#BREAKING: பேரறிவாளன் கருணை மனு – மாநில தகவல் ஆணையம் பதிலளிக்க உத்தரவு..!

பேரறிவாளன் கருணை மனு தொடர்பாக மாநில தகவல் ஆணையம் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாக உள்ள பேரறிவாளன் 2019-ல் ஆளுநருக்கு கருணை மனு அனுப்பியுள்ளார். அந்த மனுவில் தன்னை விடுதலை செய்ய அமைச்சரவை பரிந்துரை மீது முடிவு எடுக்க ஆளுநருக்கு என்ன தடை உள்ளது. மேலும், பல்வேறு விவரங்கள் கேட்டு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் ஆளுநர் அலுவலக தகவல் அதிகாரிக்கு … Read more

மர்மம் நிறைந்த அரண்மனை 3 படத்தின் திகில் டிரைலர் இதோ.!

அரண்மனை 3 படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.  இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் இரண்டு பாகங்களை வெளியாகி வெற்றியடைந்த திரைப்படம் அரண்மனை. இரண்டு பாகங்களின் வெற்றியை தொடர்ந்து தற்போது மூன்றாவது பாகம் உருவாகியுள்ளது. இந்த மூன்றாம் பாகத்தில் ஆர்யா, சுந்தர் சி, சாக்ஷி அகர்வால், ராசி கண்ணா, ஆண்ட்ரியா, விவேக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். திகில் நிறைந்த இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சத்யா சி இசையமைத்துள்ளார். படத்திலிருந்து வெளியான பாடல்கள் அனைத்தும் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று … Read more

புதிய துணைவேந்தரை தேர்வு செய்ய தேடல் குழு அமைப்பு – ஆளுநர் ஆர்.என்.ரவி

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக புதிய துணைவேந்தரை தேர்வு செய்ய தேடல் குழுவை அமைத்து ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவு. தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக புதிய துணைவேந்தரை தேர்வு செய்ய தேடல் குழுவை அமைத்தார் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி. இந்திய வானிலை மைய முன்னாள் இயக்குனர் லட்சுமண் சிங் தலைமையில் குழு அமைத்து தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார்.

#BREAKING : விமான பெண் அதிகாரிக்கு வன்கொடுமை…! விமானப்படை தலைமை தளபதிக்கு தேசிய மகளீர் ஆணையம் நோட்டீஸ்…!

உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக பெண்ணின் அந்தரங்க உறுப்புகளில் இந்த சோதனை  மேற்கொள்ளப்பட்டுள்ளது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.  கோவை விமானப்படை பயிற்சி மையத்தில், விமான  அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தாததாக ஒரு அதிகாரி கைது செய்யப்பட்டார். இந்த நிலையில், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு விமானப்படை மருத்தவ அதிகாரிகள்  உச்சநீதிமன்றத்தால் தடை செய்யப்பட்ட இருவிரல் பரிசோதனை முறையை பயன்படுத்தியதாக தேசிய மகளீர் ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தேசிய மகளீர் ஆணையத்தின் தலைவர் ரேகா அவர்கள், கண்டனம் … Read more

கதிர்வீச்சு ஏற்பட்டால் ஒட்டுமொத்த தென் தமிழக மக்களும் பாதிக்கப்படுவார்கள் – அன்புமணி ராமதாஸ்

மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் அணுக்கழிவு சேமிப்பு பாதாள மையத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் ட்வீட். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணு உலைகளின் அணுக்கழிவுகளை அங்கேயே சேமித்து வைக்க இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி வழங்கியதை அடுத்து, அணுசக்திக்கு எதிரான போராட்டக் குழு, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் இதுகுறித்து … Read more

கோமா நிலைக்கு சென்ற முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி…

கோமா நிலைக்கு சென்ற முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி. முன்னதாக, 1991-96 காலகட்டத்தில்அதிமுக ஆட்சிக்காலத்தில்,முன்னாள் சமூக நலத்துறை அமைச்சராக இருந்த இந்திர குமாரி,காது கேளாதோர் பள்ளியும், ஊனமுற்றோர் பள்ளிகளையும் தொடங்குவதாகக் கூறிய தனது  கணவர் பாபுவுக்கு அரசிடம் இருந்து ரூ.15.45 லட்சம் நிதி ஒதுக்கியுள்ளார். ஆனால்,அவ்வாறு பெறப்பட்ட நிதியில் மாற்றுத்திறனாளிகளுக்கு எந்தவிதமான நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படவில்லை. இதனையடுத்து,அரசின் நிதியை முறைகேடாக பெற்றதாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது இந்த வழக்கில் தொடர்புடைய முன்னாள் அமைச்சர் … Read more

தலைவர் 169 படம் குறித்த கேள்வி..? நச் பதிலளித்த தேசிங்கு பெரியசாமி..!

தலைவர் 169 படத்தை இயக்குகிறீர்களா என்ற கேள்விக்கு இயக்குனர் தேசிங்கு பெரியசாமி பதிலளித்துள்ளார்.  கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி. முதல் திரைப்படமே வெற்றி திரைப்படமாக அமைந்தது, இந்த திரைப்படத்தை பார்த்து விட்டு ரசிகர்கள் மேலும் சில சினிமா பிரபலங்கள் தங்களது பாராட்டுகளை தெரிவித்தனர். அந்த வகையில், கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை நடிகர் ரஜினிகாந்த் பார்த்துவிட்டு இயக்குனர் தேசிங்கு பெரியசாமி வீட்டிற்கு அழைத்து பாராட்டினார். அப்போதிலிருந்து … Read more

பிறந்தநாள் கொண்டாடிய விடுதி மாணவனுக்கு கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்த முதல்வர்…!

பெண்ணாகரம் அரசு ஆதிதிராவிடர் மாணவர் விடுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்ட போது, முதல்வர் அங்கு பிறந்தநாள் கொண்டாடிய மாணவனுக்கு கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தார்.  தமிழக முதல்வர் மு.க. தருமபுரியில் புதிய கட்டிடங்களை திறந்து வாய்த்த நிலையில், ஒக்கேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை ஆய்வு செய்வதற்காக ஒக்கேனக்கல்லுக்கு காரில் பயணித்துக் கொண்டிருந்த போது, பாதி வழியில், சோகத்தூரில் உள்ள தனியார் பள்ளியின் முன் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் நின்றுக் கொண்டிருந்துள்ளனர். இதனை பார்த்த முதல்வர் உடனடியாக காரில் இருந்து … Read more

“கோரக்பூரில் தேர்வு செய்யப்பட்டவர்கள்;தெற்கு ரயில்வேக்கு பணியமர்த்தும் நடவடிக்கை முறியடிப்பு”- எம்பி சு.வெங்கடேசன் நன்றி..!

உத்தரப்பிரதேச கோரக்பூர் ரயில் ஓட்டுநர் தேர்வாளர்கள் பட்டியல் திருப்பி அனுப்பப்பட்டதற்காக,இந்திய ரயில்வே நிர்வாகத்துக்கு மதுரை எம்பி சு.வெங்கடேசன் நன்றி தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேசத்தில் கோரக்பூர் ரயில்வே தேர்வு வாரியத்தில் தேர்வு செய்யப்பட்ட ஐம்பத்தி நான்கு விண்ணப்பதாரர்களை தெற்கு ரயில்வே பணிகளுக்கு நியமித்து, தெற்கு ரயில்வேயின் சென்னை தேர்வு வாரியத்தில் தேர்வு செய்யப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களை புறக்கணித்து இந்திய ரயில்வே உத்தரவிட்டிருந்தது.இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று எம்பி சு.வெங்கடேசன் அவர்கள்,மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் … Read more

நானே வருவேன் படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்குகிறது..?! லேட்டஸ்ட் தகவல்.!

நானே வருவேன் படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்குகிறது குறித்த தகவல் சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.  தனுஷ் – செல்வராகவன் இருவரும் 10 ஆண்டுகளுக்கு பிறகு நானே வருவேன் படத்தில் இணையவுள்ளனர். இந்த படத்தை தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தயாரிக்கிறார். படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இதற்கான அறிவிப்பு கடந்த ஜனவரி மாதம் வெளியானது. இந்த படத்தின் டைட்டில் மற்றும் கதையை இயக்குனர் செல்வராகவன் மாற்ற முடிவு செய்துள்ளதாகவும், படத்திற்கு ராயன் என்று … Read more