனர் டாக்டர் ராமதாஸ் , பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், ஜி.கே.மணி உள்ளிட்ட பல்வேறு முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர். வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாமக தனித்து போட்டியிடுகிறதா.? கூட்டணி அமைத்து போட்டியிடுகிறதா.?  எந்த கட்சியுடன் கூட்டணி உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் ஆலோசிக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில்  முக்கிய தீர்மானத்தை பாமக முக்கிய நிர்வாகி ஜி.கே.மணி கூறினார். பொதுக்குழு … Read more

டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 தேர்வு எழுத வயது வரம்பு 40ஆக உயர்த்த வேண்டும்.! – ராமதாஸ் வேண்டுகோள்.!

டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 தேர்வுக்கான வயது வரம்பை 40 ஆக உயர்த்த வேண்டும். டாக்டர் ராமதாஸ் கோரிக்கை. தமிழ்நாடு தேர்வாணையத்தால் நடத்தப்படும் , குரூப் 1 தேர்வுக்கு வயது வரம்பு தற்போது 21 முதல் 37வயது (எஸ்.சி/எஸ்.டி , எம்.பி.சி மற்றும் இதர பிரிவுக்கு ) வரை என நிர்ணயம் செய்யப்பட்டு தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனை உயர்த்த பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், வேண்டுகோள் விடுத்துள்ளார். அதாவது, டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 தேர்வுக்கான வயது வரம்பை … Read more

“பாட்டாளி சொந்தங்களே…நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்;வெற்றிகளை குவித்தாக வேண்டும்” – ராமதாஸ் அறிவுறுத்தல்!

விரைவில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ள 12,820 இடங்களிலும் பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர்கள் களமிறக்கப்பட வேண்டும் என்றும், வெற்றிக்காக கடுமையாக உழைக்க வேண்டும் என்றும் தனது கட்சியினருக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவுறுத்தியுள்ளார். தமிழகத்தில் உள்ளாட்சிகளில் நல்லாட்சியை பாமகவால் தான் வழங்க முடியும்.நகர்ப்புற உள்ளாட்சிகளின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்காக  தமிழகத்தை தற்போது ஆட்சி செய்யும் திமுக அரசின் தவறுகள்,தோல்விகள், முந்தைய அதிமுக அரசின் மீதான விமர்சனங்கள்,எதிர்க்கட்சியாக மக்கள் பணியாற்றத் தவறியது ஆகியவற்றை மக்கள் மன்றத்தில் முன்வைத்து … Read more

“7,000 பேர் வாழ்வாதாரம் இழப்பார்கள்…திமுக அரசு,மக்களின் பக்கமா?;மத்திய அரசின் பக்கமா?” – டாக்டர். ராமதாஸ் கேள்வி!

சென்னை & சேலம் பசுமை வழிச் சாலைத் திட்டம் செயல்படுத்தப் பட்டால் 7,000 விவசாயக் குடும்பங்கள் வாழ்வாதாரங்களை இழப்பார்கள் எனவும்,இந்த 8 வழி பசுமைச்சாலை திட்டத்தை தமிழக அரசு அனுமதிக்கக்கூடாது எனவும் பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். சென்னை & சேலம் இடையிலான எட்டு வழி பசுமைச் சாலைத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான பணிகளை மத்திய அரசு மீண்டும் தொடங்கி விட்டதாக வெளியாகியுள்ள செய்திகள் கவலையளிக்கின்றன என்றும்,இத்திட்டத்தை தமிழக அரசு அனுமதிக்கக்கூடாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். … Read more

“மன உளைச்சலை கோடி ரூபாய் கொடுத்தாலும் போக்க முடியாது” – டாக்டர் ராமதாஸ் குற்றச்சாட்டு!

வட்டாரக்கல்வி அலுவலர் பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பை இந்த மாத இறுதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாடு வட்டாரக் கல்வி அலுவலர் பணிக்கான தேர்வுப் பட்டியல் இன்னும் வெளியிடப்படாததால்,அந்தத் தேர்வை எழுதியவர்கள் மற்ற பணிக்கான தேர்வுகளை எழுதுவது குறித்து முடிவெடுக்க முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கின்றனர் என்றும்,அதனால் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் மன உளைச்சலை கோடி ரூபாய் கொடுத்தாலும் போக்க முடியாது என்றும் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் … Read more

“ஆசிரியர் சமூகத்திற்கே அவப்பெயர்;நிர்வாகத்தினரை கைது செய்ய வேண்டும்”- பாமக நிறுவனர் ராமதாஸ் ஆவேசம்!

பாலியல் குற்றங்களை தடுக்காமலும், உடந்தையாகவும் இருந்த பள்ளி நிர்வாகத்தில் உள்ள அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். கோவையை சேர்ந்த 17 வயது மாணவி ஒருவர் ஆர்எஸ் புரம் பகுதியில் உள்ள சின்மயா வித்யாலயா என்ற தனியார் பள்ளியில் 11-ஆம் வகுப்பு வரை படித்திருந்தார். இதனை அடுத்து,அவர் அரசுப்பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்துள்ளார். இந்த நிலையில்,அவர் நேற்று தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கதவை உள்பக்கமாக தாழ்ப்பாள் போட்டுக் கொண்டு, … Read more

“தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளை,மீண்டும் தமிழகத்துடன் இணைக்க நடவடிக்கை தேவை” – பாமக நிறுவனர் ராமதாஸ்..!

நவம்பர் 1 ஆம் தேதி தமிழ்நாடு நாளாக நாளை கொண்டாடப்படும் நிலையில் தமிழ்நாட்டு மக்களுக்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளை மீண்டும் தமிழகத்துடன் இணைப்பதற்கான சட்டப்பூர்வ நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.மேலும்,இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது: “இந்தியாவில் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டு, இன்றைய தமிழ்நாடு உருவாக்கப்பட்ட நாளான நவம்பர் ஒன்றாம் தேதி தமிழ்நாடு நாளாக … Read more

“பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் பெட்ரோ கெமிக்கல் மண்டலமா?” – பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம்..!

நாகப்பட்டினம் பகுதியில் பெட்ரோ கெமிக்கல் மண்டலம் அமைக்கும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் பெட்ரோ கெமிக்கல் மண்டலமா? காவிரி டெல்டாவை சிதைத்து விடக் கூடாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். மேலும்,இது தொடர்பாக அவர் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது: “காவிரி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் பல்லாயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் பெட்ரோ கெமிக்கல் மண்டலம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக … Read more

மின் வாரியத்தை லாபத்தில் இயக்குவதற்கான திட்டம் என்ன? – அரசுக்கு ராமதாஸ் கேள்வி!

மின்வாரியத்தை லாபத்தில் இயக்குவதற்கான திட்டம் என்ன? வெள்ளை அறிக்கை தேவை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை. இதுதொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆந்திராவைச் சேர்ந்த மின் நிறுவனங்கள் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் மின்சாரத்தை விலை குறைத்து வாங்கியதன் மூலம் மிச்சப்படுத்திய ரூ.126 கோடியை நுகர்வோருக்கு திருப்பி அளிக்க முடிவு செய்திருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் மிகவும் மகிழ்ச்சியளிக்கின்றன. இந்தியாவில் மின் நிறுவனங்கள் ஒரு தொகையை மிச்சப்படுத்தி, அதை வாடிக்கையாளர்களுக்கு பகிர்ந்தளிப்பது இதுவே முதல் … Read more