மத்திய அமெரிக்காவில் நடைபெற்ற ஒரே பாலின ஜோடிகளின் திருமணம்! இணையத்தில் நேரடி ஒளிபரப்பு!

மத்திய அமெரிக்காவில் நடைபெற்ற ஒரே பாலின ஜோடிகளின் திருமணம்.

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பால் மக்கள் பீதியடைந்துள்ள நிலையில், மத்திய அமெரிக்காவின் கோஸ்டாரிகாவில் முதன்முறையாக ஒரே பாலின ஜோடிக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. ஒரே பாலின திருமணமானது, ஈக்வடார்,  அர்ஜென்டினா மற்றும் பிரேசில்போன்ற நாடுகளில் சட்ட பூர்வமான நிலையில், மத்திய அமெரிக்காவின் கத்தோலிக்க  கோஸ்டாரிகா நாட்டிலும் இச்சட்டம் அமலுக்கு வந்துள்ளது. 

இந்நிலையில், நேற்று கோஸ்டாரிகாவில் முதல் ஒரே பாலின திருமணம் நடைபெற்றது. ஒரே பாலினத்தை சேர்ந்த டரிட்ஸா அராயா மற்றும் அலெக்ஸாண்ட்ரா குய்ரோஸ் ஆகிய இரு பெண்களும் சட்டப்படி திருமணம் பதிவு செய்துள்ளனர். இவர்களது திருமணம், ஆன்லைனில் அல்லது அரசு தொலைக்காட்சியில் ஒளிபரப்பட்ட நிலையில், முகநூல் பக்கத்தில்,  20,000 பேர் இந்த திருமணத்தை பார்த்துள்ளனர். 

மேலும், அமெரிக்காவில் பல லட்சம் பேர் கொரோனா வைரஸ் பாதிப்பால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இவர்களது திருமணம் கட்டுப்பாடுகளுடன் நடைபெற்றது. 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.