• சமூக செயற்பாட்டாளர் முகிலன் ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வீடியோ ஒன்றை வெளியிட்ட பின்னர் காணவில்லை.
  • இந்த விவகாரம் தொடர்பாக  திருப்பரங்குன்றம் காவல் ஆய்வாளர் நாகராஜனை விசாரிக்க சிபிசி ஐடி முடிவு செய்துள்ளது.

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி பல போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த போராட்டத்தில் 13 உயிர்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் இந்த ஆலையை திறப்பதற்கு மறுப்பு தெரிவித்து, உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருந்தது. இதற்கிடையில் சமூக செயற்பாட்டாளராக முகிலன், ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதனையடுத்து இவரை காணவில்லை என்ற செய்தி பரவி வந்தது. இதற்கிடையில், சமூகவலைதளத்தில் முகிலன் குறித்து நாகராஜன் அவதூறாக செய்திகளை பரப்பிவந்துள்ளார்.

இதனையடுத்து, திருப்பரங்குன்றம் காவல் ஆய்வாளர் நாகராஜனை விசாரிக்க சிபிசிஐடி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.