ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் மறுப்பு

ஐஎன்எக்ஸ் வழக்கில் சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்துவிட்டது டெல்லி உயர்நீதிமன்றம். ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில்  அமலாக்கத்துறை முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரத்தை  கைது செய்தது.பின் சிதம்பரம் திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.இதனிடையில் உடல்நலக்குறைவால் ப.சிதம்பரம் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் (AIIMS) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.தொடர்ந்து அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு வருகிறது. இந்தநிலையில் ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில், அமலாக்கத்துறை கைதுக்கு எதிராக இடைக்கால ஜாமீன் கோரி, ப.சிதம்பரம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார் .உடல்நிலையை கருத்தில் கொண்டு இடைக்கால … Read more

தீபாவளியில் ஹாட்ரிக் 200 கோடி வசூல் சாதனை படைத்த தளபதி விஜய்!

மெர்சல், சர்கார் ஆகிய இரண்டு படங்களும் தளபதி விஜய் நடிப்பில் கடந்த இரு தீபவாளியாக வெளியாகி வரவேற்பை பெற்று மெகா ஹிட்டான திரைப்படங்கள் ஆகும்.  இந்த இரு படங்களும் 200 கோடி வசூலை தாண்டியுள்ளது. தற்போது விஜயின் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படமும் தற்போது 200 கோடி வசூலை 5 நாட்களில் கடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதன் மூலம் தீபாவளிக்கு ஹாட்ரிக் 200 கோடி வசூல் சாதனை படைத்த தமிழ் ஹீரோ என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

நகையை விழுங்கிய மாடு! பழம் கொடுத்து 10 நாட்களாக சாணத்தை கிளறும் குடும்பம்!

ஹரியானா மாநிலம், சீர்ஸாவில் கலனவல்லி எனும் பகுதியில் வசித்து வருபவர் ஜனகராஜ். இவரது மனைவியும் மருமகளும் வீட்டில் சமைத்து கொண்டிருந்தார்.  அப்போது தங்கள் நகைகளை கழட்டி ஒரு பாத்திரத்தில் வைத்துள்ளனர். பிறகு கவனிக்காமல், அந்த நகைகள் இருந்த பாத்திரத்தில் காய்கறி கழிவுகளை போட்டுவிட்டனர். அதனை அருகில் இருந்த மாடு நின்றுவிட்டது. காய்கறிகளோடு சேர்த்து, நகைகளையும் நின்றுவிட்டது. இதனை பின்பு அறிந்த மாமியார் மருமகள்கள், விஷயத்தை ஜனகராஜிடம் கூற, அவர், அந்த காளையை தேடி பிடித்து கால்நடை மருத்துவரிடம் … Read more

இனி டிவிட்டரில் இதை செய்ய முடியாது வச்சிட்டாங்க ஆப்பு!

இன்றைய நாகரீகமான சமூகத்தை பொறுத்தவரை, சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரின் வாழ்க்கையிலும் சமூக வலைதளம் என்பது இன்றியமையாத ஒன்றாக மாறியுள்ளது. உலகின் ஏதோ ஒரு முலையில் நடக்கும் செய்தியையும், ஒவொருவரின் வீட்டிற்குள்ளும் கொண்டு வர இந்த சமூக வலைத்தளம் உதவுகிறது. இந்நிலையில், ட்வீட்டரில் இனி அரசியல் ரீதியிலான விளம்பரங்கள் இனி அனுமதிக்கப்படமாட்டாது என கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து ட்வீட்டர் நிறுவன தலைமை நிர்வாகி ஜேக் டோர்சே கூறுகையில் ‘ தேர்தல் நேரங்களில் அரசியல்வாதிகளின் டிஜிட்டல் பிரச்சார காலமாக … Read more

32 மாவட்டங்களில் மழை பெய்யும் !ஆபத்தான இடங்களில் செல்ஃபி வேண்டாம் -அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வேண்டுகோள்

இன்னும் 32 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழையின் தாக்கம் கடந்த சில நாட்களாக  அதிகம் இருந்து வருகிறது. இதன் காரணமாக மழையின் அளவும் அதிகரித்து உள்ளது.மேலும் கியார் மற்றும் மகா என்று இரண்டு புயல்கள் உருவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இதனையொட்டி வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,மகா மற்றும் கியார் புயல்களின் நகர்வுகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது.மகா … Read more

பெத்தவளுக்கு தெரியும் குழந்தை எங்க இருக்குனு வைரலாகும் சுஜித் பெற்றோரின் புகைப்படம்!

கடந்த 25-ம் தேதி, திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை அருகே நடுகாட்டுப்பட்டியில், மாலை வீட்டின் தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த 2 வயது குழந்தையான சுஜித், வீட்டின் அருகே இருந்த ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து விட்டான். இதனையடுத்து குழந்தையை மீட்பதற்கான பணிகள், 4 நாட்களை கடந்தும் தீவிரமாக நடைபெற்று வந்தது. இந்நிலையில், தமிழகமே குழந்தை சுஜித் மீண்டு வருவான் என மிகுந்த எதிர்பார்ப்போடும், பிரார்த்தனையோடும் காத்திருந்த நிலையில், 5-வது நாள் காலையில், குழந்தை சுஜித் சடலமாக தான் … Read more

பிரபல நடிகைக்கு ரசிகர் செய்த அதிர்ச்சி சம்பவம்! இப்படியா பண்றது அதுக்கு!

நடிகை நூரின் ஷெரீப் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் ஒரு அடர் லவ் படத்தில்  நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இப்படத்தில் இவர் நடிகை பிரியா வாரியருடன் இணைந்து நடித்துள்ளார். இந்நிலையில், இவர் அண்மையில் கேரள மாநிலம் மஞ்சேரி பகுதியில் நடந்த தனியார் நிறுவன திறப்பு விழாவில் பங்கேற்றுள்ளார். இதனையடுத்து, ரசிகர் ஒருவரின் கைப்பட்டு மூக்கு உடைந்து ரத்தம் கொட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிகழ்ச்சிக்கு ஷெரீப் தாமதகா வந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து, அங்கு … Read more

சுஜித் மீட்புக்கு செலவான உண்மையான தொகை இதுதான்- மாவட்ட ஆட்சியர்

சுஜித்தை மீட்க ரூ.11 கோடி வரை செலவு செய்யப்பட்டதாக செய்தி வெளியான நிலையில் இது குறித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு விளக்கம் அளித்துள்ளார். கடந்த சில தினங்களாக தமிழகத்தை உலுக்கிய சம்பவம் ஆழ்துளை கிணற்றில் விழுந்து 2 வயது சிறுவன் சுஜித் உயிரிழந்தது தான்.இந்த  சிறுவன் ஆழ்துளை கிணற்றில் விழுந்தது முதல் தற்போது வரை சமூக வலைத்தளங்களில் பல்வேறு போலிச் செய்திகள் அதிகம் உலாவி வருகின்றது.குறிப்பாக சமூக வலைத்தளங்களில் ஒரு சிறுவன் நடனம் ஆடும் வீடியோ … Read more

குழந்தை சுஜித்திற்காக மாணவன் செய்த நெகிழ்ச்சி சம்பவம்!

கடந்த 25-ம் தேதி, திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை அருகே நடுகாட்டுப்பட்டியில், மாலை வீட்டின் தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த 2 வயது குழந்தையான சுஜித், வீட்டின் அருகே இருந்த ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து விட்டான். இதனையடுத்து குழந்தையை மீட்பதற்கான பணிகள், 4 நாட்களை கடந்தும் தீவிரமாக நடைபெற்று வந்தது. பலரின் போராட்டத்திற்கு மத்தியில் ஆழ்துளை கிணற்றில் இருந்து குழந்தை சடலமாகவே மீட்கப்பட்டது.  குழந்தையை உயிரோடு மீட்டு விடுவார்கள் என தமிழகமே மிகவும் எதிர்பார்ப்புடன் காத்திருந்த போது, … Read more

கனிமொழி வெற்றியை எதிர்த்து தொடர்ந்த வழக்கு ஒத்திவைப்பு

கனிமொழி வெற்றியை எதிர்த்து தொடர்ந்த  வழக்கு நவம்பர் 14-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மக்களவை தொகுதியில் திமுகவின் கனிமொழி வெற்றிக்கு எதிராக சந்தானகுமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.ஆனால் இந்த வழக்கை நிராகரிக்கோரி கனிமொழி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்கள் மீதான விசாரணை நடைபெற்றது.அதில்,  தூத்துக்குடி மக்களவை தொகுதி தேர்தல் வழக்கை விரைந்து முடிக்க ஒத்துழைக்க வேண்டும்என்று வழக்கு தொடர்ந்த சந்தானகுமார் மற்றும் கனிமொழி தரப்புக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியது.பின்னர் கனிமொழி … Read more