பிரதமர் மோடி வருகை…! சமூக செயற்பாட்டாளர் முகிலன் கைது…!

ஈரோடு சென்னிமலையில் உள்ள இல்லத்தில் முகிலனை போலீசார் கைது செய்துள்ளனர். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் 6-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சியினரும் தேர்தல் பரப்புரையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அரசியல்  பிரபலங்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இன்று பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார். இதனையடுத்து பிரதமர் மோடிக்கு கருப்பு கொடி காட்ட உள்ளதாக சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர் முகிலன் … Read more

முகிலனை மீண்டும் கைது செய்தது காவல் துறை – பாலியல் வழக்கில் கைது

சமூக ஆர்வலர் முகிலனை பாலியல் குற்றச்சாட்டு வழக்கில் தற்போது மீண்டும் காவல்துறை கைது செய்துள்ளது. கரூரை சேர்ந்த பெண்மணி குடுத்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் துப்பாக்கிசூடு வழக்கில் அரசுக்கு எதிராக முகிலன் அவர்கள் ஆதாரங்களை திரட்டிய நிலையில், கடந்த பிப்ரவரி மதம் முதல் காணாமல் போனார். சுமார் 140 நாட்களுக்கு பின்னர், நேற்று இரவு திருப்பதி ரயில் நிலையத்தில் இருந்து சிபிசிஐடி காவல் துறையினர் காட்பாடி வழியாக சென்னை அழைத்து வந்தனர். சிபிசிஐடி … Read more

முகிலனை நாய் கடித்துள்ளது ! சாப்பிடாமல் பலவீனமாக உள்ளார்-சிபிசிஐடி  போலீசார் விசாரணையில் தகவல்

சுமார் 140 நாட்களுக்கு  பின்னர் காணாமல் போன முகிலன் நேற்று கண்டுபிடிக்கப்பட்டார்.ஆந்திர போலீசின் கைவசம் இருந்த அவர் தமிழக சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். இதனையடுத்து முகிலனை சிபிசிஐடி  போலீசார் சென்னையில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் முகிலனை நாய் கடித்துள்ளதாக சிபிசிஐடி விசாரணையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது .மேலும் முகிலனை பரிசோதித்த போது நாய் கடித்ததற்கான காயம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .நாய்க்கடிக்கு ஊசி போடப்பட்டதாகவும், சாப்பிடாததால் உடல் பலவீனமாக உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது

கள்ளக்குறிச்சி அருகே கார் டயர் வெடித்து முகிலன் மனைவி காயம்

முகிலன் எங்கே ?என்ற கேள்விக்கு நேற்று விடைகிடைத்தது திருப்பதி ரயில்நிலையத்தில் தாடியுடன் இருந்த முகிலனை போலீசார் அவரை அழைத்து செல்லும் போது கோஷம் எழுப்பியவாறு சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலானது . சந்தேகத்திற்கு இடமான நபர் தாடியுடன் இருப்பதை கண்ட ஆந்திர போலீசார் அவரை கைது செய்து அழைத்து சென்றனர். இந்த தகவலை அறிந்த தமிழக சிபிசிஐடி போலீசார் ஆந்திர போலீசை தொடர்பு கொண்டு முகிலன் பற்றி தகவலை அனுப்பி வைத்து அவரை தங்களிடம் … Read more

தமிழகம் வந்தார் முகிலன்! சிபிசிஐடி போலீசார் விசாரணை

முகிலன் இந்த பெயரை அறியாதவர் எவருமில்லை .சமூக செயற்பாட்டாராளான இவர் கடந்த பிப்ரவரி மாதம் ஸ்டெர்லைட் குறித்து ஆவணப்படம் வெளியிட்டுவிட்டு எழும்பூர் ரயில் நிலையம் வந்த பிறகு காணாமல் போனார் .இதனை தொடர்ந்து இவரை கண்டுபிடித்து தர தொடர்ந்த ஆட்கொணர்வு மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கானது நடந்து வந்தது . இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வந்தனர் .அவர் காணமால் போய் 150 நாட்கள் ஆன நிலையில் நேற்று முகிலன் நண்பர் சண்முகம்  திருப்பதி ரயில்நிலையத்தில் … Read more

திருப்பதி ரயில் நிலையத்தில் முகிலன் ! நேரில் பார்த்த நண்பர் சண்முகம் தகவல்

சமூக செயற்பாட்டாளர் முகிலன்  பிப்ரவரி 15-ஆம் தேதி ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு குறித்து குறும்படம் ஒன்றை வெளியிட்டார். அன்று இரவிலிருந்து அவரைக் காணவில்லை. எனவே காணாமல் போன முகிலன் குறித்து ஹென்றி திபேன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்தார்.இவரது மனு  தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் முகிலன் குறித்து அவரது நண்பர் சண்முகம் தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்.அவர் கூறிய தகவலில், திருப்பதியில் ரயில் நிலையத்தின் முதல் நடைமேடையில் … Read more

முகிலன் காணாமல் போன விவகாரம்! அரசு விளக்கமளிக்க வேண்டும் : பா.ரஞ்சித்

இயக்குனர் பா.ரஞ்சித் பல படங்களை இயக்கியுள்ளார். இவர் சினிமாவில் மட்டுமல்லாது சமூக அக்கறை கொண்டவரும் கூட. இவர் ஓசூர் அருகே ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், சமூக செயற்பாட்டாளர் முகிலன் காணாமல் போனதில் பல மறைக்கப்பட்ட உண்மைகள் இருப்பதாகவும், இதுகுறித்து அரசு விளக்கம் தர வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், தமிழக இளைஞர்களிடம் வேலை இன்மை அதிகரித்துள்ளதாகவும், அரசு வேலைவாய்ப்புகள் மற்ற மாநிலத்தவர்களுக்கு அதிகமாக வழங்கப்படுவதாக குற்றம் சாட்டியுள்ளார்.

சமூக செயற்பாட்டாளர் முகிலன் காணாமல் போன விவகாரம்….! காவல் ஆய்வாளர் நாகராஜனை விசாரிக்க சிபிசிஐடி முடிவு….!!

சமூக செயற்பாட்டாளர் முகிலன் ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வீடியோ ஒன்றை வெளியிட்ட பின்னர் காணவில்லை. இந்த விவகாரம் தொடர்பாக  திருப்பரங்குன்றம் காவல் ஆய்வாளர் நாகராஜனை விசாரிக்க சிபிசி ஐடி முடிவு செய்துள்ளது. தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி பல போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த போராட்டத்தில் 13 உயிர்கள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இந்த ஆலையை திறப்பதற்கு மறுப்பு தெரிவித்து, உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருந்தது. இதற்கிடையில் சமூக செயற்பாட்டாளராக முகிலன், ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான … Read more