புதுச்சேரி தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை!

புதுச்சேரில் மூன்று கட்டமாக நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை. புதுச்சேரி உள்ளாட்சி தேர்தலில் வார்டுகள் ஒதுக்கீடு தொடர்பான குறைபாடுகளை நிவர்த்தி செய்யாவிட்டால் தேர்தலுக்கு தடை விதிக்க நேரிடும் என்று புதுச்சேரி தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனிடையே, புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 2006ஆம் ஆண்டு உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றதை அடுத்து, 15 ஆண்டுகளுக்கு பிறகு புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தல் தேதியை மாநில தேர்தல் ஆணையம் … Read more

மதுப்பிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு…இந்த தேதிகளில் டாஸ்மாக் கடைகள் அடைப்பு – டாஸ்மாக் மேலாண் இயக்குநர் உத்தரவு …!

காந்தி ஜெயந்தி,மிலாடி நபியன்று டாஸ்மாக் கடைகள் அடைக்க அனைத்து மண்டல, மாவட்ட மேலாளர்களுக்கு டாஸ்மாக் மேலாண் இயக்குநர் உத்தரவு பிறப்பித்துள்ளார். காந்தி ஜெயந்தியை முன்னிட்டு வருகின்ற அக்டோபர் 2 ஆம் தேதி மற்றும் மிலாடி நபியை முன்னிட்டு அக்டோபர் 19 ஆம் தேதியும் டாஸ்மாக் கடைகள் அடைக்கப்படும் என டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும்,இது தொடர்பாக அனைத்து மண்டல, மாவட்ட மேலாளர்களுக்கு டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.அதில் கூறப்பட்டுள்ளதாவது:”வருகின்ற 02.10.2021 அன்று காந்தி … Read more

8 மாத குழந்தையை ரூ.3 லட்சத்திற்கு விற்ற தாய்…! போலீசார் தீவிர விசாரணை…!

தூத்துக்குடியில் 8 மாத குழந்தையை ரூ.3 லட்சத்திற்கு ஜெபமலர் என்ற பெண் விற்பனை செய்துள்ளார்.  கடந்த 2019-ஆம் ஆண்டு, விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த மணிகண்டனுக்கு (38), தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ஜெபமலருக்கும் (27) திருமணம் ஆகியுள்ளது. இவர்களுக்கு கடந்த 8 மாதங்களுக்கு முன்பதாக ஒரு ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில், கணவன், மனைவி இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, ஜெபமலர் அவரது குழந்தையை கூட்டிக் கொண்டு, தூத்துக்குடிக்கு வந்துள்ளார். இங்கு வந்த அவர் குழந்தையை, … Read more

இந்திய விமானப்படை தளபதியாக வி.ஆர்.சவுதாரி பதவியேற்றார்!!

டெல்லியில் இந்திய விமானப்படையின் புதிய தளபதியாக விவேக் ராம் சவுதாரியா பதவியேற்றுக்கொண்டார். இந்திய விமானப்படை தளபதி ஆர்.கே.எஸ்.பதவுரியா இன்றுடன் ஓய்வு பெறுவதால், புதிய தளபதியாக விவேக் ராம் சவுத்ரி கடந்த 25ஆம் தேதி நியமிக்கப்பட்டார். ஏற்கனவே, விவேக் ராம் சவுத்ரி விமானப் படையின் துணைத் தளபதியாக இருந்து வந்த நிலையில், புதிய தளபதியாக நியமனம் செய்வதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், விமானப்படை தளபதி ஆர்.கே.எஸ்.பதவுரியா ஓய்வு பெற்றதை அடுத்து, டெல்லியில் இந்திய விமானப்படையின் புதிய தளபதியாக விவேக் … Read more

பிசாசு 2 படத்திலிருந்து வெளியான புதிய புகைப்படங்கள்.!

பிசாசு 2 படத்திலிருந்து வெளியான புதிய புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.  இயக்குனர் மிஸ்கின் இயக்கத்தில் கடந்த 2011-ம் ஆண்டு வெளியான திரைப்படம் பிசாசு. இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று நல்ல வசூல் சாதனை செய்தது. முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் மிஸ்கின் இரண்டாம் பாகத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் நடிகை ஆண்ட்ரியா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், ராஜ்குமார் பிச்சுமணி, பூர்ணா, அஜ்மல் அமீர், சந்தோஷ் பிரதாப், விஜய் சேதுபதி … Read more

தமிழகத்தில் “வீடு தேடி பள்ளிகள்” – பள்ளிக்கல்வித்துறையின் புதிய திட்டம்…!

தமிழகத்தில் “வீடு தேடி பள்ளிகள்” என்ற புதிய திட்டத்தை பள்ளிக்கல்வித்துறை அறிமுகப்படுத்தவுள்ளது. தமிழகத்தில் நவம்பர் 1-ஆம் தேதி முதல் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் அறிவித்திருந்தார். இந்த நிலையில்,தமிழகத்தில் உள்ள மழலையர் மற்றும் 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கற்றல் இடைவெளியை போக்க வீடுகளுக்கே சென்று பாடம் நடத்தும் புதிய திட்டத்தை பள்ளிக் … Read more

ஓய்வை அறிவித்த இந்திய ஹாக்கி வீரர் ரூபிந்தர் பால் சிங்..!

டோக்கியோ ஒலிம்பிக் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய ஹாக்கி அணியின் நட்சத்திர வீரர் ரூபிந்தர் பால் சிங் தனது ஓய்வை அறிவித்தார்.  1980-க்குப் பிறகு இந்திய ஆடவர் ஹாக்கி அணி சமீபத்தில் நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் வெண்கலம் வென்று சாதனை படைத்தது. இந்நிலையில், ஒலிம்பிக்கில் 41 ஆண்டுகளுக்குப் பிறகு பதக்கம் வென்ற இந்திய அணியில் இருந்த இந்திய ஹாக்கி வீரர் ரூபிந்தர் பால் சிங் இளைஞர்களுக்கு வழி வகுக்கும் முயற்சியாக சர்வதேச ஹாக்கியில் இருந்து ஓய்வு … Read more

“எனக்கு வந்த வேண்டுகோள்;இதற்கு முதல்வர் வழிவகை செய்ய வேண்டும்” – ஓபிஎஸ் கோரிக்கை….!

மதுரையில் பெண்பாற்புலவர் இளவெயினிக்கு நூலகத்தோடு கூடிய முழு உருவச் சிலை தாங்கிய நினைவு மண்டபத்தை நிறுவ வேண்டும் என்று ஓபிஎஸ் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழுக்குப் பெருமை சேர்க்கும் வகையில்,பெண்பாற் புலவர் குறமகள் இளவெயினி அவர்களுக்கு மதுரையில் நூலகத்துடன் கூடிய முழு உருவச்சிலை தாங்கிய நினைவு மண்டபத்தை அமைக்க முதல்வர் ஸ்டாலின் வழிவகை செய்ய வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும்,இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சங்ககால மன்னர்களால் போற்றப்பட்டவர்: “சங்ககாலத்தில், … Read more

வேளாண்மை பல்கலை.யில் பட்டயப் படிப்பு மாணவர் சேர்க்கை-நாளை முதல் விண்ணப்பம்..!

இந்த ஆண்டிற்கான வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் வேளாண் பொறியியல் பட்டயப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நாளை தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் சார்பில் வெளியிட்டுப்பட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் நான்கு உறுப்புக் கல்வி நிலையங்களிலும், மூன்று அரசு இணைப்பு கல்வி நிலையங்களிலும் மற்றும் பத்து தனியார் இணைப்பு கல்வி நிலையங்களிலும் பயிற்றுவிக்கப்படுகின்றது. வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் வேளாண் பொறியியல் பட்டயப் படிப்புகளுக்கான 2021-2022 ஆம் வருடத்திற்கான … Read more

உள்ளாட்சி தேர்தல் பாதுகாப்பு – தமிழக அரசு பதில்தர உயர்நீதிமன்றம் உத்தரவு!

உள்ளாட்சி தேர்தலை நடத்துவதில் தமிழகம் முன்மாதிரி மாநிலமாக திகழ வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல். தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு வரும் 6 மற்றும் 9ம் தேதிகளில் இரண்டு கட்டமாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, தேர்தல் நடத்தும் பணியில் மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், உள்ளாட்சி தேர்தலில் எந்த புகாரும் இல்லாத வகையில் என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன … Read more