5 நாட்கள் நாய் உணவை சாப்பிட்டால் ரூ.5 லட்சம் பரிசு வழங்கப்படும்..! ஆம்னி நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு..!

5 நாட்கள் நாய் உணவை சாப்பிட்டால் ரூ.5 லட்சம் பரிசு வழங்கப்படும்..! ஆம்னி நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு..!

Default Image

5 நாட்கள் நாய் உணவை சாப்பிட்டால் ரூ.5 லட்சம் பரிசு வழங்கப்படும் என நாய் உணவு தயாரிக்கும் ஆம்னி நிறுவனம் அறிவித்துள்ளது. 

இன்று அதிகமானோர் வீட்டில் செல்லப் பிராணிகள் வளர்க்கப்படுவதுண்டு. அந்த செல்லப்பிராணிகளுக்கு என விதவிதமான உணவுகள் தயாரிக்கப்பட்டு விற்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நாய்களுக்கு உணவு தயாரிக்கும் ஆம்னி என்ற ஒரு நிறுவனம் காய்கறிகள், பழங்கள் கொண்டு தூய்மையான முறையில் மனிதர்களும் சாப்பிடும் வகையில் எந்த ஒரு கெமிக்கல் சேர்க்காமல்  உணவு தயாரிக்கின்றனர்.

இந்த நிலையில் நிறுவனம் தங்களது நிறுவனத்தை பிரபலப்படுத்தும் வண்ணம் ஒரு போட்டியை அறிவித்துள்ளது. அதன்படி ஆம்னி நிறுவனத்தின் நாய் உணவை ஒரு நபர் ஐந்து நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டால், அவருக்கு ஐந்து லட்சம் பரிசு கொடுக்கப்படும் என்று அறிவித்துள்ளது. இந்த போட்டியில் கலந்து கொள்பவர் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும் என்றும், 18 வயதுக்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த உணவை சாப்பிட்ட பின் அவர்களது அனுபவம் குறித்து நிறுவனத்திடம் தெரிவிக்க வேண்டும் என்றும் ஐந்து நாட்களில் அந்த நபர் தொடர்ந்து இந்த உணவை சாப்பிட்டால் 5 லட்சம் பரிசு கொடுக்கப்படும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது குறித்த நிறுவனத்தின் துணை நிறுவனர் ஷிவ் சிவகுமார் கூறுகையில் ஆம்னி நிறுவனத்தின் பொருட்கள் கலப்படம் இல்லாத தூய்மையான பொருட்கள் நாய் உணவை மனிதர் உட்கொள்ளும் வண்ணம் தயாரித்து வருகிறோம். மலிவான மீதமுள்ள பொருட்களை கொண்டு தயாரிக்காமல் தூய்மையான உருளைக்கிழங்குகள் பருப்புகள் பூசணிக்காய் போன்றவற்றை கொண்டு தயார் செய்கிறோம்.

இந்த உணவுகளை நாங்கள் சிறந்தது என்று சொல்வதை விட மற்றவர்கள் சொல்வது தான் சரியாக இருக்கும். இந்தப் போட்டி நாய்க்கு தயாரிக்கப்படுகின்ற உணவுகள்  மனிதர்களும் சாப்பிடும் வகையில் தரமானதாக இருக்கின்றது என்று சொல்வதற்காகவே அறிவிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

Join our channel google news Youtube