மணிகண்டனை பாராட்டிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்! ‘லவ்வர்’ படத்தின் முதல் விமர்சனம்!

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்களை பார்த்துவிட்டு பாராட்டாமல் இருந்தது இல்லை என்றே கூறலாம். பெரிதும் படங்கள் வெளியாவதற்கு முன்னதாகவே அவர் பார்த்துவிட்டு பாராட்டும் படங்கள் எல்லாம் சூப்பர் ஹிட் ஆகியும் வருகிறது.

அந்த வகையில், கடைசியாக அவர் தனுஷ் நடிப்பில் வெளியாகி இருந்த கேப்டன் மில்லர் படத்தை பார்த்துவிட்டு படம் நன்றாக இருப்பதாக தனுஷ் மற்றும் படக்குழுவினரை வாழ்த்தி இருந்தார். அதனை தொடர்ந்து நடிகர் மணிகண்டன் நடித்துள்ள லவ்வர் படத்தை பார்த்துவிட்டு அவருக்கு கால் செய்து தனது வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார்.

எனக்கும் கவினுக்கும் போட்டியா? மணிகண்டன் பளீச் பதில்!

இந்த தகவலை நடிகர் மணிகண்டன் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் தெரிவித்து இருக்கிறார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது ” அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி. லவ்வர் படத்தை பார்த்துவிட்டு எங்களை பாராட்டியது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

படத்தை நீங்கள் விரும்பி ரசித்தீர்கள் என்பதை அறிந்து நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். என்னைப் போல வளர்ந்து வரும் கலைஞருக்கு, படத்தை பார்த்துவிட்டு எனது நடிப்பிற்காக பாராட்டப்படுவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இது போன்ற பாராட்டுக்கள் அடுத்ததாக என்னை வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிக்க ஆற்றலை கொடுக்கிறது” எனவும் கூறியுள்ளார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் படத்தை பார்த்துவிட்டு தனது விமர்சனத்தை மணிகண்டனிடம் கூறியிருப்பதால் ரசிகர்கள் பலரும் படம் ஹிட்டு தான் என கூறிவருகிறார்கள்.

லவ்வர் 

இந்த லவ்வர் திரைப்படத்தினை இயக்குனர் பிரபுராம் வியாஸ் என்பவர் இயக்கியுள்ளார். ந்த திரைப்படத்தில் ஸ்ரீ கௌரி பிரியா, கண்ணா ரவி, சரவணன், கீதா கைலாசம், ஹரிஷ் குமார், நிகிலா சங்கர், ரினி, பிந்து பாண்டு, அருணாசலேஸ்வரன் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். படம்  வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.

Leave a Comment