இங்கிலாந்தின் அடுத்த பிரதமராக இந்திய வம்சாவளி பிரபலம்… போட்டி மிக மிக கடினம்…

காலியாக உள்ள இங்கிலாந்து பிரதமர் பதவிக்கு முன்னாள் நிதியமைச்சரான இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் போட்டி என தகவல்.  தன் கட்சியை சேர்ந்த அமைச்சர்களே தனக்கு எதிராக இருந்த காரணத்தால், தனது ஆதரவை பிரிட்டனில் இழந்த காரணத்தால் போரிஸ் ஜான்சன் தனது பிரதமர் பதவி மற்றும் தனது கட்சி பதவியை ராஜினாமா செய்தார். இதனை தொடர்ந்து அந்த பதவிகளுக்கு தற்போது காலி இடம் ஏற்பட்டுள்ளது. முக்கியமாக இங்கிலாந்து பிரதமர் பதவிக்கு கடும் போட்டி நிலவி வருகிறது. … Read more

அருமை…வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை;100% ஊதியம்!எங்கு தெரியுமா?..!

இங்கிலாந்து முழுவதும் 70 நிறுவனங்களை சேர்ந்த 3000 ஊழியர்களுக்கு முழு ஊதியத்துடன் வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை என்ற திட்டம் சோதனை அடிப்படையில் அமல்படுத்தப்பட்டுள்ளது.கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம்,ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் பாஸ்டன் கல்லூரி ஆராய்ச்சியாளர்களுடன் 4 டே வீக் குளோபல் இணைந்து இத்திட்டத்தை நடத்துகின்றன. அதன்படி,நேற்று முதல் இங்கிலாந்தில் உள்ள வங்கிகள் உட்பட பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிறுவனங்கள் இத்திட்டத்தில் பங்கெடுத்துள்ளன. இதன்மூலம்,ஊழியர்கள் தங்கள் அதிகபட்ச உற்பத்தி திறனை வெளிப்படுத்துவார்கள் என்ற நோக்கத்தில் அவர்களுக்கு 100% ஊதியத்துடன் … Read more

#Shocking:35 வயதுக்கு மேற்பட்ட பெண் நோயாளிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 72 வயது மருத்துவர்!

ஸ்காட்லாந்தில் பயிற்சி பெற்ற 72 வயதான இந்திய வம்சாவளி மருத்துவர், 35 வயதுக்கு மேற்பட்ட 48 பெண் நோயாளிகளிடம் பாலியல் ரீதியான குற்றங்களில் ஈடுபட்டது நேற்று கண்டறியப்பட்ட்டுள்ளது. கிருஷ்ணா சிங்,ஒரு பொது மருத்துவர்,இவர் தன்னிடம் வரும் பெண் நோயாளிகளிடம் முத்தமிடுதல் மற்றும் இழிவான கருத்துக்களை தெரிவித்ததாக புகார் கொடுக்கப்பட்டதையடுத்து,அவரை காவல்துறையினர் கைது செய்து கிளாஸ்கோவில் உள்ள உயர்நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். ஆனால்,இந்த புகார் தொடர்பான விசாரணையின் போது தன் மீதான குற்றச்சாட்டுகளை அவர் மறுத்தார்.மேலும்,இந்தியாவில் மருத்துவப் பயிற்சியின் … Read more

ஒமைக்ரானை விட 10% வேகமாக பரவும் – WHO எச்சரிக்கை!

இங்கிலாந்தில் XE எனப்படும் புதிய வைரஸ் தொற்று கண்டறியப்பட்டு உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக கொரோனா தொற்று பரவல் நீடித்து மக்களை பெரிதும் பாதித்த நிலையில்,அதனைக் கட்டுப்படுத்த கடுமையான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. எனினும்,தற்போது இந்தியா உட்பட பல நாடுகளில் குறைந்து வருகிறது.இதனால் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. புதிய வகை கொரோனா – 10 சதவீதம் வேகம்: இந்நிலையில்,இங்கிலாந்தில் புதிய வைரஸ் தொற்று கண்டறியப்பட்டு உள்ளதாக உலக சுகாதார … Read more

உலகின் மிகவும் சலிப்பான நபரின் விவரத்தை வெளியிட்ட இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்கள்!

500 பேரிடம் நடத்திய ஆய்வின் அடிப்படையில், உலகின் மிகவும் சலிப்பான நபரின் விவரத்தை பிரிட்டன் ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர். உலகின் மிகவும் சலிப்பான நபர் ஒரு டேட்டா என்ட்ரி தொழிலாளியாக இருப்பார். அவர் மத நம்பிக்கை கொண்டவர். ஒரு நகரத்தில் வசிப்பவர். டிவி பார்ப்பது அவருக்கு பிடித்த பொழுதுபோக்காக இருக்கும் என்று ஆய்வு கூறுகிறது. உலகின் மிகவும் ‘சலிப்பூட்டும்’ நபரை இங்கிலாந்தில் உள்ள எசெக்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் குழு அடையாளம் கண்டுள்ளது. ஆராய்ச்சியாளர்கள் ஒரு நபருக்கு என்ன குணங்கள் … Read more

சிறுநீர் மூலம் செல்போனை சார்ஜ் செய்யலாம் – இங்கிலாந்து விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு..!

இங்கிலாந்து விஞ்ஞானிகள் சிறுநீர் மூலம் செல்போனை சார்ஜ் செய்யும் முறையை கண்டுபிடித்துள்ளனர். இங்கிலாந்தின்,பிரிஸ்டலில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் குழு மனித கழிவுகளை(யூரினை) மின்சாரமாக மாற்றும் புதிய சுத்தமான ஆற்றல் எரிபொருள் கலத்தை (battery) உருவாக்கியுள்ளது.இதன்மூலம்,செல்போன் உள்ளிட்டவற்றை சார்ஜ் செய்து கொள்ளலாம்.மேலும் அதை ஒருநாள் முழு வீடுகளுக்கும் மின்சாரம் வழங்குவதற்கு பயன்படுத்த விரும்புகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு கிளாஸ்டன்பரி திருவிழாவில் ‘பீ பவர்’ திட்டம் முதன்முதலில் பகிரங்கமாக சோதனை செய்யப்பட்டது, அங்கு விஞ்ஞானிகள் கழிப்பறைகள் நிலையான மின்சாரத்தை உருவாக்க முடியும் … Read more

தடுப்பூசி விவகாரம் : இந்திய பயணிகள் இனி தனிமைப்படுத்தப்பட மாட்டார்கள் – இங்கிலாந்து அரசு!

இனிமேல் கோவிஷீல்ட் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திய இந்திய பயணிகள் தங்கள் நாட்டிற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என இங்கிலாந்து அரசு தெரிவித்துள்ளது. உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸை அழிக்கும் விதமாக தடுப்பூசி செலுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், இந்தியாவிலும் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்ட் ஆகிய இரு தடுப்பூசிகள் அதிகளவில் பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. மேலும், இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்கள் வெளிநாடுகளுக்கு செல்வதற்கும் அனுமதி கொடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் முன்னதாக இங்கிலாந்து அரசு இந்தியாவில் இரண்டு தவணை … Read more

இந்தியாவிலிருந்து இங்கிலாந்துக்கு பயணிக்கும் பயணிகள் தெரிந்துக்கொள்ள வேண்டியவை..!

இந்தியாவிலிருந்து இங்கிலாந்துக்கு பயணிக்கும் நபர்கள் தெரிந்துக்கொள்ள வேண்டிய விதிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.  இந்தியாவிலிருந்து இங்கிலாந்து செல்லும் பயணிகளுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் விதமாக சமீபத்தில் கொரோனா தொடர்பான பயண விதிகளை மாற்றியுள்ளது. அதில் புனேவைச் சேர்ந்த சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா தயாரித்துள்ள கோவிஷீல்டு தடுப்பூசியை முழுமையாக செலுத்தியவர்கள் இந்தியாவிலிருந்து இங்கிலாந்து வருவதற்கு அனுமதித்துள்ளது. மேலும், ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியின் இரண்டு தவணைகளை செலுத்தியவர்களுக்கு அந்நாடு கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த வெள்ளிக்கிழமை அன்று இங்கிலாந்து புதிய கொரோனா பயண … Read more

இந்தியாவில் 2 டோஸ் தடுப்பூசி போட்டாலும், இங்கு தடுப்பூசி போடாதவர்களாகவே கருதப்படுவார்கள் – எங்கு தெரியுமா?

இந்தியாவில் 2 டோஸ் தடுப்பூசியை முழுமையாக செலுத்தி கொண்டவர்கள் இங்கிலாந்தில் தடுப்பூசி போடாதவர்களாக கருதப்பட்டு, கட்டாயமாக 10 நாள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள். கொரோனா வைரஸ் தாக்கம் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக உலகம் முழுவதையும் வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் பல்வேறு நாடுகளிலும் கொரோனவை ஒழிக்கும் விதமாக தடுப்பூசிகள் கண்டறியப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது. அதிலும் சில நாடுகளுக்கு செல்ல வேண்டுமானால் முழுமையாக 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் கோவாக்சின், … Read more

இங்கிலாந்திற்குள் இந்தியர்கள் வருவதற்கான பயணக்கட்டுப்பாட்டில் தளர்வு அறிவிப்பு…!

இன்று முதல் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திய இந்தியர்கள் இங்கிலாந்து நாட்டிற்குள் வருவதற்கான  பயணக்கட்டுப்பாடுகளில் தளர்வு கொடுக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதிலும் கொரானா வைரஸ் பரவி வரும் நிலையில், கொரோனா பரவல் கட்டுப்பாட்டில் உள்ள சில நாடுகள், கொரோனா அதிகம் உள்ள நாடுகளில் இருந்து வரக்கூடிய மக்களுக்கு கடுமையான பயண  கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி இங்கிலாந்தில் ஐக்கிய அரபு அமீரகம், இந்தியா, பஹ்ரைன் ஆகிய நாடுகள் சிவப்பு நிற பட்டியலில் வைக்கப்பட்டு இருந்தது. இந்த நாடுகள் இருந்து வரக்கூடிய … Read more