இந்திய விமானப்படை தளபதியாக வி.ஆர்.சவுதாரி பதவியேற்றார்!!

டெல்லியில் இந்திய விமானப்படையின் புதிய தளபதியாக விவேக் ராம் சவுதாரியா பதவியேற்றுக்கொண்டார்.

இந்திய விமானப்படை தளபதி ஆர்.கே.எஸ்.பதவுரியா இன்றுடன் ஓய்வு பெறுவதால், புதிய தளபதியாக விவேக் ராம் சவுத்ரி கடந்த 25ஆம் தேதி நியமிக்கப்பட்டார். ஏற்கனவே, விவேக் ராம் சவுத்ரி விமானப் படையின் துணைத் தளபதியாக இருந்து வந்த நிலையில், புதிய தளபதியாக நியமனம் செய்வதாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், விமானப்படை தளபதி ஆர்.கே.எஸ்.பதவுரியா ஓய்வு பெற்றதை அடுத்து, டெல்லியில் இந்திய விமானப்படையின் புதிய தளபதியாக விவேக் ராம் சவுதாரியா பதவியேற்றுக் கொண்டார். விமானங்களை இயக்குவதில் வல்லவரான இவர், 39 ஆண்டு கால அனுபவம் கொண்டவர். கடந்த 1982ஆம் ஆண்டு டிசம்பரில், சவுத்ரி இந்திய விமானப் படையில் போர் விமானியாக சேர்ந்தார்.

இந்திய விமானப்படையில் மிக்-21, மிக்-23 எம்எப், மிக் 29, சுகோய் 30 எம்கேஐ உள்ளிட்ட பல்வேறு போர் விமானங்களை இயக்கிய இவர், 3,800 மணி நேரத்துக்கு மேல் விமானங்களை இயக்கிய அனுபவம் கொண்டவர் என்பது குறிப்பிடப்படுகிறது. மேலும், இந்திய விமானப் படையின் துணைத் தளபதியாக ஏர் மார்ஷல் சந்தீப் சிங் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்