பிரிட்டன் பிரதமர் ரிஷி சுன்க் மாமியாருக்கு இந்தியாவில் எம்பி பதவி.! மகளிர் தின சர்ப்ரைஸ்..!

Sudha Murty

Sudha Murty : இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தியின் மனைவி சுதா மூர்த்தி மாநிலங்களவை உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். பிரபல கல்வியாளரும், இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தியின் மனைவியுமான சுதா மூர்த்தி மாநிலங்களவை உறுப்பினராக இந்திய குடியரசு தலைவர் திரெளபதி முர்மு நியமனம் செய்துள்ளார். சர்வதேச மகளிர் தினம் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில், சுதா மூர்த்தி மாநிலங்களவை எம்பியாக நியமிக்கப்பட்டுள்ளார். Read More – டிஜிட்டல் படைப்பாளிகளுக்கு மத்திய அரசின் முதல் அங்கீகாரம்.! விருதுகளை வழங்கினார் பிரதமர் மோடி.! … Read more

பிரிட்டனுக்கு நகரும் வெளிநாட்டவர்கள்…. ரிஷி சுனக்கின் கிடுக்கிப்பிடி கட்டுப்பாடுகள்.! 

UK PM Rishi sunak

சமீப வருடங்களாக இங்கிலாந்தில் வந்து குடியேறுவோர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதனால் இங்கிலாந்து நாட்டில் வசிக்கும் மக்கள் தொகை அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனை கட்டுப்படுத்த இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் புதிய விதிமுறைகளை அறிஇவிவித்துள்ளார். இதன் மூலம் மறைமுகமாக இங்கிலாந்து நாட்டின்  நிகர இடம்பெயர்வு அளவை குறைக்க முடியும் என ரிஷி சுனக் உறுதியாக உள்ளார். அவர் இது குறித்து தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் குறிப்பிடுகையில், ‘ இங்கிலாந்து நாட்டிற்குவரும்  நிகர இடம்பெயர்வை குறைக்க … Read more

இஸ்ரேல் பிரதமரை சந்தித்து பேசினார் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்!

Benjamin Netanyahu - Rishi Sunak

இஸ்ரேல்-பாலத்தீன போர் தொடர்ந்து 13வது நாளாக நடந்து வரும் நிலையில், அமெரிக்க அதிபரை தொடர்ந்து, இஸ்ரேலுக்கு வந்துள்ளார் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக். இப்பொது, டெல் அவிவில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை சந்தித்து பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் ஆலோசனை நடத்தினார். பின்னர், சர்வதேச சட்டத்திற்கு இணங்க தங்களை தற்காத்துக் கொள்ள இஸ்ரேல் நாட்டிற்கு முழு ஆதரவு அளிக்கிறது என்று இஸ்ரேல் சென்றடைந்த இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் அறிவித்துள்ளார். இவ்வளவு பயங்கரமான சூழ்நிலையில் இங்கு இருப்பதற்கு … Read more

இஸ்ரேல் சென்றார் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்!

Rishi Sunak lands in Tel Aviv

இஸ்ரேல்-பாலத்தீன போர் தொடர்ந்து வரும் நிலையில், அமெரிக்க அதிபரை தொடர்ந்து, இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் இஸ்ரேல் சென்றார். அமெரிக்க அதிபரை தொடர்ந்து, இங்கிலாந்து பிரதமர் இஸ்ரேல் செல்கிறார் என்று கூறப்பட்ட நிலையில், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்  தற்போது இஸ்ரேலின் டெல் அவிவிலுக்கு வந்தடைந்தார். இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், இஸ்ரேலுக்கு வருகை தந்துள்ள பிரதமர் ரிஷி சுனக் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக் ஆகியோரை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த … Read more

அமெரிக்க அதிபர் பைடனை தொடர்ந்து ரிஷி சுனக் இஸ்ரேல் பயணம்..!

Rishi Sunak

இஸ்ரேல்-பாலத்தீன போர் தொடர்ந்து வரும் நிலையில், இந்த போரில் அப்பாவி மக்கள் பலர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அவர்கள், இஸ்ரேலுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வந்தார். இந்த நிலையில், காஸாவை இஸ்ரேல் ராணுவம் ஆக்கிரமிப்பது மிகப்பெரிய தவறாக அமையும்; காஸாவில் இருந்து ஹமாஸ் படையினர் வெளியேற்றப்பட வேண்டும். ஆனால், அதனை ஆக்கிரமிக்கக்கூடாது என்றும், ஹமாஸ் அமைப்பிற்கு பாலஸ்தீனியர்கள் யாரும் ஆதரவு அளிக்கவில்லை. ஹமாஸ்  அமைப்பு, அல்கொய்தா அமைப்பை விட  பயங்கரமானது என்றும் … Read more

ஜி20 மாநாட்டுக்கு தயாரான ஜோ பிடன், ரிஷி சுனக்.! இந்தோனிசியா புறப்படும் பிரதமர் மோடி.!

20 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி, இன்று இந்தோனேசியாவின் பாலிக்கு செல்கிறார். இந்தோனேசியாவிலுள்ள பாலியில் நவ 15-16 இல் நடைபெறும் ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி, மூன்று நாள் பயணமாக இந்தோனேசியா செல்கிறார். பிரதமர் மோடி இந்த பயணத்தின் போது, ​​நவம்பர் 15 ஆம் தேதி நடைபெறும் இந்திய சமூக வரவேற்பு நிகழ்ச்சியில் இந்திய சமூகம் மற்றும் இந்தியா மற்றும் பாலியின் நண்பர்களுடன் உரையாடுகிறார். ஜி20 … Read more

ரிஷி சுனக்கிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து…!

இங்கிலாந்து பிரதமராக பொறுப்பேற்ற ரிஷி சுனக்கிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து.  இந்திய வம்சாவளியைச்சேர்ந்த ரிஷி சுனக், நேற்று மன்னர் மூன்றாம் சார்லஸ்-ஐ சந்தித்த பின்பு பதவியேற்றுக்கொண்டார். இவருக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்திருந்த நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர்  பக்கத்தில், இங்கிலாந்து பிரதமராக ரிஷி சுனக் பொறுப்பேற்றதற்கு வாழ்த்துக்கள். இதன் மூலம் இந்தியா – இங்கிலாந்தின் உறவு மேலும் வலுப்பெறும் என நம்புகிறேன் என  பதிவிட்டுள்ளார். … Read more

ராணி மறைவின் போது பணியாற்றியதில் பெருமை அடைகிறேன்.! ராஜினாமா செய்த லிஸ் டிரஸ் உரை.!

இங்கிலாந்து மகாராணி எலிசபெத்தின் மறைவின்போது பிரதமர் பதவியில் இருந்து பணியாற்றியதில் நான் பெருமை கொள்கிறேன். – பிரதமர் பதவியில் இருந்து விலகிய லிஸ் டிரஸ் உரையாற்றினார் .  பிரதமர் பதவியில் வெறும் 6 வாரங்களே பதவியில் இருந்த லிஸ் டிரஸ் அண்மையில் தனது ராஜினாமாவை அறிவித்தார். அதன் பிறகு தான் இந்திய வம்சாவளியான ரிஷி சுனக் இன்று பிரதமராக பொறுப்பேற்று கொண்டார். லிஸ் டிரஸ் பதவியில் இருந்த அந்த காலகட்டத்தில் தான் இங்கிலாந்து மகாராணி எலிசபெத் உயிரிழந்தார். … Read more

BREAKING: பிரிட்டன் பிரதமரானார் ரிஷி சுனக்.!

பிரிட்டன் பிரதமராக ரிஷி சுனக் நேற்று தேர்வு செய்யப்பட்ட நிலையில் இன்று, பிரதமராக பதவி ஏற்றுக்கொண்டார். இந்திய வம்சாவளியைச்சேர்ந்த ரிஷி சுனக், இன்று மன்னர் மூன்றாம் சார்லஸ் ஐ சந்தித்த பின்பு பதவியேற்றுக்கொண்டார். பக்கிங்காம் அரண்மனையில் மன்னரை சந்தித்த ரிஷி சுனக், பிரிட்டனின் பிரதமராக பொறுப்பேற்றுக்கொண்டார். கான்சர்வேட்டிவ் கட்சியை சேர்ந்த ரிஷி சுனக் இந்த வருடத்தில் பிரிட்டிஷ் அரசின் மூன்றாவது பிரதமர் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Rishi sunak : இங்கிலாந்தின் புதிய பிரதமராகிறார் இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக்

பிரிட்டனின் புதிய பிரதமராக இந்திய வம்சாவளியை சேர்ந்தவரும் முன்னாள் நிதியமைச்சர் ரிஷி சுனக் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ரிஷி சுனக்கை எதிர்த்து போட்டியிட்ட போட்டியாளரான பென்னி மார்டண்ட் போட்டியிலிருந்து விலகியதை தொடர்ந்தும்  பெரும்பாலான எம்பிக்களின் ஆதரவுடன் பிரதமராகிறார் ரிஷி சுனக். 42 வயதான அவர் இரண்டு மாதங்களுக்குள் நாட்டின் மூன்றாவது பிரதம மந்திரியாக மாறுவார், அவருக்கு முன்னோடியாக இருந்த லிஸ் ட்ரஸ் ஆறு வாரங்களுக்குப் பிறகு பொருளாதார சந்தைகளை உலுக்கிய ஒரு பொருளாதாரத் திட்டத்தால் பதவியில் இருந்து விலகினார்.