சிகிச்சைப் பலனின்றி தீக்குளித்த மதிமுக தொண்டர் உயிரிழப்பு!

சிகிச்சைப் பலனின்றி மதுரையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் நடைபயண தொடக்க விழாவின்போது தீக்குளித்த மதிமுக தொண்டர்  உயிரிழந்தார். நியூட்ரினோ திட்டத்தை எதிர்த்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, சனிக்கிழமை மதுரையில் நடைபயணத்தை தொடங்கினார். தொடக்க விழாவில் கலந்து கொண்ட சிவகாசியைச் சேர்ந்த மதிமுக தொண்டர் ரவி என்பவர் திடீரென தனது உடலில் பெட்ரோல் ஊற்றிக்கொண்டு தீக்குளித்தார். 92% தீக்காயங்களுடன் மதுரை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவர் இரு நாட்கள் கழித்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சிவகாசியில் அச்சகம் ஒன்றை … Read more

ஏப்ரல் 5ம் தேதி மத்திய அரசை கண்டித்து தமிழகத்தில் முழு அடைப்புப் போராட்டம்!

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்  காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசை கண்டித்து வரும் 5-ம் தேதி தமிழகத்தில் முழு அடைப்புப் போராட்டம் நடத்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வாரங்களுக்குள் அமைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் கடந்த பிப்ரவரி 16-ம் தேதி உத்தரவிட்டிருந்தது. எனினும், நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததுடன், மேலும் 3 மாதம் கால அவகாசங்கள் கேட்டு உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மனு … Read more

அதிர்ச்சி செய்தி …! ஸ்டாலின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்…!

ஆழ்வார்பேட்டையில் உள்ள திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வீட்டிற்கு நள்ளிரவில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது .பின்னர்  காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த தொலைபேசி அழைப்பை அடுத்து நள்ளிரவில் கோபாலபுரம் மற்றும் ஆழ்வார்பேட்டை இல்லத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினர். இதற்கு முன் நேற்று இதேபோல்  புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி வீட்டுக்கு வெடிகுண்டு வைத்ததாக மர்மநபர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர். காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம நபர் தொலைபேசியில் மூலம் மிரட்டல் விடுத்தார். மிரட்டலை அடுத்து எல்லையம்மன் கோயில் வீதியில் … Read more

சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு இன்று முதல் விசில் அடிக்க கவுன்டர்கள் தொடக்கம் .!

இன்று  (ஏப்ரல் 2-ம் தேதி) 11-வது ஐபிஎல் சீசன் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சென்னையில் விளையாடும் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை தொடங்குகிறது. 11-வது ஐபிஎல் சீசன் போட்டி வரும் ஏப்ரல் 7-ம் தேதி தொடங்குகிறது. சூதாட்ட சர்ச்சை காரணமாக, கடந்த 2 ஆண்டுகளாக ஐபிஎல்போட்டியில் விளையாடத் தடை விதிக்கப்பட்டு இருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த ஆண்டு விளையாட வருகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் கேப்டன் தோனி, ரவிந்திர ஜடேஜா, சுரேஷ் … Read more

யார் யாருக்கோ தமிழகத்தில் முதலமைச்சராகும் ஆசை வந்துவிட்டது…!

போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தமிழகத்தில் யார் யாருக்கோ முதலமைச்சராகும் ஆசை வந்து விட்டதாக  விமர்சித்துள்ளார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி கரூர் நகராட்சிக்குட்பட்ட சின்னாண்டான் தெருவில் நகர எம்.ஜி.ஆர். இளைஞரணி சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கலந்து கொண்டு வேட்டி, சேலை, குடம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அவர், சினிமாவில் நடித்தவர்களெல்லாம் எம்.ஜி.ஆர். ஜெயலலிதா போன்று நினைத்துக் கொண்டு அரசியலுக்கு வந்துவிட்டதாக கூறினார். … Read more

அர்ஜூன் நடித்த காட்சியில் வருவது போல அபிஷேகம் செய்த தெலுங்கானா ராஷ்டிர சமிதி தொண்டர்கள்..!

தெலுங்கானா ராஷ்டிர சமிதி தொண்டர்கள்  தெலுங்கானா மாநில சட்டப்பேரவை சபாநாயகர் ஸ்ரீகோண்டா மதுசூதன் சாரிக்கு பால் அபிஷேகம் செய்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர். தெலுங்கானா மாநிலத்தின் பூபாலாபெல்லி மாவட்டத்தில் உள்ள ஆரோபெல்லி கிராமத்தில், புதிதாக அமைக்கப்பட்ட கிராமப் பஞ்சாயத்து அலுவலகத்தை, அம்மாநில சட்டப்பேரவை சபாநாயகர் ஸ்ரீகோண்டா மதுசூதன் சாரி திறந்துவைத்தார். நிகழ்ச்சிக்கு வந்த அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுத்த சந்திரசேகர ராவின் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி தொண்டர்கள் அவரை அமரவைத்து முதல்வன் படத்தில் அர்ஜூனுக்கு பால் அபிஷேகம் செய்வது … Read more

மதுரை ஆதீனம் கமலின் அரசியல் பிரவேசம் குறித்து என்ன சொல்கிறார்?

மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் நரேந்திர மோடி அரசு பக்தியுள்ள அரசு, என கருத்து தெரிவித்துள்ளார். திருவண்ணாமலையில் செய்தியாளர்களிடம் பேசிய மதுரை ஆதீனம் அருணகிரிநாதர், நரேந்திர மோடி அரசு பக்தியுள்ள அரசு என்பதாலும், மத்திய அரசின் ஒத்துழைப்பு தமிழகத்திற்கு அவசியம் என்பதாலும், அதனை ஆதரிப்பதாகக் கூறியுள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க, தமிழக அரசு மட்டும் முயற்சி செய்தால் போதாது, என தெரிவித்துள்ள மதுரை ஆதீனம், இவ்விஷயத்தில் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என கேட்டுக்கொண்டுள்ளார். நடிகர் … Read more

நான் எம்.எல்.ஏ-வாக இருந்தபோது எனது தொகுதி வளர்ச்சிப் பணிகளுக்கு அதிமுக அரசு ஒத்துழைப்பு அளிக்க மறுத்தது…!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் தான் எம்.எல்.ஏவாக இருந்தபோது தனது தொகுதி வளர்ச்சிப் பணிகளுக்கு அதிமுக அரசு ஒத்துழைப்பு அளிக்க மறுத்தாக கூறியுள்ளார். விழுப்புரம் மாவட்டம் ரிஷிவந்தியம் தொகுதிக்குட்பட்ட மணலூர்பேட்டையில் விஜயகாந்த் எம்.எல்.ஏவாக இருந்தபோது புதிய மேம்பாலத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. அந்த மேம்பாலப் பணிகள் முடிந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு திறக்கப்பட்டது. மேம்பாலம் கட்ட நடவடிக்கை எடுத்ததற்காக விஜகாந்திற்கு அவரது கட்சியினர் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேசிய விஜயகாந்த், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், எதிர்க்கட்சித் … Read more

காவிரி மேலாண்மை வாரியம் கேரள கம்யூனிஸ்ட் அரசும், கர்நாடக காங்கிரஸ் அரசும் வேண்டாம் என்கின்றன…!

பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா காவிரி மேலாண்மை வாரியத்திற்கு கேரளாவில் உள்ள கம்யூனிஸ்ட் அரசும், கர்நாடகாவில் உள்ள காங்கிரஸ் அரசும் எதிர்ப்புத் தெரிவித்து வரும் நிலையில், தமிழகத்தில் அந்தக் கட்சிகள் போராட்டம் நடத்துவது ஏமாற்றுவேலை என  தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், நதிகள் மாநிலப்பட்டியலில் உள்ள போது, மத்திய அரசை இதில் குற்றம்சாட்டிப் பேசுவதேன் எனவும் கேள்வி எழுப்பி உள்ளார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்டம் ஏன்?யாருக்கான ஆலை இது ?

மக்களும் மண்ணும் அரசு தன் கடமையைச் சரிவர செய்ய வேண்டுமென்றால்  மீட்கவே முடியாத அளவுக்குப் பாதிப்புக்குள்ளாக வேண்டும். அல்லது அங்கொன்றும் இங்கொன்றுமாக இனம் காண முடியாத நோய்களால் மக்கள் செத்து மடிய வேண்டும். அல்லது குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை சாலையில் திரண்டு போராட வேண்டும். தூத்துக்குடியில் இப்போது அதுதான் நடந்துகொண்டிருக்கிறது. பல ஆண்டுகளாகப் புறக்கணிக்கப்பட்டுவந்த தூத்துக்குடி மக்களின் குரல், இப்போது பேரிரைச்சலாக ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது. அதன் பிறகே அந்த ஊரில் காத்திருக்கும் பேராபத்து குறித்துப் பலரும் பேசத் தொடங்கியிருக்கிறார்கள். … Read more