தமிழகம் வந்தார் முகிலன்! சிபிசிஐடி போலீசார் விசாரணை

தமிழகம் வந்தார் முகிலன்! சிபிசிஐடி போலீசார் விசாரணை

முகிலன் இந்த பெயரை அறியாதவர் எவருமில்லை .சமூக செயற்பாட்டாராளான இவர் கடந்த பிப்ரவரி மாதம் ஸ்டெர்லைட் குறித்து ஆவணப்படம் வெளியிட்டுவிட்டு எழும்பூர் ரயில் நிலையம் வந்த பிறகு காணாமல் போனார் .இதனை தொடர்ந்து இவரை கண்டுபிடித்து தர தொடர்ந்த ஆட்கொணர்வு மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கானது நடந்து வந்தது .

இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வந்தனர் .அவர் காணமால் போய் 150 நாட்கள் ஆன நிலையில் நேற்று முகிலன் நண்பர் சண்முகம்  திருப்பதி ரயில்நிலையத்தில் முகிலனை பாத்ததாகவும் அவரை  போலீசார் அழைத்து சென்றனர் என்று அவர் முகிலன் மனைவிக்கு தொலைபேசி மூலம் தெரிவித்தார்.

இதனிடையில்   திருப்பதி ரயில்நிலையத்தில் போலீசார் அவரை கைது செய்து அழைத்து செல்லும் போது கோஷம் எழுப்பியவாறு செல்லும்  வீடியோ வெளியானது.

இதனையறிந்த தமிழக  சிபிசிஐடி போலீசார் ஆந்திர போலீசை தொடர்புகொண்டு முகிலனை ஒப்படைக்குமாறு வேண்டுகோள் விடுத்தனர். இதன் பின்னர் வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடி ரெயில்வே போலீஸ் ஸ்டேஷனுக்கு முகிலன் அழைத்து வரப்பட்டாா்.இதனையடுத்து முகிலன் சிபிசிஐடி  போலீசாரிடம்  ஒப்படைக்கப்பட்ட பின்னர் சென்னைக்கு அழைத்து செல்லப்பட்டார். சென்னை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில்  வைத்து முகிலனிடம் விசாரணை நடைபெற்று வருவதாக தகவல் தொிவிக்கப்பட்டுள்ளது.

 

author avatar
Dinasuvadu desk
Join our channel google news Youtube