குரூப்-2 தேர்வில் எந்த கேள்வியும் தவறானவை அல்ல – டிஎன்பிஎஸ்சி

குரூப் 2,2ஏ தேர்வில் எந்த கேள்வியோ, ஆப்ஷன்களோ, மொழிபெயர்ப்போ தவறானவை அல்ல டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு. 

தமிழகத்தில் 5529 காலிப்பணியிடங்களுக்கான ஒருங்கிணைந்த குடிமை பணி தேர்வுகள் தொகுதி இரண்டு Group 2 / 2A தேர்வுக்கு ஆண் தேர்வர்கள் 4,96,247 பேரும், பெண் தேர்வர்கள் 6,81,089 பேரும் என மொத்தம் 11.78 லட்சம் பேர் விண்ணப்பித்த நிலையில்,  நேற்று குரூப் 2 தேர்வு திட்டமிட்டபடி  தமிழ்நாடு முழுவதும் TNPSC குரூப் 2 / 2A தேர்வுகள் 4,012 தேர்வு மையங்களில் நடைபெற்றது.

இந்த நிலையில் தற்போது டிஎன்பிஎஸ்சி ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, குரூப் 2,2ஏ தேர்வில் எந்த கேள்வியோ, ஆப்ஷன்களோ, மொழிபெயர்ப்போ தவறானவை அல்ல இன்னும் 5 நாளில் Tentative Answer Key வெளியிடப்படும் தேர்வர்கள் தங்கள் ஆட்சேபனைகளை பதிவு செய்ய ஒரு வார கால அவகாசம் வழங்கப்படும் அதன்பின் வல்லுநர் குழு கூடி விடைகளை இறுதி செய்யும் என தெரிவித்துள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment