சிக்ஸ் அடித்து வென்ற பிறகே நாட்கள் ஓடிவிட்டன…!கடைசி பந்து சிக்ஸ் வெற்றிக்குப் பிறகே அடுத்த கட்டத்திற்கு நகர வேண்டும்…!

 தினேஷ் கார்த்திக் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் புதிய கேப்டனாக  பொறுப்பேற்றுள்ள நிலையில், தனக்கு அழுத்தம் உள்ளது என்றும் எனினும் அதனை சிறப்பாகக் கையாள முடியும் என்றும் நம்புவதாகத் தெரிவித்துள்ளார். கம்பீர் தலைமையின் கீழ் கொல்கத்தா அணி ஐபிஎல் டி20 கிரிக்கெட்டில் 2012, 2014-ல் சாம்பியன் பட்டம் வென்றது, மேலும் 2011, 2016, 2017-ம் ஆண்டுகளில் பிளே ஆஃப் சுற்றுவரை வந்தது.   இந்நிலையில் அணியின் புதிய சீருடை அறிமுக நிகழ்ச்சியில் கொல்கத்தாவில் தினேஷ் கார்த்திக் கூறியதாவதுகேகேஆர் அணிக்கு கவுதம் … Read more

ஸ்டாலின் வாரியம் வரும் வரை சிறையில் இருக்க தயாரா?

பா.ஜ.க மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் காவிரி பிரச்னைக்காக போராட்டத்தில் ஈடுபட்டு, கைதாகி மாலையில் விடுதலையாகும் ஸ்டாலின், வாரியம் அமைக்கும் வரை சிறையை விட்டு வெளியே செல்ல மாட்டேன் என்று சிறையிலிருக்க தயாரா? என  தெரிவித்துள்ளார். தருமபுரியில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை, ‘தி.மு.க, காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கள், வைகோ, திருமா ஆகியோரால் மறுக்கப்பட்ட காவிரி நீர், பா.ஜ.கவால் மட்டுமே கொண்டு வர முடியும். இவர்கள் எவ்வளவுதான் போராடினாலும் காவிரி தண்ணீர் கிடைக்காது. தமிழகத்திற்கு காவிரி நீர் கிடைக்காததற்கு காரணம் தி.மு.க … Read more

அதிர்ச்சி தகவல் …!புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்…!

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி வீட்டுக்கு வெடிகுண்டு வைத்ததாக மர்மநபர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர். காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம நபர் தொலைபேசியில் மூலம் மிரட்டல் விடுத்தார். மிரட்டலை அடுத்து எல்லையம்மன் கோயில் வீதியில் உள்ள நாராயணசாமி வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது. மோப்ப நாய்கள் உடன் நடத்திய சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரிவந்துள்ளது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து பண்டாரம்பட்டி கிராமத்தில் போராட்டம் …!

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து  பண்டாரம்பட்டி கிராமத்தில்  போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தூத்துக்குடியில் உள்ள காப்பர் தயாரிக்கும் ஸ்டெர்லைட் ஆலையால் விவசாயம் பாதிக்கப்படுவதோடு குடிநீரால் அப்பகுதி மக்களும் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதற்கு முன் , தூத்துக்குடியில் இயங்கி வரும் ‘வேதாந்தா’ நிறுவனத்தின் அங்கமான ஸ்டெர்லைட் ஆலையின் 25 ஆண்டு ஒப்பந்தம், அடுத்த ஆண்டு முடிவடைகிறது.ஆலையின் அடுத்த விரிவாக்கத்திற்காக, அந்நிறுவனம் விரிவாக்கப் பணியினை தொடங்கி உள்ளது. ஆலையிலிருந்து வெளியாகும் நச்சுப் புகையால், சுற்றுச்சூழல் பாதிப்பும், சுற்றியுள்ள … Read more

வாகனத் தயாரிப்பு நிறுவனங்கள் பதிவெண் பலகையுடன் வாகனங்களை வழங்கும்…!

மத்தியச் சாலைப் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி வாகனத் தயாரிப்பு நிறுவனங்கள் பதிவெண் பலகைகளுடன் கூடிய வாகனங்களை வழங்குவது விரைவில் நடைமுறைக்கு வரும் என தெரிவித்துள்ளார். இப்போது விற்பனையாகும் வாகனங்களுக்கு அதை வாங்குபவரே போக்குவரத்து அலுவலகத்தில் பதிவுசெய்த பின் பதிவெண் பலகையைத் தனியாக விலை கொடுத்து வாங்கிப் பொருத்த வேண்டியுள்ளது. எண்ணூறு ரூபாய் முதல் நாற்பதாயிரம் ரூபாய் வரை விலையுள்ள பதிவெண் பலகைகள் உள்ளன. வாகனத் தயாரிப்பு நிறுவனங்களே பதிவெண் பலகைகளை வாகனங்களில் பொருத்தி வழங்கும் முறை … Read more

சச்சின் செய்த செயலை பாருங்கள் …!6 ஆண்டுகளாக பெற்ற ஊதியமான ரூ.90 லட்சத்தையும் நிவாரண நிதிக்கு அளித்த டெண்டுல்கர்..!

பிரதமர் நிவாரண நிதிக்கு தான் 6 ஆண்டுகளாக மாநிலங்களவையின் நியமன உறுப்பினராக இருந்தபோது பெற்ற 90 லட்சம் ரூபாய் ஊதியத்தை, டெண்டுல்கர் நன்கொடையாக அளித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டெண்டுல்கர் மாநிலங்களவையின் நியமன உறுப்பினராக 6 ஆண்டுகள் பணியாற்றினார். அண்மையில் அவர் அந்த பதவியிலிருந்து ஓய்வு பெற்றார். அவருக்கு கடந்த 6 ஆண்டுகளில் ஊதியம் மற்றும் இதர சலுகைகள் என மொத்தம் 90 லட்ச ரூபாய்  வழங்கப்பட்டது. அந்த தொகை முழுவதையும் பிரதமர் நிவாரண நிதிக்கு … Read more

எகிறிய பெட்ரோல்,டீசல் விலை …!மக்கள் கடும் அவதி …!

4 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு டீசல் விலை உயர்வை சந்தித்துள்ளது,இதேபோல்  பெட்ரோல் விலையும் உயர்ந்துள்ளது. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 76 ரூபாய் 48 பைசாவிற்கு விற்கப்படும் நிலையில் , டீசல் விலை முதன்முறையாக 68 ரூபாயை கடந்து 68 ரூபாய் 12 பைசாவிற்கு விற்கப்படுகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு ஏற்ப எண்ணெய் நிறுவனங்களே பெட்ரோல், டீசல் விலையை மாற்றியமைத்து வருகின்றன. 2012 முதல் 2016 வரையிலும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் … Read more

சென்னை மெரினா கடற்கரைக்குப் பொதுமக்கள் செல்ல வழக்கம்போல் அனுமதி…!

ஆயிரத்துக்கு மேற்பட்ட காவலர்கள் சென்னை மெரினா கடற்கரையில் போராட்டத்தை தடுக்க  குவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று கெடுபிடிகளைத் தளர்த்திப் பொதுமக்கள் கடற்கரைக்கு நடந்து செல்ல அனுமதிக்கப்பட்டது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததைக் கண்டித்துச் சென்னைப் பட்டினப்பாக்கம் கடற்கரையில் நூற்றுக்கு மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் ஞாயிறு அன்றும் ஏராளமானோர் போராட்டத்தில் ஈடுபடக்கூடும் எனக் கருதி அதைத் தடுப்பதற்காகக் கடற்கரை முழுவதும் ஆயிரத்துக்கு மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். கடற்கரைச் சாலையில் இருந்து கடற்கரைக்கு எந்த வாகனமும் செல்ல முடியாத … Read more

தஞ்சையில் 17 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை, வெறிபிடித்த 6 பேர் கைது…!

6 பேர் கொண்ட  கும்பல் தஞ்சையில் ஆண் நண்பர் ஒருவருடன் தனியாக நின்று பேசிக் கொண்டிருந்த 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளது. தஞ்சை பர்மா காலணியை சேர்ந்த பதினோறாம் வகுப்பு பயிலும் மாணவி, அதே பகுதியைச் சேர்ந்த தனது ஆண் நண்பருடன் சனிக்கிழமை இரவு வெட்டிக்காடு புது ஆற்றுப் பாலத்தில் நின்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது ஆற்றின் ஓரத்தில் மணல் திருடிக் கொண்டிருந்த கார்த்தி, இளவரசன் ஆகிய இருவரும் மாணவியும், மாணவனும் தனிமையில் பேசிக் … Read more

அடுத்த பேய் ஹிட்டுக்கு தயாராகும் லேடி சூப்பர்ஸ்டார்…!பேய் ஹிட் அடிக்குமா ?

‘பாரி (Pari)’ அனுஷ்கா சர்மாவின் நடிப்பில் சமீபத்தில் வெளியாகியுள்ள படம் ஆகும். ஹாரர் ஜானரில் எடுக்கப்பட்ட இந்தப் படம் பாலிவுட்டில் அனுஷ்கா எதிர்ப்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. ஆனால் கதையும் அவரது கதாபாத்திரமும் அழுத்தமாக உள்ளதால் இப்படத்தை தமிழில் ரீமேக் செய்ய முயற்சிகள் நடக்கின்றன. இதன் ரீமேக் உரிமையை ஒரு பிரபல தயாரிப்பாளர் பெரிய தொகை கொடுத்து வாங்கியுள்ளதாக ஒரு தகவல் வெளிவந்துள்ளது. மேலும் அனுஷ்காவின் ரோலுக்கு நயன்தாரா பொருத்தமானவராக இருப்பார் என்பதால் அவரை கேட்கவிருப்பதாகவும் அத்தகவல் … Read more