Telangana: ஒரே நாளில் ரூ.5.5 கோடி அபாரதத் தொகை வசூல் ஆனால் நஷ்டம் 15 கோடி

தெலுங்கானா போக்குவரத்து காவல்துறையின் திடிர் சலுகையால் அபாரதத் தொகை செலுத்த வேண்டிய இ-சலான் மூலம் இன்று ஒரு நாளில் ரூ.5.5 கோடி ரூபாய் வசூலாகியுள்ளது.

இரு மற்றும் மூன்று சக்கர வாகனங்களுக்கு நிலுவையில் உள்ள தொகையில் 75% ,இலகுரக மோட்டார் வாகனங்கள் மற்றும் கனரக மோட்டார் வாகனங்களுக்கு 50%,மற்றொரு சலுகையானது கோவிட் தொற்றுநோய்களின் போது முகமூடிகளை அணியாததால் பெறப்படும் இ-சலான்களுக்கு 90% தள்ளுபடி மற்றும் தள்ளு வண்டிகளுக்கு வழங்கப்படும் சலான்களுக்கு 80% தள்ளுபடி என்ற அதிரடி அறிவிப்பு வெளியானது.

இந்த அறிவிப்பால் திகைத்துப்போன அபராத் தொகை செலுத்த வேண்டியவர்கள் ஒவ்வொரு நிமிடத்திற்கும் 800 முதல் 1000 இ-சலான்களை செலுத்தி தெலுங்கானா போக்குவரத்து துறையை திகைப்பில் ஆழ்த்தியுள்ளனர்.

இதுபற்றி போக்குவரத்து ஆய்வாளர் (இ-சலான்) எம் நர்சிங் ராவ் கூறுகையில் “வாகன உரிமையாளர்களிடமிருந்து நிலுவையில் உள்ள இ-சலான்களை  தள்ளுபடியில் வசூல் செய்ய திட்டமிட்டு இருந்தோம்.இதில் எங்கள் இலக்கானது சுமார் 2 லட்சம் சலான்ங்கள் செலுத்தப்படும் என்று கணித்திருந்தோம்,ஆனால் எங்கள் கணிப்பை மீறி சுமார் 4.5 லட்சம் சலான்ங்கள் செலுத்தப்பட்டுள்ளது மிகுந்த மகிழ்ச்சியையும் ஆச்சிரத்தையும் தந்துள்ளது என செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

முதல் நாளான இன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நிமிடத்திற்கு 1000 சலான்ங்கள் வரை செலுத்தப்பட்டதாக கூறினார்.இந்த மிகப்பெரிய ஆன்லைன் டிராபிக் காரணமாக இ-சலான் செலுத்தும் போது பயனர்கள் சில தொழிநுட்ப கோளாறுகளை எதிர்கொண்டனர்,ஆனால் அதிர்ஷ்டவசமாக முற்றிலுமாக செயலிழக்கவில்லை.

ஹைதராபாத் காவல்துறையின் இணை ஆணையர் (போக்குவரத்து) ஏ.வி.ரங்கநாத் கூறுகையில்,இன்று பெறப்பட்ட இ-சலான்களின் மதிப்பு சுமார் ரூ.20 கோடி இருக்கும்,ஆனால் தள்ளுபடி காரணமாக சுமார் ரூ.கோடி வரை வசூல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

author avatar
Castro Murugan