தனது மகளுக்கு கொரோனா எனக்கூறி அப்பெண்ணின் திருமணத்தையே நிறுத்திய தந்தை.!

மத்திய பிரதேச மாநிலத்தில், தனது மகள் திருமணம் நடைபெற இருந்த நீதிமன்ற வளாகத்திற்குள் வந்த அந்த பெண்ணின் தந்தை, ‘ எனது மகளுக்கு கொரோனா அறிகுறிகள் உள்ளது.’ என கூறி திருமணத்தையே நிறுத்திவிட்டார். மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள காண்ட்வா மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த திங்கட்கிழமை அன்று ஒரு இளம் ஜோடி திருமணம் செய்ய நண்பர்கள் உதவியுடன் பதிவு செய்திருந்தனர். 19 வயது இளம்பெண் கடந்த திங்களன்று தனது காதலர் மற்றும் அவர்களது நண்பர்கள் உடன் வந்திருந்தார். … Read more

ஒரே நேரத்தில் காதலியையும், பெற்றோர் தேர்ந்தெடுத்த பெண்ணையும் திருமணம் செய்த ம.பி இளைஞர்!

ஒரே நேரத்தில் இரட்டை திருமணமாக தனது காதலியையும் பெற்றோர் தேர்ந்தெடுத்த பெண்ணையும் மணமேடையில் திருமணம் செய்த மத்திய பிரதேச இளைஞர். மத்திய பிரதேசத்தின் பெத்துல் நகரைச் சேர்ந்த சந்தீப் யுகே, பெதுல் மாவட்ட தலைமையகத்திலிருந்து 40 கி.மீ தூரத்தில் கோடடோங்ரி தொகுதிக்குட்பட்ட கெரியா கிராமத்தில் உள்ள இளைஞர் ஒருவர் ஒரே நேரத்தில் தனது காதலியையும் தனது பெற்றோர் பார்த்த பெண்ணையும் மண்டபத்தில் வைத்து திருமணம் செய்துள்ளார். ஏற்கனவே ஹோஷங்காபாத்தைச் சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து வந்ததாகவும், பின் … Read more

கொரோனாவால் இதுவரை 5 லட்சம் திருமணங்களுக்கும் ‘நோ’! முதலிரவுக்கும் ‘நோ’!

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை நடவடிக்கை காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் இதுவரை சுமார் 5 லட்சம் திருமணங்கள் தள்ளிவைக்கப்பட்டுள்ளன என ஒரு தகவல் பரவி வருகிறது.  கொரோனா தொற்றால் பிறப்பிக்கப்பட்டடுள்ள ஊரடங்கால் லட்சக்கணக்கான திருமணங்கள் இதுவரை தள்ளிவைக்கப்பட்டுள்ளன. இதனால் புதுமண வாழ்வில்நுழைய கனவு கண்ட இளம் ஜோடிகள் தங்கள் திருமணம் தள்ளிபோன ஏக்கத்தில் இருக்கின்றனர். குஜராத்தில் ஊரடங்கு காலத்தில் மட்டும் சுமார் 30 லட்சம் திருமணங்கள் தள்ளிவைக்கப்பட்டுள்ளனவாம். அதேபோல பஞ்சாபிலும் சுமார் 30 லட்சம் திருமணங்கள் ஊரடங்கு காலத்தில் … Read more

மத்திய அமெரிக்காவில் நடைபெற்ற ஒரே பாலின ஜோடிகளின் திருமணம்! இணையத்தில் நேரடி ஒளிபரப்பு!

மத்திய அமெரிக்காவில் நடைபெற்ற ஒரே பாலின ஜோடிகளின் திருமணம். அமெரிக்காவில் கொரோனா பாதிப்பால் மக்கள் பீதியடைந்துள்ள நிலையில், மத்திய அமெரிக்காவின் கோஸ்டாரிகாவில் முதன்முறையாக ஒரே பாலின ஜோடிக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. ஒரே பாலின திருமணமானது, ஈக்வடார்,  அர்ஜென்டினா மற்றும் பிரேசில்போன்ற நாடுகளில் சட்ட பூர்வமான நிலையில், மத்திய அமெரிக்காவின் கத்தோலிக்க  கோஸ்டாரிகா நாட்டிலும் இச்சட்டம் அமலுக்கு வந்துள்ளது.  இந்நிலையில், நேற்று கோஸ்டாரிகாவில் முதல் ஒரே பாலின திருமணம் நடைபெற்றது. ஒரே பாலினத்தை சேர்ந்த டரிட்ஸா அராயா மற்றும் … Read more

பெரும் இழப்பால் பிரபல நடிகை எடுத்த அதிரடி முடிவு.!

பெரும் இழப்பால் பிரபல நடிகை அதிரடியாக முடிவு எடுத்துள்ளார்.  தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் ஹீரோயினாக நடித்தவர் சித்தாரா. தற்போது இவர் பல ஹீரோக் களுக்கு அம்மாவாக குணச்சித்திர கதாபாத்திரத்திரங்களில் நடித்து வருகிறார். ஆனால் அவருக்கு 47வயது ஆகிவிட்ட நிலையிலும் இதுவரை திருமணம் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் இவர் அளித்த பேட்டி ஒன்றில் அதன் காரணத்தை கூறியுள்ளார்.  அதில் என் வாழ்க்கையில் திருமணம் செய்து கொள்ள வேண்டாம் என்று முடிவு செய்ததற்கு … Read more

முன்னாள் முதலமைச்சர் மகன் திருமணத்தில் விதி மீறினால் நடவடிக்கை – கர்நாடக துணை முதலமைச்சர் எச்சரிக்கை!

கர்நாடகாவில் உள்ள முன்னாள் முதலமைச்சராகிய குமாரசாமி அவர்களின் மகன் நிகில் கவுடா அவர்களின் திருமணம் இன்று நடைபெறுகிறது. இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் கிருஷ்ணபாப்பாவின் பேத்தி ரேவதியை திருமணம் செய்கிறார்.  இதனை தொடர்ந்து ராம் நகர் மாவட்டத்தில் உள்ள பண்ணை வீட்டில் திருமண நிகழ்ச்சி நடைபெறுகிறது. கொரோனாவால் அதிக அளவில் கூட்டம் கூட கூடாது என்று சொல்லியிருப்பதால் குமாரசாமி நெருங்கிய உறவுகள் மற்றும் நண்பர்கள் மட்டுமே இதில் கலந்துகொண்டுள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு நிச்சயத்திற்கான ஏற்பாடுகள் தடபுடலாக … Read more

144 தடை உத்தரவால் தனது திருமணத்தை தள்ளி வாய்த்த சப் கலெக்டர்!

கொரோனா வைரஸ் உலகை அச்சுறுத்தி வரும் நிலையில் தற்போது தமிழகமெங்கும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சட்டீஸ்கர் மாநிலம் மகாசமூத் பகுதியை சேர்ந்தவர் தான் ஷீட்டால் பன்சால் என்னும் இளம்வயது பெண். இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் ராய்ப்பூர் மாவட்டத்தின் துணை ஆட்சியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இவருக்கும் ஐ.எப்.எஸ் அதிகாரி ஆயுஷ் என்பவருக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு இருந்தது. ஆனால் 144 தடை உத்தரவால் தங்களது திருமணத்தை  பன்சால் நிறுத்தியுள்ளார். இதுகுறித்து … Read more

நடிகை ரிச்சா தத்தா திருமணத்தை நிறுத்திய கொரோனா – கடுப்பில் ரசிகர்கள்!

பாலிவுட் திரையுலகின் முன்னணி நாயகியாக வலம் வருபவர் தான் நடிகை ரிச்சா சத்தா. இவர் தற்போது நடிகை ஷகிலாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் பைசூல் என்பவரை காதலித்து வருகிறார். இவர்கள் இருவருக்கும் ஏப்ரல் மாதம் திருமணம் நடைபெறுவதாக திகதி அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் அவரது ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருந்தார்கள். ஆனால், உலகம் முழுவதும் பீதியை கிளப்பி உள்ள கொரோனாவால் இவர்களின் திருமணம் தள்ளி வைக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த ஆண்டுக்குள் … Read more

தொடர்ந்து வரும் அவலம்.! இந்து பெண்களை கடத்தி கட்டாய மத மாற்றம்.!

கடந்த 14-ம் தேதி சிந்து மாகாணத்தில் 2 சிறுமிகள் கடத்தப்பட்டனர். அப்பகுதியில் இந்த சம்பவம் பெரும் பரப்பை ஏற்படுத்தியது. பின்னர் சில தினங்களுக்கு முன் சிந்து மாகாணத்தில் திருமணத்தின்போது மணப்பெண்ணை கடத்தி சென்று மதம் மாற்றம் செய்து  சாருக் குல் என்ற இளைஞர் திருமணம் செய்து  கொண்டார். பாகிஸ்தானில் உள்ள இந்து பெண்கள் கடத்தப்பட்டு , அவர்களை கட்டாயமாக மத மாற்றம் செய்து திருமணம் செய்து கொள்வதாக அமெரிக்காவை சேர்ந்த அறக்கட்டளை ஒன்று கூறியுள்ளது. இந்துகள் அதிகம் வாழும் … Read more

ஓரினசேர்கையில் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்த இளம்பெண்கள்.! மண்டபம் தர மறுத்த உரிமையாளர்.! காரணம் இதுவா.?

தென்ஆப்பிரிக்காவைச் சேர்ந்த மேகன் வால்டிங் 25 வயதும், மற்றும் லீ ஹீகீஸ் 24 வயதும் உடைய ஓர்பால் ஈர்ப்பாளர்கள். இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர். மண்டபத்தின் உரிமையாளர் ஓர்பால் ஈர்ப்பாளர்கள் என்பதற்காக திருமண மண்டபத்தை தர மறுத்துள்ளார். அதற்கு காரணமாக, ஓர்பால் ஈர்ப்புத் திருமணம் கிறிஸ்துவ நம்பிக்கைக்கு எதிரானது என்று கூறியுள்ளார். ஒரே பாலினத்தை சேர்ந்த இரு பெண்ணும், இரு ஆண்ணும் காதலித்து ஒன்றாக திருமணம் செய்துகொள்வது வெளிநாடுகளில் பல இடங்களில் அவ்வப்போது நடந்து வந்தது. … Read more