அப்போதைய கிரிக்கெட்டுக்கு இப்போதைய கிரிக்கெட்டும் உள்ள வித்தியாசம் – இன்சமாம்

20 ஓவர் போட்டியில் ரன்கள் குவிக்கப்பட்டாலும், ஆக்ரோஷம் குறைவாகத்தான் உள்ளது என முன்னாள் பாகிஸ்தான் வீரர் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் இன்சமாம் சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். அதில், அப்போதைய கிரிக்கெட்டுக்கு இப்போதைய கிரிக்கெட்டுக்கு உள்ள வித்தியாசத்தை பகிர்ந்துகொண்டார். தனக்கு ஒருமுறை சர் விவியன் ரிச்சர்ட்சனுடன் இணைந்து பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைத்தது. அப்போது என்னிடம் வந்து அவர், நம் இருவரில் யார் அதிகம் தூரம் சிக்ஸர் அடிக்கிறார்கள் என்று சவால் ஒன்று வைத்துக்கொள்ளலாமா என கேட்பார். அதற்கு நானும் சிரிச்சுக்கொண்டே நிச்சியமாக என கூறினேன். நான் அப்போது மனதில் நினைத்தேன், இவர் ஓய்வு பெற்ற வீரர்தானே என அலட்சியமாக நினைத்தேன் என்று கூறினார்.

பின்னர் பேசிய அடுத்த ஓவரில் ரிச்சர்ட்சன் சிக்ஸர் அடித்தார். அந்த பந்து மைதானத்தின் வெளியே உள்ள பார்க்கிங் ஏரியாவில் விழுந்தது. இதையடுத்து நான் அடித்த சிக்ஸர் அதை தாண்டி விழுந்தது. அப்போது நான் அவரிடம் சொன்னேன், உங்களைவிட அதிகம் தூரம் முடித்துவிட்டேன் என்றேன். அதற்கு அவர் போட்டி இன்னும் முடியவில்லை விளையாடிக்கொண்டுதான் இருக்கிறோம் என்று கூறிவிட்டு அடுத்தடுத்த அவர், விளாசிய சிக்ஸர்கள் மைதானத்தின் வெளியே இருக்கும் வீடுகளில் விழுந்தது என்று கூறினார் இன்சமாம்.

பின்னர் இப்போதுள்ள வீரர்களை பற்றி பேசிய இன்சமாம், சர்வதேச போட்டியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகும் ரிச்சர்ட்சனிடம் இருந்த பலம் என்னை வியக்கவைத்தது. அவரிடம் இருந்து தற்போது உள்ள வீரர்கள் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் ஆக்ரோஷமான ஆட்டம் இப்போதைய வீரர்களிடம் இல்லை என தெரிவித்தார். மேலும் 20 ஓவர் போட்டியில் ரன்கள் குவிக்கப்பட்டாலும், ஆட்டத்தில் ஆக்ரோஷம் குறைவாகத்தான் உள்ளது. வீரர்கள் விளையாடும் போது வேகம் இருந்ததால் தான் ரசிகர்கள் ரசிப்பார்கள் என குறிப்பிட்டுள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்