தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்த இலங்கை பிரதமர்…!

இலங்கைக்கு நிவாரண பொருட்கள் அனுப்பிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த இலங்கை பிரதமர்.  இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், அங்கு வறுமையில் வாடும் மக்களுக்கு உதவும் வண்ணமாக, தமிழக அரசு சார்பில், அரிசி, பால் பவுடர், மருந்து பொருட்கள் உள்ளிட்டவற்றை அனுப்பி வைத்துள்ளனர்.  இந்த பொருட்கள் இலங்கையை சென்றடைந்துள்ள நிலையில், மனிதாபிமான அடிப்படையில், இலங்கைக்கு உதவி கரம் நீட்டிய தமிழக முதல்வருக்கும், தமிழக மக்களுக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளதாக, இலங்கை பிரதமர் ரணில் … Read more

வரும் 26-ஆம் தேதி தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி..!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி  அவர்கள், வரும் 26-ஆம் தேதி சென்னை வருகிறார். இந்திய பிரதமர் நரேந்திர மோடி  அவர்கள், வரும் 26-ஆம் தேதி சென்னை வருகிறார். இதனையடுத்து, மீனம்பாக்கம் விமான நிலையத்தில், பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். ஹைதராபாத்தில் இருந்து தனி விமானம் மூலம் மீனம்பாக்கம் வரும் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்படவுள்ளது. அதனை தொடர்ந்து தனி விமானம் மூலம் அடையாறு செல்லும் அவர், அங்கிருந்து  நேரு ஸ்டெடியத்திற்க்கு சென்று புதிய … Read more

சட்டவிரோத மது விருந்து – காவல் ஆணையர் எச்சரிக்கை

சட்டவிரோதமாக மதுபானக் விருந்து நடத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் ஆணையர் எச்சரிக்கை.  சென்னையின் மையப்பகுதியான கோயம்பேடு அருகே வி.ஆர்.மால் அமைந்துள்ளது. இந்த வணிக வளாகத்தில் உணவகங்கள், துணிக்கடை, செல்போன் மற்றும் நகைக்கடை என அனைத்து வசதிகளும் உள்ளது. இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வருகை புரிவதுண்டு. அதிலும், விடுமுறை நாட்களில் இந்த வணிக வளாகம் கூட்ட நெரிசலாக தான் காணப்படும். இந்த நிலையில் இந்த வணிக வளாகத்தில் நான்காவது தளத்தில் பிரேசிலை சேர்ந்த … Read more

#BREAKING : பொறியியல் மற்றும் பாலிடெக்னீக் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு…!

அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் படிப்புகளுக்கான கட்டணத்தை உயர்த்தி அறிவிப்பு.  அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் படிப்புகளுக்கான கட்டணத்தை உயர்த்துவதாக அறிவித்துள்ளது. B.E.,B.Tech., B.Arch., படிப்புகளுக்கு ஒரு செமஸ்டருக்கு குறைந்தபட்ச கட்டணம் ரூ.79,600, அதிகபட்ச கட்டணம் ரூ.1,89,800 ஆக  நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 3 ஆண்டு MCA படிப்புக்கு குறைந்தபட்சமாக ரூ.88,500, அதிகபட்சமாக ரூ.1,94,100 என்று கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2 ஆண்டு MBA படிப்புக்கு குறைந்தபட்சமாக ரூ.85,000, அதிகபட்சமாக ரூ.1,95,200 … Read more

குரூப்-2 தேர்வில் எந்த கேள்வியும் தவறானவை அல்ல – டிஎன்பிஎஸ்சி

குரூப் 2,2ஏ தேர்வில் எந்த கேள்வியோ, ஆப்ஷன்களோ, மொழிபெயர்ப்போ தவறானவை அல்ல டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு.  தமிழகத்தில் 5529 காலிப்பணியிடங்களுக்கான ஒருங்கிணைந்த குடிமை பணி தேர்வுகள் தொகுதி இரண்டு Group 2 / 2A தேர்வுக்கு ஆண் தேர்வர்கள் 4,96,247 பேரும், பெண் தேர்வர்கள் 6,81,089 பேரும் என மொத்தம் 11.78 லட்சம் பேர் விண்ணப்பித்த நிலையில்,  நேற்று குரூப் 2 தேர்வு திட்டமிட்டபடி  தமிழ்நாடு முழுவதும் TNPSC குரூப் 2 / 2A தேர்வுகள் 4,012 தேர்வு … Read more

5 நாட்கள் நாய் உணவை சாப்பிட்டால் ரூ.5 லட்சம் பரிசு வழங்கப்படும்..! ஆம்னி நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு..!

5 நாட்கள் நாய் உணவை சாப்பிட்டால் ரூ.5 லட்சம் பரிசு வழங்கப்படும் என நாய் உணவு தயாரிக்கும் ஆம்னி நிறுவனம் அறிவித்துள்ளது.  இன்று அதிகமானோர் வீட்டில் செல்லப் பிராணிகள் வளர்க்கப்படுவதுண்டு. அந்த செல்லப்பிராணிகளுக்கு என விதவிதமான உணவுகள் தயாரிக்கப்பட்டு விற்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நாய்களுக்கு உணவு தயாரிக்கும் ஆம்னி என்ற ஒரு நிறுவனம் காய்கறிகள், பழங்கள் கொண்டு தூய்மையான முறையில் மனிதர்களும் சாப்பிடும் வகையில் எந்த ஒரு கெமிக்கல் சேர்க்காமல்  உணவு தயாரிக்கின்றனர். இந்த நிலையில் நிறுவனம் … Read more

இனிமேல் பெட்ரோல் டீசல் விலை தினந்தோறும் அதிகரிக்கும் – ராகுல் காந்தி

பெட்ரோல், டீசல் விலை  நாள்தோறும் மீண்டும் ரூ.0.8, ரூ.0.3 என உயரத்தொடங்கும் என ராகுல் காந்தி ட்வீட்.  பெட்ரோல் மீதான மத்திய கலால் வரியை லிட்டருக்கு 8 ரூபாயும்,டீசல் மீதான லிட்டருக்கு 6 ரூபாயும் குறைக்கிறோம்.இதனால் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.9.5ம், டீசல் விலை லிட்டருக்கு ரூ.7ம் குறையும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தெரிவித்திருந்தார். இதுகுறித்து காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘பெட்ரோல், டீசல் விலை  நாள்தோறும் … Read more

உங்களுக்கெல்லாம் கண்ணீரே இல்லையே அதில் எங்கே ரத்தம் வருவது? – கே.எஸ்.அழகிரியிடம் சீமான் கேள்வி

ரத்தக்கண்ணீர் வருவதாக சொல்கிறீர்களே கே.எஸ்.அழகிரி அவர்களே! உங்களுக்கெல்லாம் கண்ணீரே இல்லையே அதில் எங்கே ரத்தம் வருவது? என சீமான் ட்வீட்.  நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி ராஜீவ் காந்தியை கொன்ற போது எங்களது  கண்களில் கண்ணீர் வந்தது. ஆனால், அந்த கொலையாளிகளின் விடுதலையை திருவிழாவாக கொண்டாடும் போது இதயத்தில் இருந்து ரத்த கண்ணீர் வருகிறது. எங்களால் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை என தெரிவித்திருந்தார். இதுகுறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் … Read more

28 ஆம் தேதி ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் கருணாநிதி சிலை திறப்பு..!

சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கருணாநிதி சிலையை வரும் 28-ஆம் தேதி துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு திறந்து வைக்கிறார். வரும் 28-ஆம் தேதி, சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கருணாநிதி சிலையை துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு திறந்து வைக்கிறார். இந்த நிகழ்வு 28-ஆம் தேதி மாலை 5.30 மணியளவில் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு.அக்.ஸ்டாலினை அவர்கள் தலைமை உரையாற்றவுள்ளார்.  மேலும்,நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்கள், வரவேற்புரையாற்ற உள்ளார். … Read more

தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.   தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக ஐந்து நாட்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னையில் 48-மணி நேரத்திற்கு இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.