தமன்னா வாழ்க்கையிலே சிறந்த படம் இதுதானாம்!

தமன்னா தனக்கான ஒரு இடத்தை சினிமாவில் கச்சிதமாக பிடித்து கொண்டவர். சமீபத்தில் வந்த ஸ்கெட்ச் படத்தை தொடர்ந்து அவர் கண்ணே கலைமானே படத்தில் நடித்துள்ளார்.

சீனுராமசாமி இயக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடி உதயநிதி . முன்பே இந்த இயக்குனரின் படமான தர்மதுரை தமன்னாவுக்கு நல்ல பெயரை கொடுத்தது. படத்திற்கு தேசிய விருதும் கிடைத்தது.

இந்நிலையில் தமன்னா, சீனுராமசாமி தன் படத்திற்கு என்ன வேண்டும் என்பதை நடிகர், நடிகையிடம் சரியாக சொல்லி சிறப்பாக படத்தை எடுத்துவிடுவார். கண்ணே கலைமானே படம் என் வாழ்வில் சிறந்த படமாக இருக்கும்.

இன்னும் அவருடன் பணியாற்ற விரும்புகிறேன் என கூறியுள்ளார்.

Leave a Comment