குட்கா விற்பனைக்கு உடந்தையாக இருந்த காவல்துறை அதிகாரிகள் பணியிடமாற்றம்..!

transfer

சென்னை ஆவடி காவல் ஆணையத்திற்குட்பட்ட பகுதிகளில் குட்கா விற்பனை தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பதாக காவல்துறையினர் சோதனை  மேற்கொண்டனர். இந்த சோதனையில் பல பகுதிகளில் உள்ள ஒவ்வொரு கடைகளிலும் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின் போது,  113 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டதோடு, 23 கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். மேலும், இவர்களுக்கு அதிகாரிகள் அபராதமும் விதித்து உத்தரவிட்டனர். சென்னையில் 28 பேரை கடித்த நாய்க்கு ரேபிஸ் தொற்று உறுதி..! மேலும், குட்கா விற்பனை … Read more

மீட்பு படையினர் தயார் நிலையில் உள்ளனர் – சென்னை காவல் ஆணையர்

புயல் கரையை கடக்கும் முன்பாகவே மீட்பு குழுவினர் தேவையான இடங்களுக்கு அனுப்பப்பட உள்ளனர் என சங்கர் ஜிவால் பேட்டி.  மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், மீட்பு படையினர் தயார் நிலையில் உள்ளனர்; தேவையான மீட்பு உபகரணங்களும் தயார் நிலையில் உள்ளன மருத்துவ குழுக்கள், அவசர உதவிக்கான குழுக்கள் என அனைவரும் தயாராக உள்ளனர். புயல் கரையை கடக்கும் … Read more

மாணவி சத்யாவின் தாயாரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய ஆணையர் சங்கர் ஜிவால்..!

கொலை செய்யப்பட்ட மனைவி சத்யாவின் வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய ஆணையர் சங்கர் ஜிவால்.  சென்னை ஆதம்பாக்கத்தை சேர்ந்த சதிஷ் (23) என்பவர், அதே பகுதியை சேர்ந்த சத்யா (20) என்ற கல்லூரி மாணவியை காதலித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இருவரும் வழக்கம்போல் பரங்கிமலை ரயில் நிலையத்தில் பேசிக்கொண்டு இருந்தபோது வாக்குவாதம் ஏற்பட்ட காரணத்தால், சதீஷ்  மாணவி சத்யாவை ரயில் முன் தள்ளி கொலை செய்துள்ளார். இதனையடுத்து, சத்யாவை ரயில் முன் தள்ளி கொன்ற குற்றவாளி சதீஷ் … Read more

இனிமேல் இதை விற்கும் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் – சென்னை காவல் ஆணையர் எச்சரிக்கை

பள்ளிகளுக்கு அருகே உள்ள கடைகளில் சிகரெட் போன்ற புகையிலை பொருட்கள் விற்பனை செய்தால், அந்த கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என்று  காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை. சென்னை மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டிருந்த போதை அழிவின் பாதை என்று அமைக்கப்பட்டிருந்த மணல் சிற்பத்தை சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் பார்வையிட்டார். இதனை தொடர்ந்து பேசிய அவர், பள்ளிகளுக்கு அருகே உள்ள கடைகளில் சிகரெட் போன்ற புகையிலை பொருட்கள் விற்பனை செய்தால், அந்த கடைகளுக்கு சீல் வைக்கப்படும் … Read more

சட்டவிரோத மது விருந்து – காவல் ஆணையர் எச்சரிக்கை

சட்டவிரோதமாக மதுபானக் விருந்து நடத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் ஆணையர் எச்சரிக்கை.  சென்னையின் மையப்பகுதியான கோயம்பேடு அருகே வி.ஆர்.மால் அமைந்துள்ளது. இந்த வணிக வளாகத்தில் உணவகங்கள், துணிக்கடை, செல்போன் மற்றும் நகைக்கடை என அனைத்து வசதிகளும் உள்ளது. இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வருகை புரிவதுண்டு. அதிலும், விடுமுறை நாட்களில் இந்த வணிக வளாகம் கூட்ட நெரிசலாக தான் காணப்படும். இந்த நிலையில் இந்த வணிக வளாகத்தில் நான்காவது தளத்தில் பிரேசிலை சேர்ந்த … Read more

‘மோசடி அழைப்புகள்’ – இந்த அழைப்புகளை நம்பி ஏமாறாதீர்கள் – காவல்துறை

இணையங்களில் வரும் கடன் செயலிகள் மூலம் யாரும் கடன் வாங்க வேண்டாம் என்று சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரித்துள்ளார்.  இன்று பலர் மொபைலில் குறுந்செய்தி அனுப்புவதன் மூலமாகவும், அழைப்புகள் மூலமாகவும் மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், இது போன்ற அழைப்புகளை நம்பி ஏமாற வேண்டாம் என சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், pan card, kyc update கோரும் sms-க்கள், otp கேட்கும் போன் அழைப்புகளை … Read more

சென்னையில் பெண்களுக்கான உதவி மையத்தை தொடக்கி வைத்தார் சென்னை காவல் ஆணையர்..!

சென்னையில் ‘நிர்பயா’ திட்டத்தின் கீழ், பெண்களுக்கான ஆலோசனை மற்றும் உதவி மையத்தை சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தொடங்கி வைத்தார். சென்னையில் ‘நிர்பயா’ திட்டத்தின் கீழ், பெண்களுக்கான ஆலோசனை மற்றும் உதவி மையத்தை சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தொடங்கி வைத்தார். மேலும், 181 என்ற இலவச எண்ணில் உதவி மையத்தில் பெண்கள், சிறார்கள் ஆலோசனை பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஆணையர் சங்கர் ஜிவால், ‘நிர்பயா திட்டத்தின் கீழ் … Read more

#BREAKING : பாலியல் புகாரில் கைதான தடகள பயிற்சியாளர் நாகராஜன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது…!

பாலியல் புகாரில் கைதான தடகள பயிற்சியாளர் நாகராஜன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. சென்னை, பாரிமுனை, பிராட்வேயில் பச்சையப்பன் பள்ளி வளாகத்தில் , நாகராஜன் “பிரைம் ஸ்போர்ட்ஸ் அகாடமி”என்ற தடகள பயிற்சி மையத்தை நடத்தி வந்தார். தடகள பயிற்சிக்கு வந்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில் தடகள பயிற்சியாளர் நாகராஜன் மீது போக்சோ, கொலை மிரட்டல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் மீது பூக்கடை போலீசார் வழக்குப்பதிவு கைது … Read more