பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து நன்றி தெரிவித்தார் உலக அழகி மனுஷி சில்லர்..!

  இன்று டெல்லியில் பிதமர் இல்லத்தில் பாரத பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து நன்றி தெரிவித்தார் 2017 ஆண்டுக்கான உலக அழகி பட்டம் வென்ற இந்தியாவின் மனுஷி சில்லர்.

தடைகளை தாண்டி 50 நாளை கொண்டாடும் தளபதியின் “மெர்சல்” படக்குழு…!

  இயக்குனர் அட்லி இயக்கத்தில்,இளைய தளபதி விஜய் நடிப்பில் உருவான படம் “மெர்சல்” .இப்படம் வெளிவருவதற்கு முன்னேயும் அதன் பின்பு வெளியான பிறகு கூட பல்வேறு அரசியல் தலையீடுகள் இருந்தும் அத்தனை தடைகளை தாண்டி தற்போது 50 நாளை கடந்து வெற்றிகரமாக ஓடிவருகிறது .இந்நாளை கொண்டாடி வருகிறது மெர்சல் படக்குழு. மெர்சல் படத்தின் இந்த வெற்றியை கண்டு பெருமைபடுவதாகவும் தயாரிப்பாளர் முரளி ராமசாமி ,தளபதி விஜய் ஆகியோருக்கு நன்றி என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தேனாண்டாள் … Read more

உலக பளு தூக்குதல் சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற இந்தியாவின் மீராபாய் சானு

2017 ஆண்டுக்கான உலக பளு தூக்குதல் சாம்பியன்ஷிப்பில் இந்தியா சார்பில் பங்கேற்ற மீராபாய் சானு இறுதி சுற்றுக்கு தகுதி பெற்று இறுதியில் தங்கம் வென்றார். தங்கம் வென்ற மீராபாய் சானுவுக்கு பாரத பிரதமர் நரேந்திர மோடி ,காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல்காந்தி உட்பட பல அரசியல் தலைவர்களும் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.  

ஓகி புயலுக்கு 2 வர் பலி

தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்  புயலாக மாற்றியுள்ளது .இதனால் கன்னியாகுமரி, நாகர்கோவில்,தூத்துக்குடி மற்றும் நெல்லையில் உள்ள மரங்களை வேறொடு பிடுங்கி எறிகிறது அந்த புயல். கன்னியாகுமரிக்கு தெற்கே 60 கி,மீ தொலைவில் புயல் உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு  மையம் அறிவித்துள்ளது. இந்த புயலுக்கு ஓகி என பெயரிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புயல் காரணமாக காற்றின் வேகம் அதிகரிக்கும் எனவும் வானிலை மையம் அறிவித்து இருந்தது.இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் பலத்த காற்று … Read more

குஜராத்தில் வர்த்தகர்கள் சந்தித்து கலந்துரையாடிய காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர்  ராகுல் காந்தி

காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர்  ராகுல் காந்தி இந்தியாவில் சிறுகுறு தொழில் முனைவோர் ,வர்த்தகர்கள் சந்தித்துக் கொண்டிருக்கும் பிரச்சனைகளைப் பற்றி இன்று காலை குஜராத்தில் உள்ள அம்ரேலி நகரில் வர்த்தகர்கள் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

உலக கிரிக்கெட்டின் கடவுள் சச்சினின் சீருடைக்கு ஓய்வளிக்க பிசிசிஐ திட்டம்…!

உலக கிரிக்கெட்டின் கடவுள் என அழைக்கப்பட்ட இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் அணிந்திருந்த 10 என்ற எண் சீருடைக்கு ஓய்வளிக்க பி.சி.சி.ஐ. திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்திய கிரிக்கெட் அணியில் இருந்து விளையாடி பல்வேறு சாதனைகளைப் படைத்த கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் 10 என்ற எண் கொண்ட சீருடையை அணிந்திருந்தார். அவர் ஓய்வுக்குப் பின், ஷர்துல் தாக்கூர் எனும் கிரிக்கெட் வீரர் 10 என்ற எண் கொண்ட சீருடையை அணிந்ததற்கு சமூக … Read more

ஒக்கி புயல் உருவானது…,கடுமையான பாதிப்புகளை சந்திக்க இருக்கும் தென் மாவட்டங்கள்…!

கன்னியாகுமரியில் இருந்து 60 கிலோ மீட்டர் தொலைவில் ஒக்கி புயல் மையம் கொண்டுள்ளது. தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஒக்கி புயலாக மாற்றியுள்ளது .65 முதல் 75 கி.மீ, வேகத்தில் வீசி வரும் காற்று 85 கிலோ மீட்டர் வேகத்தில் வீச வாய்ப்புள்ளது. மணிக்கு 38 மைல் வேகத்தில் ஒக்கி புயல் நகர்ந்து வருகிறது – வானிலை ஆய்வு மையம் ஒக்கி புயல் மேற்கு-வடமேற்கு திசையில் லட்சத் தீவுகளை நோக்கி நகர்கிறது அடுத்த … Read more

தூத்துக்குடியில் கல்லூரி மாணவி தற்கொலை மூடிமரைக்கும் கல்லூரி

துாத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள திருப்புளியங்குடியை சேர்ந்த தங்கராஜ் பிரேமா தம்பதியினரின் மூன்றாவது மகள் அஜிதாபானு (19). இவர் வாகைக்குளம் ஹோலிகிராஸ் கல்லுாரியில் இசிஇ முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் கடந்த வியாழன்று அஜீதாவுக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டதாம். இதனால் ஊசி போட்டு விட்டு கல்லுாரிக்கு சென்றுள்ளார். மறுநாள் வெள்ளியன்று அஜீதா படிக்கும் கல்லுாரியிலிருந்து அவரது வீட்டிற்கு போன் செய்து உங்கள் மகளுக்கு காய்ச்சலால் அவதிப்படுகிறார். எனவே உடனே வந்து கூட்டி செல்லுங்கள் என கூறியுள்ளனர். … Read more

குமரி,நெல்லை,தூத்துக்குடி ஆகிய தென் மாவட்டங்களை புரட்டியெடுக்கும் சிலோன் அக்க்ஹி புயல்…!

நேற்று வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை தற்போது தாழ்வு மண்டலமாக உருவெடுத்து சிலோன் அக்க்ஹி புயலாக மாறியிருக்கிறது.இதனால் கன்னியாகுமரி, நாகர்கோவில்,தூத்துக்குடி மற்றும் நெல்லையில் உள்ள மரங்களை வேறொடு பிடுங்கி எறிகிறது அந்த புயல். கன்னியாகுமரியில் வீசும் பலத்த காற்று காரணமாக பல இடங்களில் மரம் விழுந்து மின்சாரம் மற்றும் சாலை துண்டிக்கபட்டுள்ளது. தூத்துக்குடியில்   நெல்லையில்   கன்னியாகுமரியில்

ஆர்.கே நகர் அதிமுக வேட்பளராக மதுசூதனன்,ஆட்சிமன்றக்குழு அறிவிப்பு

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் மதுசூதனன் போட்டியிடப்போவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சிமன்றக்குழு கூட்டமானது இன்று நடைபெற்றது இதனையடுத்து அதிமுகவின் அதிகாரபூர்வ ஆர்.கே நகர் இடைதேர்தலுக்கான வேட்பாளராக அதிமுகவின் அவை தலைவர் மதுசூதனன் தேர்ந்தெடுக்கப்பட்டதாக  அதிமுக ஆட்சிமன்ற குழு இன்று அறிவித்துள்ளது.