12 மணி நேர வேலை - ஆளுநர் தமிழிசை ஆதரவு..!

Apr 24, 2023 - 05:32
 0  1

ஒருநாளைக்கு 12மணி நேரம் என வாரத்துக்கு 4 நாட்கள் பணியால் தொழில் உற்பத்தி அதிகரிக்கும் என ஆளுநர் தமிழிசை கருத்து. 

நேற்று முன்தினம் தொழிற்சாலை சட்ட திருத்தம் 65-ஏ பிரிவில் திருத்தம் செய்யும் சட்ட வரையறையை தமிழக அரசு பேரவையில் கொண்டு வந்தது. இதன் மூலம் தொழிலாளர்களின் பணிநேரம் 8 மணி நேரத்தில் இருந்து 12 மணிநேரமாக மாற்றும் நடைமுறை என கூறப்பட்டுள்ளது. 12 மணி நேர வேலை சட்ட மசோதா

இந்த நிலையில், தொழில் நிறுவனங்களில் 12 மணி நேர வேலை சட்ட மசோதாவுக்கு சட்டப்பேரவையில் காங்கிரஸ், மதிமுக, மமக கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தோழமை கட்சிகளின் எதிர்ப்பையும் தாண்டி இந்த சட்டமசோதா நிறைவேற்றப்பட்டது.

இதற்கு அரசியல் தலைவர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் 12 மணி நேர வேலை சட்ட மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். தமிழிசை கருத்து 

இதுகுறித்து அவர் கூறுகையில், ஒருநாளைக்கு 12மணி நேரம் என வாரத்துக்கு 4 நாட்கள் பணியால் தொழில் உற்பத்தி அதிகரிக்கும். கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் 12 மணி நேர வேலை சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

8 மணி நேர வேலையா? 12 மணி நேர வேலையா? என தொழிலாளர்கள் விருப்பப்படி நடைமுறைப்படுத்தலாம் என்பது தான் சட்டம். அதிக நேரம் வேலை செய்து விட்டு அதிக நேரம் ஒய்வு எடுத்தால் மனித சக்தி அதிகரிக்கும் என உலகம் முழுவதும் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

புதிய சட்டத்தால் பணியின் நேரம் மாற்றி அமைக்கப்படுகிறதே தவிர பணியின் நேரம் அதிகரிக்கவில்லை. 12 மணி நேர வேலை விவகாரத்தில் தொழிலாளர்கள் முடிவுக்கே விட்டு விட வேண்டும், இதில் அரசியல் செய்ய கூடாது என்று தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow