#CoronaUpdate : இந்தியாவில் மீண்டும் 40 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு…!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 41,965 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இறப்பு எண்ணிக்கை 460 ஆக பதிவாகியுள்ளது, இதுவரையிலும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,28,10,845 ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 41,965 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது நேற்றைய பாதிப்பை விட 11,024 அதிகம். கொரோனாவால் நாடு முழுவதும் இதுவரை 3,28,10,845 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் கடந்த 24 மணி நேரத்தில் இறப்பு எண்ணிக்கை 460 ஆக பதிவாகியுள்ளது. இதுவரை இந்தியாவில் … Read more

#BREAKING: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மனைவி காலமானார்!

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மனைவி விஜயலட்சுமி ஜெம் மருத்துவமனையில் மாரடைப்பால் காலமானார். அதிமுக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் மனைவி விஜயலட்சுமி மாரடைப்பால்  (வயது 63) இன்று காலை காலமானார். எதிர்க்கட்சி துணை தலைவர் ஒபிஎஸ்-யின் மனைவிக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், சென்னை பெருங்குடியில் உள்ள ஜெம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஜயலட்சுமி உயிரிழந்தார். கடந்த இரண்டு வாரங்களாகவே அவர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

சிலிண்டர் விலை உயர்வு : மக்களே! உப்பு தின்னால் தண்ணீர் குடிக்கணும்! – பீட்டர் அல்போன்ஸ்

சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் ட்வீட். செப்.1-ஆம் தேதியான இன்று, சிலிண்டர் விலை மீண்டும் ரூ.25 அதிகரித்து, ரூ.900-க்கு விற்பனையாகிறது. இந்த ஆண்டில் மட்டும் கேஸ் சிலிண்டர் விலை ரூ.285 அதிகரித்துள்ளது. அதன்படி சென்னையில் சமையல் எரிவாயு சிலிண்டர் 900 ரூபாய் 50 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து, தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் அவர்கள் தனது ட்விட்டர் … Read more

இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சி செய்தி…! அதிரடியாக உயர்ந்த சிலிண்டர் விலை…!

கேஸ் சிலிண்டர் விலை ரூ.25 அதிகரித்து, ரூ.900-க்கு விற்பனையாகிறது. எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் டீசல் விலைகளை தினசரி மாற்றி அமைத்து வருகிறது. அந்த வகையில் சமையல் எரிவாயுவின் விலை மாதத்திற்கு ஒரு முறை அல்லது இரு முறை மாற்றி அமைக்கப்படுகிறது. அதன்படி, கடந்த ஆகஸ்ட் மாதம் சிலிண்டர் விலை  ரூ.875 ஆக அதிகரித்தது. இந்நிலையில், செப்.1-ஆம் தேதியான இன்று, சிலிண்டர் விலை மீண்டும் ரூ.25 அதிகரித்து, ரூ.900-க்கு விற்பனையாகிறது. இந்த ஆண்டில் மட்டும் கேஸ் சிலிண்டர் விலை … Read more

மங்காத்தா படத்தில் முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா.??

மங்காத்தா படத்தில் அர்ஜுனுக்கு பதிலாக முதலில் நடிக்க இருந்தவர் குறித்த தகவல் தற்போது கிடைத்துள்ளது.  இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் கடந்த 2011-ம் ஆண்டு ஆகஸ்ட் 31-ஆம் தேதி வெளியான திரைப்படம் மங்காத்தா. இது, தல அஜித்தின் 50-வது படமாகும். இப்படம் மாபெரும் வெற்றியை பெற்று நல்ல வசூல் சாதனை செய்தது . இந்த படத்தில் அர்ஜூன்,திரிஷா உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். அதிலும் தல அஜித் இந்த படத்தில் வில்லனாக நடித்து அசத்தி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த  … Read more

கர்நாடக இசை கலைஞர் செம்பை வைத்தியநாத பாகவதர் பிறந்த தினம் இன்று…!

கர்நாடக இசை கலைஞர் செம்பை வைத்தியநாத பாகவதர் பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது.  1896 ஆம் ஆண்டு செப்டம்பர் 1-ஆம் தேதி கேரள மாநிலத்தில் உள்ள பாலக்காடு பகுதியில் செம்பை எனும் கிராமத்தில் பிறந்தவர் தான் செம்பை வைத்தியநாத பாகவதர். இவர் கர்நாடக இசை உலகில் 70 ஆண்டுகள் புகழ் பெற்றவராக திறந்துள்ளார். தஞ்சை இசை விழா, கரூர் சங்கீத திருவிழா என பல இடங்களில் இவருக்கு கச்சேரி நடத்தக் கூடிய வாய்ப்பு கிடைத்துள்ளது. எனவே இவர் … Read more

மாணவர்கள் பேருந்துகளில் இன்று முதல் கட்டணமின்றி பயணிக்கலாம்..!

இன்று முதல் பேருந்துகளில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இலவசமாக பயண அட்டை வழங்கப்படும் வரை இலவசமாக பயணிக்கலாம் . தமிழகத்தில் இன்று முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக பயண அட்டை வழங்கப்படும் வரை பள்ளி சீருடை அணிந்து பேருந்தில் இலவசமாக பயணிக்கலாம். பள்ளி, கல்லூரிகளில் வழங்கப்படும் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை காண்பித்து மாணவர்கள் இலவசமாக பயணிக்கலாம் என போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவித்துள்ளார். இதுகுறித்து வெளியாகியுள்ள … Read more

இன்றைய (01.09.2021) நாளின் ராசி பலன்கள்..!

மேஷம்: இன்று முக்கியமான முடிவுகள் எடுப்பதை வேறு நாளைக்கு தள்ளிப் போடவும்.மனதில் நல்லதையே நினையுங்கள். ரிஷபம்: இன்று பொறுமையுடன் இருப்பதன் மூலம் வெற்றி காணலாம்.நீங்கள்செய்யும் எந்த செயலிலும் உறுதியுடன் இருக்க வேண்டும். மிதுனம்: இன்றைய நாள் அவ்வளவு சாதகமாக இருக்காது.இன்று அமைதியுடன் மனதில் மகிழ்ச்சியாக இருக்க வேண்டியது அவசியம். கடகம் : இன்று ஆக்கப்பூர்வமான நாளாக இருக்கும்.நண்பர்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும்.இன்று உற்சாகமாக இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. சிம்மம்: இன்றைய நாள் போற்றத்தக்க நாளாக இருக்கும்.உங்கள் நேர்மையான … Read more

தமிழகத்தில் இன்று முதல் பள்ளிகள், கல்லூரிகள் திறப்பு..!

தமிழகத்தில் இன்று முதல் 9, 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பள்ளிகள் மற்றும் கல்லூரிகளும் திறக்கப்படுகிறது. கொரோனா தொற்று இரண்டாம் அலை காரணமாக தமிழ்நாட்டில் கடந்த மே மாதம் முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. தற்போது வரும் வரும்15ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை காரணமாக நடப்பாட்டிற்கான வகுப்புகள் நேரடியாக நடைபெறாமல் பள்ளி, கல்லுாரிகள் மூடப்பட்டு ஆன்லைன் … Read more