புயல் நிவாரண நிதி – தனது ஒருமாத ஊதியத்தை வழங்கிய முதல்வர்..!

mk stalin

மிக்ஜாம் புயல் பேரிடர் பாதிப்பிலிருந்து மீள முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு முதல்வர் மு..ஸ்டாலின் தனது ஒரு  மாத ஊதியத்தை வழங்குவதாகவும்,  அனைத்து சட்டமன்ற – நாடாளுமன்ற உறுப்பினர்களும் நிதி அளித்திடுமாறும் கேட்டுக் கொண்டுள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், மிக்ஜாம் புயலால் கடந்த டிசம்பர் 2 முதல் 4-ஆம் தேதி வரை சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில் கொட்டித் தீர்த்த மழை என்பது, 47 ஆண்டுகால வரலாற்றில் இல்லாத அளவிலான பெருமழை, இந்த இயற்கைப் பேரிடரால் … Read more

பரந்தூர் விமான நிலையம் 100% கட்டாயம் வரும் – அமைச்சர் ராமசந்திரன்

மதுரை விமான நிலையத்திற்கு நிலம் எடுக்கும் பணிகள் 99% நிறைவடைந்துள்ளது அமைச்சர் ராமசந்திரன் தெரிவித்துள்ளார்.  பரந்தூர் விமான நிலையம் அமைக்க இடம் வழங்குவதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதுகுறித்து அதிகாரிகள் அவர்களிடம்  பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். இந்த நிலையில், இதுகுறித்து அமைச்சர் ராமச்சந்திரன் அவர்கள் கூறுகையில், ‘மதுரை விமான நிலையத்திற்கு நிலம் எடுக்கும் பணிகள் 99% நிறைவடைந்துள்ளது. பரந்தூர் விமான நிலையம் 100% கட்டாயம் வரும். செய்யின் வளர்ச்சிக்கு பரந்தூர் விமான நிலையம் அவசியம். … Read more

மணல் சிற்பத்தினை முதல்வர் திறந்து வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

சென்னை மெரினா கடற்கரையில் வடிவமைக்கப்பட்டுள்ள மணல் சிற்பத்தை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். மெரினா கடற்கரையில்  பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிக்கவும் பெண்களின் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், தமிழக அரசின் 181 மகளிர் உதவி மையத்தின் சார்பில் வடிவமைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இந்த மணல் சிற்பத்தை திறந்து வைத்தார். அந்த மணல் சிற்பத்தில், பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்போம் என எழுதப்பட்டிருந்தது.

கால்பந்து ஜாம்பவான் பீலே மறைவு – முதல்வர் இரங்கல்..!

கால்பந்து ஜாம்பவான் பீலே மறைவு முதல்வர் இரங்கல்.  கால்பந்து ஜாம்பவான் பீலே உடல்நல குறைவால் பிரேசிலில் உள்ள மருத்துவமனையில் காலமானார். இவருக்கு வயது 82. இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பெற்று வந்தார். கடந்த ஆண்டு பீலேவிற்கு பெருங்குடலில் அறுவை சிகிச்சை செய்து புற்றுநோய் கட்டி அகற்றப்பட்டது. அதனை தொடர்ந்து கொரோனாவுக்கு பிந்தைய பாதிப்புகளும் இருந்த நிலையில், அவரது உடல்நிலை மோசமடைந்தது. இந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி காலமானார். இவரது, மறைவுக்கு தமிழக முதல்வர் … Read more

பிரதமர் மோடியின் தாயார் மறைவு – முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்…!

பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தாயார் ஹீராபென் மோடி மறைவுக்கு தலைவர்கள் இரங்கல். பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தாயார் ஹீராபென் மோடி அவர்கள் உடல்நலகுறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அதிகாலை காலமானார். அவரது மறைவுக்கு தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். குடியரசு தலைவர் திரௌபதி முர்மு  பிரதமர் திரு நரேந்திர மோடியின் தாயார் ஹீராபாவின் நூறு ஆண்டுகால போராட்ட வாழ்க்கை இந்திய இலட்சியங்களின் அடையாளம். ஸ்ரீ மோடி … Read more

ஒரு கோடியே ஒன்றாவது பயனாளிக்கு மருந்து பெட்டகத்தை வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திருச்சியில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் ஒரு கோடியை ஒன்றாவது பயனாளிக்கு மருந்து பெட்டகத்தை வழங்கினார். மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் தமிழக முழுவதும் பலர் பயன்பற்று வருகின்றனர். அந்த வகையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திருச்சியில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் ஒரு கோடியை ஒன்றாவது பயனாளிக்கு மருந்து பெட்டகத்தை வழங்கினார். மேலும், திருச்சி சன்னாசிப்பட்டியில் இத்திட்டத்தின் இயன் முறை சிகிச்சை பெறுபவர் இல்லத்திற்கு … Read more

திருச்சியில் ஒலிம்பிக் அகாடமி அமைக்கப்படும் – முதல்வர் மு.க.ஸ்டாலின்

திருச்சியில் அனைத்து வசதிகளுடன் கூடிய ஒலிம்பிக் அகாடமி அமைக்கப்படும் என முதல்வர் அறிவிப்பு.  திருச்சியில் நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காக சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து முதல்வர் அவர்கள் ரூ.238 கோடி மதிப்பில் 5 ஆயிரத்து 635 முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்தார். அண்ணா விளையாட்டு அரங்கில் ரூ.308 கோடி மதிப்பில் 5,951 புதிய திட்டப் பணிகளுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார். ரூ.79 கோடி மதிப்பில் 22,716 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகினார். … Read more

திருச்சியில் நலத்திட்டங்களை தொடங்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

திருச்சியில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின்.  திருச்சியில் நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காக சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து முதல்வர் அவர்கள் ரூ.238 கோடி மதிப்பில் 5 ஆயிரத்து 635 முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்தார். அண்ணா விளையாட்டு அரங்கில் ரூ.308 கோடி மதிப்பில் 5,951 புதிய திட்டப் பணிகளுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார்.

தமிழக அரசின் அறிவிப்புக்கு மக்கள் நீதி மய்யம் வரவேற்பு !

ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட ரூ.1000 ரொக்கம் மற்றும் தலா ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரையுடன் முழு கரும்பும் சேர்த்து வழங்கப்படும் என்ற அறிவிப்பிற்கு மநீம வரவேற்பு.  பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பும் சேர்த்து வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வாய்த்த நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், பொங்கல் பரிசுத் தொகுப்பில் பச்சரிசி, சர்க்கரை கரும்புடன் ரூ. 1000 வழங்க உத்தரவு பிறப்பித்துள்ளார். இதற்க்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்துள்ள நிலையில், தமிழக அரசின் அறிவிப்புக்கு மக்கள் நீதி … Read more

திருச்சி வந்தடைந்தார் முதல்வர் ஸ்டாலின்..! உற்சாக வரவேற்பளித்த தொண்டர்கள்..!

திருச்சி சென்ற முதலமைச்சர் ஸ்டாலினுக்கு திமுகவினர் வழிநெடுக்கிலும் உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர்.  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திருச்சி சென்ற சென்றடைந்தார். அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கும் விழாவில் கலந்து கொள்வதற்காக திருச்சி சென்ற முதலமைச்சர் ஸ்டாலினுக்கு திமுகவினர் வழிநெடுக்கிலும் உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர். முதல்வரின் வருகையை ஒட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று திருச்சியில் ட்ரோன்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.