இந்த  சூழலில் கூட பாகிஸ்தான் பயங்கரவாதிகளை ஏற்றுமதி செய்கிறது- ராணுவ தளபதி

கொரோனா பாதிக்கும் இந்த  சூழலில் கூட பாகிஸ்தான் பயங்கரவாதிகளை ஏற்றுமதி செய்கிறது என்று இந்திய ராணுவ தளபதி எம்.எம். நாரவனே தெரிவித்துள்ளார். கடந்த சில தினங்களாக காஷ்மீரில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது.இதனால் காஷ்மீரில் இந்திய ராணுவ தளபதி எம்.எம்.நாரவனே சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்குஇடையில் இந்திய ராணுவ தளபதி எம்.எம். நாரவனே செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் .அப்பொழுது அவர் கூறுகையில்,கொரோனா காரணமாக உலக நாடுகளும் இந்தியாவும் பிற பகுதிகளுக்கு மருந்துகளை அனுப்பி வருகின்றது.ஆனால் பாகிஸ்தான் மட்டும் பயங்கரவாதத்தை … Read more

அப்போதைய கிரிக்கெட்டுக்கு இப்போதைய கிரிக்கெட்டும் உள்ள வித்தியாசம் – இன்சமாம்

20 ஓவர் போட்டியில் ரன்கள் குவிக்கப்பட்டாலும், ஆக்ரோஷம் குறைவாகத்தான் உள்ளது என முன்னாள் பாகிஸ்தான் வீரர் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் இன்சமாம் சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். அதில், அப்போதைய கிரிக்கெட்டுக்கு இப்போதைய கிரிக்கெட்டுக்கு உள்ள வித்தியாசத்தை பகிர்ந்துகொண்டார். தனக்கு ஒருமுறை சர் விவியன் ரிச்சர்ட்சனுடன் இணைந்து பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைத்தது. அப்போது என்னிடம் வந்து அவர், நம் இருவரில் யார் அதிகம் தூரம் சிக்ஸர் அடிக்கிறார்கள் என்று சவால் ஒன்று … Read more

பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் கொரோனாவிற்கு பலி.!

உலகம் முழுக்க கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து கொண்டே இருக்கிறது. இந்த வைரஸின் தாக்கம் நமது அண்டை நாடான பாகிஸ்தானிலும் அதிகரித்து கொண்டிருக்கிறது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,716-ஆக உள்ளது. 96 பேர்  கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர். இதில், அந்நாட்டை சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸஃபார் சர்ப்ராஸும் கொரோனவால் உயிரிழந்துள்ளார். கொரோனா பாதிக்கப்பட்டு பெஷாவரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவர் 1988 ஆம் ஆண்டு முதல் 1994 ஆண்டு வரையிலான … Read more

பாகிஸ்தான் ராணுவத்தின் துப்பாக்கி சூட்டிற்கு தக்க பதிலடி கொடுத்த இந்தியா.!

ஜம்மு காஷ்மீர் இல்லையில் பாகிஸ்தான் ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர்.  இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் எப்போதோ போடப்பட்டுவிட்டது. இருந்தும், பாகிஸ்தான் வீரர்கள் அவ்வப்போது தொடர்ந்து காஷ்மீரில் உள்ள இந்திய எல்லைகளில் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தி வருகின்றனர். இவ்வாறு காஷ்மீரில் உள்ள பூஞ்ச் மற்றும் குப்வாரா பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் அப்பகுதியை சேர்ந்த ஜாவீத் கான், ரசூல் கான், சவுகிபால் ஆகியோர் … Read more

இந்திய உளவு விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது பாகிஸ்தான் ராணுவம்.!

எல்லை கட்டுப்பாட்டு கோட்டை மீறி வந்த இந்திய உளவு விமானத்தை சுட்டு வீழ்த்தப்பட்டது என பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்து உள்ளது. சிறிய அளவிலான இந்திய உளவு விமானம் ஒன்று சங்க் பகுதியில் எல்லை கட்டுப்பாட்டு கோட்டை தாண்டி வந்து   பாகிஸ்தானில் அத்துமீறி நுழைந்து உளவு பார்ப்பதற்காகவும்  அதனால் அந்த விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் கூறியுள்ளது. இதுகுறித்து பாகிஸ்தான் ராணுவம் கூறுகையில் , இந்திய ராணுவத்தின் இதுபோன்ற தேவையற்ற செயல்கள் இருநாட்டு வான்வழி ஒப்பந்தத்தையும் மீறிய … Read more

பாகிஸ்தானில் மசூதியில் நடைபெற்ற தொழுகை! தடுத்து நிறுத்திய போலீசாரை விரட்டியடித்த மக்கள்!

சீனாவை தொடர்ந்து பல இடங்களில் கொரோனா வைரஸானது மிக தீவிரமாக பரவி வருகிறது. இந்நிலையில், உலக நாடுகள் அனைத்தும், இந்த நோய் தொற்றில் இருந்து தங்களது நாட்டை பாதுகாத்து கொள்ள பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.  இதனால் பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் அதிகமாக கூடும் வணிக வளாகங்கள் மூடப்பட்டுள்ளது.  கோவில்கள், ஆலயங்கள் மற்றும் மசூதிகளில் எந்த மத வழிபாடுகளும் நடத்த வேண்டாம் என்றும் கூறப்பட்டுள்ளது.  இந்நிலையில், பாகிஸ்தானில் மசூதி ஒன்றில் வெள்ளிக்கிழமை … Read more

கொரோனா தொற்றால் லண்டனில் மரணித்த பாகிஸ்தான் ஸ்குவாஷ் நட்சத்திரம்.!

கொரோனா தொற்று காரணமாக உலகம் முழுவதும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரை 7 லட்சத்து 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை இந்த வைரஸ் பாதித்துள்ளது. 37 ஆயிரத்திற்கும் அதிகமானோர் இந்த வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.  இந்த கொரோனா வைரஸ் தொற்றுக்கு பாகிஸ்தான் ஸ்குவாஷ் முன்னாள் நட்சத்திர வீரர் ஆஸம் கான்பலியாகியுள்ளார். பிரிட்டிஷ் ஓபன் ஸ்குவாஷ் தொடரில் பங்கேற்று 1959, 1960, 1961 ஆகிய ஆண்டுகளில் வென்று ஹாட்ரிக் சாதனை படைத்திருந்தார். இவர் 1956ல் இருந்து இங்கிலாந்தில் … Read more

இந்தியாவை போல் ஊரடங்கை அறிவிக்க முடியாது – பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்

சீனாவை தொடர்ந்து கொரோனா வைரஸ் நோயானது தற்போது இந்தியாவிலும், 500-க்கும் மேற்பட்ட மக்களை பாதித்துள்ளது. இதனையடுத்து, மக்கள் நலனை கருத்தில் கொண்டு, இந்திய பிரதமர் நரேந்திர மோடி, வரும் ஏப்ரல் 14-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளார்.  இந்தியாவில் மட்டுமல்லாது மற்ற நாட்டுகளிலும் இந்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அவர்கள் கூறுகையில், ‘இந்தியாவை போல் பாகிஸ்தானில் ஊரடங்கை அறிவிக்க முடியாது.’ என தெரிவித்துள்ளார்.  

5 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.20,000 அபராதம் – தேசிய புலனாய்வு நீதிமன்றம் தீர்ப்பு.!

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக, சென்னை வளசரவாக்கத்தில் தங்கி இருந்த இலங்கையை சேர்ந்த அருண் செல்வராஜன் என்பவர் கடந்த 2013ம் ஆண்டு தேசிய புலனாய்வு சிறப்பு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு பூந்தமல்லியில் உள்ள தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. பின்னர் வழக்கை விசாரித்த வந்த நீதிபதி செந்தூர்பாண்டி நேற்று தீர்ப்பு வழங்கினார். அந்த தீர்ப்பில் பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக அருண் செல்வராஜனுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அத்துடன் … Read more

மீண்டும் பாகிஸ்தான் ராணுவ நிலைகள் மீது இந்தியா தாக்குதல்.!

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பாகிஸ்தான் நாட்டுக்குள்ளே, பாலகோட் பகுதிக்குள் இந்திய விமானப்படை விமானங்கள் பாய்ந்து சென்று குண்டு வீசி தீவிரவாத முகாம்களை அழித்து விட்டு திரும்பி வந்தன. இதையடுத்து இந்திய எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்த முற்பட்டது. அதை இந்திய விமானப்படை சிறப்பாக கையாண்டு விரட்டியடித்தது. இந்த நிலையில், இந்திய ராணுவம் தற்போது பாகிஸ்தானுக்கு மற்றொரு அதிர்ச்சியை அளித்துள்ளது.  அதாவது ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா செக்டார் பகுதியில், பீரங்கி குண்டுகளை பாகிஸ்தான் ராணுவ நிலைகளை … Read more