மணிகண்டனை பாராட்டிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்! ‘லவ்வர்’ படத்தின் முதல் விமர்சனம்!

Udhayanidhi Stalin about lover movie

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்களை பார்த்துவிட்டு பாராட்டாமல் இருந்தது இல்லை என்றே கூறலாம். பெரிதும் படங்கள் வெளியாவதற்கு முன்னதாகவே அவர் பார்த்துவிட்டு பாராட்டும் படங்கள் எல்லாம் சூப்பர் ஹிட் ஆகியும் வருகிறது. அந்த வகையில், கடைசியாக அவர் தனுஷ் நடிப்பில் வெளியாகி இருந்த கேப்டன் மில்லர் படத்தை பார்த்துவிட்டு படம் நன்றாக இருப்பதாக தனுஷ் மற்றும் படக்குழுவினரை வாழ்த்தி இருந்தார். அதனை தொடர்ந்து நடிகர் மணிகண்டன் நடித்துள்ள லவ்வர் படத்தை பார்த்துவிட்டு அவருக்கு … Read more

நடிகர் விஜய்க்கு அமைச்சர் உதயநிதி வாழ்த்து!

UdhayanidhiStalin

நடிகர் விஜய் தனது புதிய அரசியல் கட்சியை தொடங்கி உள்ளார். அந்த கட்சிக்கு தமிழக வெற்றி கழகம் என்று பெயரிடப்பட்டுள்ளது. வரும் நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் போட்டியிடவில்லை என்றும் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவோம் எனவும் தெரிவித்திருந்தார். மேலும், ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ள இன்னொரு திரைப்படம் சார்ந்த பணிகளை முடித்துவிட்டு முழுமையாக மக்கள் சேவைக்கான அரசியலில் ஈடுபட உள்ளேன் எனவும் நடிகரும், தமிழக வெற்றி கழக தலைவருமான விஜய் தெரிவித்துள்ளார். ஊழல் மலிந்த கலாச்சாரம், சாதிமத பேதங்கள் பிளவுவாத … Read more

தேர்தல் பணி… மேற்கு மண்டல பிரதிநிதியாக களமிறங்குகிறார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

udhayanidhi stalin

நாடளுமன்ற மக்களவை தேர்தல் இன்னும் ஒருசில மாதங்களில் நடைபெற உள்ளது. இதற்காக தலைமை தேர்தல் ஆணையம் ஒருபக்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், மறுபக்கம் தேர்தலுக்கான பல்வேறு பணிகளில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருகிறது. அதன்படி, கூட்டணி, தொகுதி பங்கீடு, பூத் கமிட்டி அமைப்பது குறித்து பிரதான அரசியல் கட்சிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. இதில், சில கட்சிகள் தேர்தல் பணி குழுவை அமைத்து அறிவித்து வருகிறது. அந்தவகையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கான தேர்தல் குழு … Read more

டிசம்பர் 20, 21..! திமுக இளைஞரணி மாநாடு நிகழ்ச்சி நிரல்கள் என்னென்ன.? உதயநிதி விளக்கம்…

Minister Udhayanidhi stalin says about DMK4YOUTH maanaadu

திமுக கட்சியின் இளைஞரணி மாநாடு வரும் ஜனவரி 21ஆம் தேதி சேலத்தில் நடைபெற உள்ளது. இதற்கான விழா ஏற்பாடுகள் வெகு தீவிரமாக பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்த மாநாடு நிகழ்வுகள் முந்தைய நாள் ஜனவரி 20ஆம் தேதி அன்று முதலே துவங்குகிறது. இது குறித்து திமுக இளைஞரணி தலைவர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று செய்தியாளர்களிடம் பல்வேறு தகவல்களை தெரிவித்தார். தவழ்ந்து தவழ்ந்து செல்வதால் கால்வலி வருகிறது.! இபிஎஸ்-ஐ விமர்சித்த உதயநிதி.! அவர் கூறுகையில், கடந்த வருடம் … Read more

தவழ்ந்து தவழ்ந்து செல்வதால் கால்வலி வருகிறது.! இபிஎஸ்-ஐ விமர்சித்த உதயநிதி.!

Edappadi Palanisamy - Udhayanidhi stalin

உத்திர பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலின் கும்பாபிஷேக விழா (Ram Mandir – Pran Pratishtha) வரும் ஜனவரி மாதம் 22ஆம் தேதி நடைபெற உள்ளது.  இந்த விழாவில் பிரதமர் மோடி உட்பட தேசிய தலைவர்கள் பலர் கலந்துகொள்ள உள்ளனர். இந்த விழாவில் கலந்துகொள்ள பல்வேறு அரசியல் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ராமர் கோயில் திறப்புக்கு எதிர்ப்பு இல்லை.. ஆனா இதில் உடன்பாடு இல்லை – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இந்த விழா … Read more

ராமர் கோயில் திறப்புக்கு எதிர்ப்பு இல்லை.. ஆனா இதில் உடன்பாடு இல்லை – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

udhyanithi stalin

திமுகவின் இரண்டாவது இளைஞரணி மாநாட்டை முன்னிட்டு, சேலம் மாநாட்டு திடல் நோக்கி சுடர் ஓட்டத்தை சென்னை சிம்சன் பெரியார் சிலையில் இருந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழகத்தில் வட மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் மழை மற்றும் வெள்ளம் காரணமாக இரண்டு முறை தள்ளிவைக்கப்பட்ட திமுக இளைஞரணி மாநாடு வரும் 21ம் தேதி சேலத்தில் மிகப் பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இந்த மாநாட்டிற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், சென்னையில் இருந்து மாநாடு சுடர் தொடர் … Read more

கேப்டன் மில்லருக்கு பாராட்டு! அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த நடிகர் தனுஷ்!

udhayanidhi and dhanush

தனுஷ் நடிப்பில் வெளியான கேப்டன் மில்லர் திரைப்படம் மக்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. படத்தை பார்த்த மக்கள் நல்ல விமர்சனத்தை கூறி வருகிறார்கள். மக்களை போல பிரபலங்கள் பலரும் படம் பார்த்துவிட்டு தங்களுடைய விமர்சனங்களையும், பாராட்டுகளையும் தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் படம் பார்த்துவிட்டு தனது எக்ஸ்வலைதள பக்கத்தில் ” ஒடுக்கப்பட்ட மக்களின் கோயில் நுழைவு உரிமையை அடிப்படையாக வைத்து கேப்டன் மில்லர் என்கிற அருமையானதொரு படைப்பை … Read more

உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி.? முதலமைச்சர் விளக்கம்.!

Minister Udhayanidhi stalin - Tamilnadu CM MK Stalin

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக இம்மாத இறுதியில் சுமார் 15 நாட்கள் வெளிநாடு செல்ல திட்டமிட்டு உள்ளார். இந்த முறை ஸ்பெயின் , அமெரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த சமயத்தில் முதல்வரின் முக்கிய பொறுப்புகளை கவனிக்க அமைச்சராக உள்ள உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக பொறுப்பேற்க உள்ளார் என வதந்திகள் பரவி வந்தன. இந்த செய்தி குறித்து முன்னதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் கேட்டபோது … Read more

பிரதமர் மோடியை சந்தித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அழைப்பு.!

Udhayanidhi Stalin

கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டி நடப்பாண்டில் ஜனவரி 19ஆம் தேதி முதல் ஜனவரி 31 வரை தமிழகத்தில் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசின் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மேற்கொண்டு வருகிறார். இப்போட்டியில் பங்கு பெறும் வீரர் மற்றும் வீராங்கணைகள் 01.01.2005 அன்றோ அல்லது அதற்குப் பின்னரோ பிறந்திருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.  எனவே, கேலோ இந்தியா போட்டிக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில், பிரதமர் மோடியை இன்று டெல்லியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்திக்கிறார். … Read more

பிரதமர் மோடியை இன்று டெல்லியில் சந்திக்கிறார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

udhayanidhi stalin

தமிழ்நாட்டில் ஜனவரி 19 முதல் 31ம் தேதி வரை நடப்பாண்டுக்கான கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசின் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மேற்கொண்டு வருகிறார். இது தொடர்பாக தமிழக விளையாட்டுத் துறை கூறியதாவது, கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் 2018ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டுகளில் 17 வயதிற்குட்பட்டவர்கள் மற்றும் 21 வயதிற்குட்பட்டவர்கள் என இரண்டு பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டன. கொரோனா பரவல் காரணமாக கடந்த 2020ம் … Read more