கனமழையால் பாதிக்கப்பட்ட சேப்பாக்கம் பகுதியை பார்வையிட்டு, நிவாரண பொருட்களை வழங்கிய உதயநிதி ஸ்டாலின்…!

கனமழையால் பாதிக்கப்பட்ட சேப்பாக்கத்தில், எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் அவர்கள் ஆய்வு மேற்கொண்டு, மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கியுள்ளார்.  சென்னை : தமிழகத்தில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருச்சி, சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில், சென்னையில் நேற்று இரவு முதல் விடிய விடிய கனமழை பெய்துள்ளது. இதனால் சென்னையில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ள நிலையில், வீடுகளுக்குள் மழைநீர் புகுந்துள்ளது. வடசென்னையில் மழைநீர் தேங்கியுள்ள … Read more

அதுக்கு நீ நேர்லதான் பேசணும்! எதுக்கு விவாதத்துக்கு வர்ற! – உதயநிதி ஸ்டாலின் ட்வீட்

ஊடகவியலாளர்களுக்கு எதிராக மிரட்டல் விடுபவர்களுக்கு உதயநிதி ஸ்டாலின் ட்வீட். ஊடகவியலாளர்களுக்கு எதிராக மிரட்டல் விடுபவர்களுக்கு எதிராக உதயநிதி ஸ்டாலின் தனது ட்வீட்டர் பக்கத்தில், அதிரடியான ஒரு பதிவினை பதிவு செய்துள்ளார். அந்த பதிவில், ‘எங்க ஜி பத்தி மட்டும்தான் பேசணும். எதிர்க்கருத்து-இடையூறு இல்லாம பேசணும். கத்திகத்தி பேசணும். வேதனையை சாதனைனு பேசணும். அந்துபோன ரீலை ரியல்னு பேசணும். மொத்தத்துல 24 மணிநேரமும் பேசணும்.’ ‘அதுக்கு நீ நேர்லதான் பேசணும். எதுக்கு விவாதத்துக்கு வர்ற!’ என பதிவிட்டுள்ளார்.

நான் தமிழகத்தில் முக்கிய கட்சி ஒன்றில் இணைய உள்ளேன்! சர்ச்சை நடிகை அதிரடி!

பரபரப்புக்கு பெயர்போன ஸ்ரீ ரெட்டி , அவ்வப்போது திரையுலக பிரபலங்களை வம்பிற்கு இழுப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலையில், சமீபத்தில் இவர் அளித்த பேட்டியில், நடிகர் நானி தனது வாழ்க்கையை பாழாக்கி விட்டதாக வேதனை தெரிவித்திருந்தார். இந்நிலையில், தற்போது இவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், ‘ எனக்கும், உதயநிதிக்கு தொடர்பு இருப்பதாக சிலர் வதந்தி பரப்புகின்றனர். எனது பெயரில் இயங்கும் போலி வலைத்தளம் மூலம் உதயநிதி பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சி நடக்கிறது என்று கூறியுள்ளார். மேலும் அவர் … Read more

தமன்னா வாழ்க்கையிலே சிறந்த படம் இதுதானாம்!

தமன்னா தனக்கான ஒரு இடத்தை சினிமாவில் கச்சிதமாக பிடித்து கொண்டவர். சமீபத்தில் வந்த ஸ்கெட்ச் படத்தை தொடர்ந்து அவர் கண்ணே கலைமானே படத்தில் நடித்துள்ளார். சீனுராமசாமி இயக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடி உதயநிதி . முன்பே இந்த இயக்குனரின் படமான தர்மதுரை தமன்னாவுக்கு நல்ல பெயரை கொடுத்தது. படத்திற்கு தேசிய விருதும் கிடைத்தது. இந்நிலையில் தமன்னா, சீனுராமசாமி தன் படத்திற்கு என்ன வேண்டும் என்பதை நடிகர், நடிகையிடம் சரியாக சொல்லி சிறப்பாக படத்தை எடுத்துவிடுவார். கண்ணே கலைமானே படம் என் … Read more

நவரச நாயகனுடன் இணையும் உதயநிதி …

நடிகர் உதயநிதி  அடுத்த அட்லீயின் துணை இயக்குனர் எனோக் என்கிற புதுமுக இயக்குனரின் கதையில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் நடிகர்கள் தேர்வு செய்யும் வேலைகள் தற்போது துரிதமாக நடந்து வருகிறது. தற்போது வந்த தகவல்படி நவரச நாயகன்  இப்படத்தில் இணைந்துள்ளார். இந்த வருடத்தில் பல படங்களில் கமிட் செய்து வருகிறார் கார்த்திக். ஏற்கனவே Mr. சந்திரமௌலிஎன்கிற படத்தில் அவரது மகன் கவுதம் கார்த்திக்குடன் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை பிரின்ஸ் என்கிற தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

பகத் பாசிலை விட உதயநிதி ஸ்டாலின் நல்ல நடிகர் : இயக்குனர் பிரியதர்ஷன்

மலையாளத்தில் நல்ல நடிகர் என்ற பெயரையும், தனெக்கென தனி ரசிகர் பட்டாளத்தை பெற்றுள்ளவர் பகத் பாசில். இவர் தமிழ் சினிமாவில் தற்போது வேலைக்காரன் படம் மூலம் அறிமுகமாகியுள்ளார். அந்த படமும் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது. தமிழ் சினிமாவில் ஓகேஓகே படம் மூலம் அறிமுகமாகி அடுத்தடுத்து சந்தானத்தை வைத்து பிழைத்து கொண்டிருந்தவர் மனிதன் படம் மூலம் தன்னை நடிகனாக நிலை நிறுத்திகொண்டவர் உதயநிதி ஸ்டாலின். அவர் தற்போது பிரியதர்ஷன் இயக்கத்தில் மலையாளத்தில் ஹிட் ஆகிய மகேஷிண்ட பிரதிகாரம் என்ற … Read more