Telangana: ஒரே நாளில் ரூ.5.5 கோடி அபாரதத் தொகை வசூல் ஆனால் நஷ்டம் 15 கோடி

தெலுங்கானா போக்குவரத்து காவல்துறையின் திடிர் சலுகையால் அபாரதத் தொகை செலுத்த வேண்டிய இ-சலான் மூலம் இன்று ஒரு நாளில் ரூ.5.5 கோடி ரூபாய் வசூலாகியுள்ளது. இரு மற்றும் மூன்று சக்கர வாகனங்களுக்கு நிலுவையில் உள்ள தொகையில் 75% ,இலகுரக மோட்டார் வாகனங்கள் மற்றும் கனரக மோட்டார் வாகனங்களுக்கு 50%,மற்றொரு சலுகையானது கோவிட் தொற்றுநோய்களின் போது முகமூடிகளை அணியாததால் பெறப்படும் இ-சலான்களுக்கு 90% தள்ளுபடி மற்றும் தள்ளு வண்டிகளுக்கு வழங்கப்படும் சலான்களுக்கு 80% தள்ளுபடி என்ற அதிரடி அறிவிப்பு … Read more

போக்குவரத்து விதி மீறலில் ஈடுபட்ட ஒரு லட்சத்து 30 ஆயிரத்து 559 பேரின் ஓட்டுநர் உரிமம் ரத்து.!

சென்னை போக்குவரத்து காவல்துறை விதி மீறலில் ஈடுபட்ட புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டில் மட்டும் போக்குவரத்து விதி மீறலில் ஈடுபட்ட ஒரு லட்சத்து 30 ஆயிரத்து 559 பேரின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னை போக்குவரத்து காவல்துறை போக்குவரத்து விதி மீறலில் ஈடுபட்ட புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது. கடந்த 2018-ம் ஆண்டில் 7749 விபத்துகள் நடைபெற்றதாகவும், அதில் 1,260 பேர் விபத்தில் பலியானதாகவும் தெரிவித்தனர். நடப்பாண்டில் 6832 விபத்துக்கள் ஏற்பட்டுள்ளதாகவும், அதில் 1,224 பேர் … Read more

நடனமாடி கொண்டு போக்குவரத்தை சரி செய்யும் இளம் பெண்..!!

புனேவில் கல்லூரியில் படித்து வரும் சுபி ஜெயின்.இவருக்கு வயது 23 மத்திய பிரதேச மாநிலத்தில் இந்தூரில் நடனம் ஆடிக்கொண்டு போக்குவரத்தை சீரமைத்து வருகிறார். போக்குவரத்தை சரி செய்வதோடு போக்குவரத்து விதிகள் குறித்து மக்களுக்கு எடுத்து கூறிகிறார். மேலும் சிக்னலில் நிற்கும் இருசக்கரவாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் அணிவது அவசியம் என்று உணர்த்துகிறார். மேலும் கார் ஓட்டுபவர்களை வலி மறித்து சீட் பெல்ட் போட்டுக் கொண்டு ஓட்டுமாறு கூறுகிறார். போக்குவரத்து விதிகளை மீறுவோர் போக்குவரத்து விதிகளை கற்றுக் கொள்ள வேண்டும். … Read more

மோட்டார் வாகன ஆய்வாளர் வீட்டில் 20 கோடி மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல்!

ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சிவபிரசாத் என்பவர் அம்மாநிலத்தில் மோட்டார் வாகன ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்களை வைத்திருப்பதாக  ஊழல் தடுப்பு அதிகாரிகளுக்கு தாவல் கிடைக்கேவே, இவருக்கு சொந்தமான மற்றும் இவரது உறவினர்கள் வீட்டில் தீவிர சோதனையில் ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். குர்னுலில் உள்ள அவரது வீட்டில் ஒரு லட்சத்து 45 ஆயிரம் ரூபாயும், ஒரு கிலோ தங்கமும் கிடைக்கப் பெற்றதாகவும், பெங்களூருவில் 3 கோடி மதிப்புள்ள ஒரு அப்பார்ட்மெண்டும், 2 … Read more

வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை ! இனி இவர்களும் அபராதம் விதிப்பார்கள்

மத்திய அரசு மோட்டர் வாகன சட்டத்தில் திருத்தத்தை கொண்டு வந்து அபராத தொகையை 10 மடங்காக உயர்த்தியுள்ளது .இதனால் வாகன ஓட்டிகள் சற்று கலக்கமடைந்துள்ளனர். இந்நிலையில் தமிழகமுழுவதும் தீவிரமான வாகன சோதனை நடைப்பெற்று வருகிறது ஹெல்மெட் ,அணியாமல் ,குடித்து விட்டு வாகனம் ஓட்டுதல் என விதி மீறல்களில் ஈடுபடுவோர் மீது அபராதம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்படுகிறது.இந்த அபராத தொகையை வசூலிக்க போக்குவர்த்து  ஆய்வாளர் மற்றும்  துணை ஆய்வாளர்,மோட்டார் வாகன ஆய்வாளர் ஆகியோருக்கு மட்டும் அதிகாரம் வழங்கப்பட்டிருந்தது . இந்நிலையில் … Read more

இரு சக்கர வாகனம் ஓட்டும் நண்பர்களே உஷாராக இருங்கள் – அபராத கட்டணம் உயர்கிறது!

மத்திய அரசு புதிதாக நிறைவேற்றியுள்ள மோட்டார் வாகன ஆய்வு சட்டத்தின் படி வாகனங்களுக்கான அபராத கட்டணம் பலமடங்கு உயர்ந்துள்ளது. இதுவரை வாகன உரிமம் இருந்து ஹெல்மெட் அணியாமல் சென்றால் காவல்துறை சோதனை செய்யும் போது சிக்கி 100 ரூபாய் வசூலிப்பது வழக்கம். ஆனால், இனிமேல் புதிய சட்டத்தின் படி அபராத கட்டணம் 100 ரூபாயில் இருந்து 1000 ரூபாயாக வசூலிக்கப்படும் என்று போக்குவரத்துறை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் இதுகுறித்து போக்குவரத்து காவல்துறையினர் தொடர்ந்து விழிப்புணர்வு செய்து வருகின்றனர். … Read more

10 திருக்குறளை பிழை இல்லாமல் எழுத சொல்லும் சூப்பர் டிராபிக் போலீஸ்…!!

பொதுவாக டிராபிக் போலீஸ் எல்லோரும் ஹெல்மெட், லைசன்ஸ், இன்சூரன்ஸ் ஆகியவற்றை தான் கேட்பார்கள். இதில் ஏதாவது ஒன்று இல்லைன்னு சொன்னாலும் பைன் போடுவது வழக்கம். ஆனால் பெரம்பலூரில் பணியாற்றி வரும் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் நாவுக்கரசன், போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் மீது வினோதமான தண்டனை வழங்கி வருகிறார். அது என்ன தண்டனை தெரியுமா… 10 திருக்குறளை பிழை இல்லாமல் எழுதுவது தான். அப்படி 10 திருக்குறளை பிழையில்லாமல் எழுதினால் எந்தவித அபராதம் இன்றி அவர்களை விட்டுவிடுகிறார். அதுமட்டுமின்றி … Read more

"யாரை கேட்டு பைக் சாவியை எடுத்தீங்க"டிராஃபிக் போலீஸை கதறவிட்ட இளைஞன்..!!

தூத்துக்குடி மாவட்டத்தில் வாகன தணிக்கையின் போது, பைக் சாவியை எடுத்த போக்குவரத்து காவலரை கண்டித்து இளைஞர் மின்கம்பத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வடக்கு திட்டங்குளத்தினை சேர்ந்தவர் ஜோதி ரமேஷ். இவர் தன்னுடைய நண்பருடன் பைக்கில் நேற்று இரவு பஜார் அருகே சென்றுக்கொண்டிருந்தார். அப்போது வாகன தணிக்கையில் ஈடுபட்ட போக்குவரத்து காவலர்கள், ரமேஷின் வண்டியை நிறுத்தி ஆவணங்களை கேட்டுள்ளனர். இதற்கு முறையாக ரமேஷ் பதில் சொல்லாததால், பைக் சாவியை எடுத்த போலீசார், … Read more

ரசிகர் ஒருவரால் பிரபல நடிகருக்கு ஏற்பட்ட சோதனை !

சினிமா  நடிகர்கள் மக்களுக்கு ஒரு உதாரணமாக இருக்க வேண்டியவர்கள். ஆனால் இப்போதெல்லாம் அவர்களே மக்களுக்கு தவறான உதாரணமாக இருக்கிறார்கள். சமீபத்தில் கூட பாலிவுட் நடிகர் வருண் தவான்  போக்குவரத்து விதகளை மீறி பிரச்சனையில் சிக்கினார். எப்படி என்றால் டிராபிக் சிக்னலில் வண்டி நிற்கும் போது காரில் இருந்து பாதி வெளியே வந்து ரசிகருடன் செல்பி எடுத்துக் கொண்டார். அப்படி அவர் எடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாக பெரிய பிரச்சனையானது. இந்த நிலையில் பாலிவுட்டை சேர்ந்த குணல் … Read more

இனி போக்குவரத்து போலீசார் லஞ்சம் வாங்க முடியாது!!!

தமிழகத்தில் போக்குவரத்து போலீசார் வாகன ஓட்டிகளை சோதனை செய்து முறையான பேப்பர்கள் இருந்தும் சில நேரங்களில் அவர்களிடம் லஞ்சம் பெறுவதாகவும், மேலும் முறையான பேப்பர்கள் இல்லாத நிலையிலும் அப்போதும் லஞ்சம் வாங்குவதாகவும் அவர்கள் மீது குற்றம் சாட்ட படுகிறது. இதனை தடுக்கும் பொருட்டு அவர்கள் மீது கேமிரா பொருத்தும் திட்டம் சென்னையில் இன்று சோதனை ஓட்டமாக இன்று செயல் படுத்தி பார்க்கப்பட்டது. இதனை தொடர்ந்து இந்த கேமிராவானது, மெரீனா, கோயம்பேடு, பூக்கடை ஆகிய ஏரியாகளில் உள்ள போக்குவரத்து … Read more