கொரோனா நிவாரணத்தொகை கால அவகாசம் நீட்டிப்பு..!

கொரோனா நிவாரணத்தொகை மற்றும் 14 மளிகை பொருட்கள் வாங்குவதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.  நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்று முதலமைச்சர் பதவியேற்ற திமுக கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், பொறுப்பேற்ற அன்றைய தினமே குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூ.4,000 வழங்கும் திட்டத்தில் முதல் கையெழுத்திட்டார். இந்த தொகை இரண்டு தவணைகளாக வழங்கப்பட்டது. முதல் தவணையாக ரூ. 2,000 வழங்கப்பட்டது.  இரண்டாவது தவணையாக ரூ.2,000 மற்றும் 14 வகை மளிகை பொருட்கள் மக்களுக்கு நியாயவிலை … Read more

ரேஷன் கடைகளில் உள்ள பொருட்களின் தரத்தை ஆய்வு செய்ய உத்தரவு – கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர்

தமிழகத்தில் உள்ள நியாயவிலை கடைகளில் உள்ள பொருட்களின் தரத்தை ஆய்வு செய்யுமாறு அனைத்து மண்டல பொறுப்பாளர்களுக்கு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அ.சண்முக சுந்தரம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.  தமிழக அரசு சார்பில் நியாயவிலை கடைகளில் மக்களுக்கு 14 வகையான மளிகை பொருட்கள் கொடுக்கப்பட்டது. இந்த மளிகை பொருட்களில் காலாவதியான டீ தூள் இருந்ததாக செய்திகள் வெளியான நிலையில், தமிழகத்தில் உள்ள நியாயவிலை கடைகளில் உள்ள பொருட்களின் தரத்தை ஆய்வு செய்யுமாறு அனைத்து மண்டல பொறுப்பாளர்களுக்கு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் … Read more

ரேஷன் கடைகளில் திடீர் ஆய்வு செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

சென்னையிலுள்ள ரேஷன் கடைகளுக்கு நேற்று திடீரென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டுள்ளார். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று நியாயவிலைக் கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டுள்ளார். சென்னை, ஆழ்வார்பேட்டை, நந்தனம் மற்றும் லாயிட்ஸ் காலனி ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள 6 ரேஷன் கடைகளுக்கு நேரில் சென்று மேற்பார்வையிட்டார். அப்போது திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினும் உடனிருந்துள்ளார். அங்கு கடைகளில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு வரும் கொரோனா நிவாரணத்தொகையான 2000 ரூபாய்  மற்றும் 14 அத்யாவசிய … Read more

இன்று முதல் 4-ம் தேதி வரை மளிகை பொருட்களுக்கான டோக்கன் விநியோகம்…!

தமிழகத்தில் ரேஷன் கடைகளில் 13 வகையான மளிகை பொருட்கள் பெற்றுக் கொள்வதற்கான டோக்கன், இன்று முதல் 4-ம் தேதி வரை வீடுகளுக்கே சென்று  விநியோகிக்கப்படுகிறது. தமிழகத்தில் ரேஷன் கடைகளில் 13 வகையான மளிகை பொருட்கள் பெற்றுக் கொள்வதற்கான டோக்கன், இன்று முதல் 4-ம் தேதி வரை வீடுகளுக்கே சென்று  விநியோகிக்கப்படுகிறது. இது தொடர்பாக வ்ரளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், ‘தமிழ்நாட்டில் தொடர்ந்து அதிகரித்து தற்போது கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ள கொரோனா நோய் பரவலை கருத்தில் கொண்டும் மத்தியஅரசின் உள்துறை அமைச்சகம் … Read more

கொரோனாவால் இறந்த ரேஷன் கடை ஊழியர்களுக்கு நிவாரணத்தொகை..!

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதன் காரணத்தால் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தளர்வில்லாத ஊரடங்கை அமல்படுத்தியுள்ளார். தமிழகத்தில் சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்று முதல்வராக பொறுப்பேற்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதலில் 5 கோப்புகளில் கையெழுத்திட்டார். கொரோனா நிவாரண நிதியாக அரிசி அட்டைதாரர்களுக்கு ரூ.4000 வழங்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக இதற்கு முதலில் கையெழுத்திட்டார்.  அதில் இம்மாதமே முதல் தவணையாக ரூ.2000 வழங்கப்படும் என்று தெரிவித்தார்.  அதன்படி, தினமும் 200 … Read more

ரேஷன் கடைகளில் கொரோனா நிவாரண நிதி ரூ.2,000 வழங்கும் பணிகள் தொடக்கம்…!

இன்று முதல் ஒவ்வொரு ரேஷன் கடைகளிலும் ரூ.2 ஆயிரம் ரொக்கப் பணம் விநியோகம் விநியோகிக்கப்பட்டு வருகிறது.   திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தேர்தலின் போது திமுக ஆட்சிக்கு வந்தால் கொரோனா நிவாரண நிதியாக ரூ.4000 வழங்கப்படும்  என்றும், கருணாநிதி பிறந்த நாளான ஜூன் 3-ம் தேதி வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார். அதன்படி திமுக ஆட்சிக்கு வந்ததும் முதலமைச்சரான மு.க.ஸ்டாலின் தனது முதல் கையெழுத்தாக நிவாரண நிதி வழங்கும் கோப்பில் கையெழுத்திட்டார். கொரோனா அதிகமாக பரவும் சூழலில் இந்த … Read more

இனிப்பான செய்தி ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு – தமிழக அரசு அரசாணை வெளியீடு

தமிழக அரசு ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஊதியத்தை உயர்த்தி அரசாணை வெளியிட்டுள்ளது.ரேஷன் கடைகளில் நியமிக்கப்படும் புதிய ஊழியர்களுக்கான தொகுப்பூதியம் உயர்வு. அரசாணையின்படி ரேஷன் கடையில் விற்பனையாளர்களுக்கான தொகுப்பூதியம் ரூ. 5,000-இல் இருந்து ரூ. 6,250 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஓராண்டு பணி முடித்த விற்பனையாளர்களுக்கு காலமுறை ஊதியமாக ரூ. 8,600 – ரூ. 29,000 வழங்கப்படும். இதேபோல் கட்டுனர்களுக்கான தொகுப்பூதியம் ரூ. 4,250-இல் இருந்து ரூ. 5,550 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஓராண்டு பணி முடித்தவர்களுக்கு ரூ. 7,800-ரூ. 26,000 … Read more

ரேஷன் கடைகளில் ஒன்றாம் தேதி முதல் பயோமெட்ரிக் முறை அமலுக்கு வருகிறது!

தமிழகம் முழுவதிலுமுள்ள ரேஷன் கடைகளில் ஒன்றாம் தேதி முதல் பயோமெட்ரிக் முறை அமலுக்கு வருகிறது. தமிழக மக்கள் அனைவருக்கும் இத்தனை காலங்களாக ரேஷன் கடைகளில் பொது மக்களுக்கு அரிசி, சர்க்கரை, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் வாங்க ஸ்மார்ட் கார்டில் உள்ள பார்கோடு மட்டுமே போதுமானதாக இருந்தது. இதனால் யார் வேண்டுமானாலும் மற்றவர்களுக்கு ரேஷன் பொருட்கள் வாங்கிக் கொடுக்க ஏதுவாக இருந்தது. ஆனால் தற்பொழுது வருகிற ஒன்றாம் தேதி முதல் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் … Read more

நியாய விலைக் கடைகளில் போலிப் பட்டியல் மட்டுமின்றி அதிக இருப்பு வைத்தாலும் குற்றமே… பதிவாளர் சுற்றறிக்கை…

தமிழக கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் திரு. இல.சுப்பிரமணியன், அவர்கள்  அனைத்து மண்டல இணைப் பதிவாளர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், கூறப்பட்டு இருப்பதாவது, நியாய விலைக் கடைகளில் அத்தியாவசிய பொருள் இழப்பு, முறைகேடு மற்றும் இருப்பு அதிகம் வைத்தல் ஆகியவை தொடர்பாக அரசுக்கு ஏற்பட்ட இழப்பை, சம்பந்தப்பட்ட  நியாய விலைக் கடை பணியாளரிடம் இருந்து வசூலிக்க உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.பொருள் விற்பனை முனை எந்திரத்தையும், உண்மை இருப்பையும் சரிபார்க்கும்போது … Read more

பொருள்கள் வழங்க தாமதம் – ரேஷன் கடை ஊழியரை கடைக்குள் வைத்து பூட்டிய பொதுமக்கள்!

ரேஷன் கடையில் பொருள்கள் வழங்க தாமதமானதால் கடை ஊழியரை கடைக்குள் வைத்து பூட்டிய பொதுமக்கள். வேலூரில் உள்ள சலவன்பெட் எனும் பகுதியில் உள்ள இரண்டு ரேஷன் கடைகளில் வழக்கமாக ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்பொழுது இலவச அரிசியை வழங்கி வருவதால் முதியோர்களும் மற்ற ரேஷன் பொருட்களை வாங்க பொதுமக்களும் நீண்ட வரிசையில் அதிக நேரம் காத்துக் கொண்டிருந்துள்ளனர். அப்பொழுது பயோமெட்ரிக் சரியாக வேலை செய்யாததால் தாமதம் ஏற்பட்டு, அனைவரும் வெயிலிலேயே நீண்ட நேரம் நிற்க … Read more