பத்திரிக்கையாளர் சௌமியா விஸ்வநாதன் கொலை.. 4 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை..!

சௌமியா விஸ்நாதன் (25 வயது) என்பவர் பிரபல ஆங்கில தொலைக்காட்சியான இந்தியா டுடேவில் செய்தியாளராக பணிபுரிந்து வந்தார். வழக்கம்போல கடந்த 2008-ஆம் ஆண்டு  செப்டம்பர் 30-ஆம் தேதி அன்று காலை 3:30 மணியளவில் சௌமியா தனது காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது சில மர்ம நபர்கள் சௌமியாவை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுவிட்டு தப்பிச் சென்றனர். இந்த கொடூர கொலை சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.  … Read more

பத்திரிக்கையாளர் குடும்ப நிதியுதவி உயர்வு – தமிழக அரசு அரசாணை வெளியீடு!

தமிழகத்தில் பத்திரிக்கையாளர் குடும்ப நிதி உதவி உயர்த்தி வழங்கப்படும் என சட்டப்பேரவையில் அறிவித்த நிலையில், அதற்கான அரசாணையை வெளியிட்டது தமிழ்நாடு அரசு. இதுகுறித்த அரசாணையில், தமிழ்நாட்டிலுள்ள பத்திரிகைத் துறையினர் நலன் கருதி, பத்திரிகைத் துறையில் தொடர்ந்து பணியாற்றிய ஆசிரியர்கள், துணை ஆசிரியர்கள், செய்தியாளர்கள், புகைப்படக்காரர்கள் மற்றும் பிழை திருத்துபவர்கள் ஆகியோர் பணியிலிருக்கும் போது இயற்கை எய்தினால் அவர்களின் குடும்பத்திற்கு முதல்வர் பொது நிவாரண நிதியிலிருந்து, குடும்ப உதவி நிதியாக ரூ.25.000, ரூ.40,000 ரூ.50,000,ரூ.2,00.000 என வழங்கப்பட்டு ஆணைகள் … Read more

மாநிலங்களவை முன்னாள் உறுப்பினர் சந்தன் மித்ரா மறைவு…! பிரதமர் மோடி இரங்கல்…!

முன்னாள் மாநிலங்களவை உறுப்பினரும்,மூத்த  பத்திரிகையாளருமான சந்தன் மித்ரா மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல். முன்னாள் மாநிலங்களவை உறுப்பினரும்,மூத்த  பத்திரிகையாளருமான சந்தன் மித்ரா அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று நள்ளிரவு காலமானார். இவரது மறைவுக்கு, மாநிலங்களவை எம்பி ஸ்வபன் தாஸ்குப்தா போன்ற தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ள நிலையில், பிரதமர் மோடி அவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ஸ்ரீ சந்தன் மித்ரா ஜி  புத்திசாலித்தனம் மற்றும் நுண்ணறிவு கொண்டவர். இவர், அரசியல் … Read more

#Breaking:முன்னாள் மாநிலங்களவை எம்.பி. சந்தன் மித்ரா காலமானார்…!

முன்னாள் மாநிலங்களவை எம்.பி.யும்,மூத்த பத்திரிகையாளருமான சந்தன் மித்ரா நள்ளிரவு காலமானார். முன்னாள் மாநிலங்களவை உறுப்பினரும்,மூத்த  பத்திரிகையாளருமான சந்தன் மித்ரா புதன்கிழமை(நேற்று) நள்ளிரவு காலமானார்.அவருக்கு வயது 66.இதனை, அவரது மகன் குஷன் மித்ரா செய்தி நிறுவனமான ஏஎன்ஐக்கு தெரிவித்துள்ளார். Former Rajya Sabha MP and senior journalist Chandan Mitra passed away late last night in Delhi, confirms his son Kushan Mitra. (File photo) pic.twitter.com/MB7wlwL9Hi — ANI (@ANI) September … Read more

கொரோனாவால் உயிரிழக்க கூடிய பத்திரிக்கையாளர் குடும்பத்திற்கு 10 லட்சம் நிதி உதவி – யோகி ஆதித்யநாத்!

கொரோனாவால் உயிரிழக்கக் கூடிய பத்திரிக்கையாளர்களின் குடும்பங்களுக்கு 10 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்கள் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் தனது தீவிரத்தை அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்படக்கூடிய முன்களப் பணியாளர்கள் மற்றும் குழந்தைகளுக்கு பல்வேறு மாநிலங்களிலும் நிவாரணம் அளிக்கப்பட்ட வண்ணம் உள்ளது.  உத்தரபிரதேச மாநிலத்திலும் கொரோனாவால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கான முழு பொறுப்பையும் அம்மாநில அரசாங்கமே ஏற்றுக்கொண்டுள்ளது. இந்நிலையில், … Read more

மூத்த பத்திரிக்கையாளர் ராஜ்குமார் கேஸ்வானி கொரோனாவால் மரணம்..!

போபால் விஷவாயு சம்பவம் குறித்து முன்பே எச்சரித்த மூத்த பத்திரிகையாளர் ராஜ்குமார் கேஸ்வானி கொரோனாவால் உயிரிழந்தார். ராஜ்குமார் கேஸ்வானி நியூயார்க் டைம்ஸ், என்.டி.டி.வி., டைனிக் பாஸ்கர், தி இல்லஸ்ட்ராடெட் வீக்லி ஆப் இந்தியா, ஞாயிறு, இந்தியா டுடே மற்றும் தி வீக் போன்ற முக்கிய பத்திரிகை நிறுவனங்களுடன் பணியாற்றியுள்ளார். உலகின் மிக மோசமான போபால் விஷவாயு கசிவு 1984 ஆம் ஆண்டு டிசம்பர் 2-3 ஆம் தேதிகளில் இரவில் நடந்தது. ஆனால், இந்த சம்பவம் குறித்து மூத்த … Read more

பாலியல் வழக்கிலிருந்து பத்திரிக்கையாளர் தருண் தேஜ்பால் விடுதலை – கோவா நீதிமன்றம் உத்தரவு..!

சக பெண் ஊழியரை பாலியல் செய்ததாக கூறிய வழக்கில் இருந்து தெஹல்கா முன்னாள் ஆசிரியர் தருண் தேஜ்பால் இன்று விடுதலை ஆகியுள்ளார். கடந்த 2013 ஆம் ஆண்டில் கோவா கருத்தரங்கில் பங்கேற்ற தருண் தேஜ்பால் அங்கிருந்த நட்சத்திர ஓட்டலில் தன்னுடன் இருந்த சக பெண் ஊழியரை லிப்டில் பாலியல் தொந்தரவு செய்ததாக கூறி அவர் மீது அந்த பெண் வழக்கு தொடந்தார். இதனால்  இவர் மீது கோவா போலீஸ் எப்.ஐ.ஆர். பதிவு செய்தது. பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக … Read more

வெளிநாடுகளுக்கு வழங்கப்பட்ட சீனாவின் அரசு ரகசியம் – கைது செய்யப்பட்ட பெண் ஆஸ்திரேலிய பத்திரிக்கையாளர்!

சீனாவின் அரசு ரகசியங்கள் சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு பகிரப்பட்டதால், ஆஸ்திரேலியாவை சேர்ந்த பத்திரிக்கையாளர் ஒருவரை சீனாவில் கைது செய்துள்ளனர். செங் லீ எனும் தற்போதைய ஆஸ்திரேலிய பத்திரிகையாளராக பணியாற்றிய பெண்மணி சீனாவின் ஹூனான் மாகாணத்தில் பிறந்தவர். ஆனால் தனது சிறுவயதிலேயே ஆஸ்திரேலியாவுக்கு குடிப்பெயர்ந்ததால் ஆஸ்திரேலியக் குடியுரிமையும் பெற்றவராக இருந்துள்ளார். அதன்பின் 2012 ஆம் ஆண்டு சீனாவில் இயங்கி வரக்கூடிய சர்வதேச ஆங்கில தொலைக்காட்சி சேனலில் பத்திரிக்கையாளராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில், சீனாவின் அரசு ரகசியம் வெளிநாடுகளுக்கு பகிரப்பட்டு வருவதாக … Read more

ஜம்மு-காஷ்மீரில் காவல்துறையினரால் தாக்கப்பட்ட பத்திரிக்கையாளர்கள்..?

ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற மாவட்ட தேர்தலின் போது 3 தொலைக்காட்சி பத்திரிக்கையாளர்கள் காவல்துறையினரால் தாக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தெற்கு காஷ்மீர் பகுதியில் உள்ள அனந்தநாக் மாவட்டத்தில் மாவட்ட மேம்பாட்டு கவுன்சில் தேர்தல்கள் நடைபெற்றுவருகிறது. இந்நிலையில், சம்பவ இடத்திற்கு தொலைக்காட்சிப் பத்திரிகையாளர்கள் பலர் சென்று அங்கு நடந்த தகவல்களை சேமித்து உள்ளனர். அப்பொழுது செய்திகளை சேகரித்துக் கொண்டிருந்த 3 பத்திரிகையாளர்களை காவல்துறையினர் தாக்கியதாகவும், செய்திகளை சேகரிக்க கூடாது என தடுத்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் பத்திரிகை நிருபர்களின் உபகரணங்கள் … Read more

ஆப்கனிஸ்தான் பத்திரிகையாளர் மற்றும் ஓட்டுநர் சுட்டு கொலை!

ஆப்கனிஸ்தானில் பத்திரிகையாளர் மற்றும் ஓட்டுநர் அடையாளம் தெரியாத நபரால் சுட்டு கொல்லப்பட்டுள்ளார்.  ஆப்கனிஸ்தானில் உள்ள ஜலாலாபாத்தில் அரபனோ கேலே எனும் பகுதியில் வசித்து வரக்கூடிய தொலைக்காட்சி பத்திரிகையாளர் ஒருவர் தனது காரில் டிரைவருடன் வேலைக்கு சென்றுகொண்டிருந்துள்ளார். அப்பொழுது இவர் சென்றுகொண்டிருந்த காரின் மீது அடையாளம் தெரியாத நபர்களால் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில்பெண் பத்திரிகையாளரும் , ஓட்டுனரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இந்த கொலைக்கு பின்னல் தங்களது குழு இல்லை என தலிபான் தீவிரவாத அமைப்பால் தெரிவிக்கப்பட்டுள்ளது. … Read more