இந்தியாவில் 2 டோஸ் தடுப்பூசி போட்டாலும், இங்கு தடுப்பூசி போடாதவர்களாகவே கருதப்படுவார்கள் – எங்கு தெரியுமா?

இந்தியாவில் 2 டோஸ் தடுப்பூசியை முழுமையாக செலுத்தி கொண்டவர்கள் இங்கிலாந்தில் தடுப்பூசி போடாதவர்களாக கருதப்பட்டு, கட்டாயமாக 10 நாள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள்.

கொரோனா வைரஸ் தாக்கம் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக உலகம் முழுவதையும் வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் பல்வேறு நாடுகளிலும் கொரோனவை ஒழிக்கும் விதமாக தடுப்பூசிகள் கண்டறியப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது. அதிலும் சில நாடுகளுக்கு செல்ல வேண்டுமானால் முழுமையாக 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

இந்தியாவில் கோவாக்சின், கோவிஷீல்ட் மற்றும் ஸ்புட்னிக் வி ஆகிய மூன்று தடுப்பூசிகள் பயன்பாட்டில் இருந்து வரும் நிலையில், இரண்டு டோஸாக குறிப்பிட்ட கால இடைவெளியில் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு கொண்டிருக்கிறது. இந்நிலையில், தற்போது இங்கிலாந்து செல்லக்கூடிய இந்திய பயணிகள் 2 டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டாலும், அவர்கள் தடுப்பூசி போடாதவர்களாக கருதப்பட்டு,  10 நாள் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு  உட்படுத்தப்படுவார்கள் என கூறப்பட்டுள்ளது.

இந்திய மட்டுமல்லாமல், ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம், துருக்கி, சுல்தான், தாய்லாந்து மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளில் இருந்து வரக்கூடிய பயணிகள் தடுப்பூசி போட்டு இருந்தாலும் அவர்களும்  தடுப்பூசி போடப்படாதவர்களாக கருதப்பட்டு பத்து நாள் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள். இந்த புதிய விதிகள் வருகிற அக்டோபர் 4-ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் எனவும் கூறப்படுகிறது.

author avatar
Rebekal