கேப்டன் மில்லருக்கு பாராட்டு! அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த நடிகர் தனுஷ்!

தனுஷ் நடிப்பில் வெளியான கேப்டன் மில்லர் திரைப்படம் மக்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. படத்தை பார்த்த மக்கள் நல்ல விமர்சனத்தை கூறி வருகிறார்கள். மக்களை போல பிரபலங்கள் பலரும் படம் பார்த்துவிட்டு தங்களுடைய விமர்சனங்களையும், பாராட்டுகளையும் தெரிவித்து வருகிறார்கள்.

அந்த வகையில், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் படம் பார்த்துவிட்டு தனது எக்ஸ்வலைதள பக்கத்தில் ” ஒடுக்கப்பட்ட மக்களின் கோயில் நுழைவு உரிமையை அடிப்படையாக வைத்து கேப்டன் மில்லர் என்கிற அருமையானதொரு படைப்பை சரியான நேரத்தில் கொண்டு வந்திருக்கும் நடிப்பு அசுரன் தனுஷ், சிவராஜ்குமார், இயக்குனர் அருண்மாதேஸ்வரன், இசை அமைப்பாளர் சகோதரர் ஜிவி பிரகாஷ் ப்ரியங்கா மோகன், சண்டை பயிற்சியாளர் திலீப் சுப்புராயன்
உள்ளிட்ட அனைவருக்கும் எனது பாராட்டுகள்.

கேப்டன் மில்லர் vs அயலான்! பொங்கல் வின்னர் யார்? முதல் நாள் வசூல் விவரம் இதோ!

மனித உரிமைப் போராட்டத்தின் மகத்துவத்தைச் விடுதலைப் போராட்டக் கதைக்களத்தின் ஊடாக அழுத்தமாக பேசியிருக்கிறார் கேப்டன் மில்லர்” என படம் பார்த்துவிட்டு கூறியிருந்தார். தற்போது உதயநிதி ஸ்டாலினுக்கு நடிகர் தனுஷ் நன்றி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனுஷ் தனது ட்வீட்டர் பக்கத்தில் கூறியதாவது ” நன்றி சகோதரரே, நீங்கள் விரும்பும் கலையை நீங்கள் பாராட்டத் தவறுவதில்லை, “கர்ணன்” படத்திற்காக நீங்கள் பாராட்டிய காலத்தை நான் இன்னும் அன்புடன் நினைவில் கொள்கிறேன். இந்த பாராட்டு எனக்கும் எனது கேப்டன் மில்லர் குழுவிற்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும், அதற்காக உங்களுக்கு மிக்க நன்றி” என கூறியுள்ளார்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.