ரேஷன் கடைகளில் ஒன்றாம் தேதி முதல் பயோமெட்ரிக் முறை அமலுக்கு வருகிறது!

ரேஷன் கடைகளில் ஒன்றாம் தேதி முதல் பயோமெட்ரிக் முறை அமலுக்கு வருகிறது!

தமிழகம் முழுவதிலுமுள்ள ரேஷன் கடைகளில் ஒன்றாம் தேதி முதல் பயோமெட்ரிக் முறை அமலுக்கு வருகிறது.

தமிழக மக்கள் அனைவருக்கும் இத்தனை காலங்களாக ரேஷன் கடைகளில் பொது மக்களுக்கு அரிசி, சர்க்கரை, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் வாங்க ஸ்மார்ட் கார்டில் உள்ள பார்கோடு மட்டுமே போதுமானதாக இருந்தது. இதனால் யார் வேண்டுமானாலும் மற்றவர்களுக்கு ரேஷன் பொருட்கள் வாங்கிக் கொடுக்க ஏதுவாக இருந்தது. ஆனால் தற்பொழுது வருகிற ஒன்றாம் தேதி முதல் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் பயோமெட்ரிக் முறை அமல்படுத்தப்படவுள்ளது. குடும்பத்தில் உள்ள ஒருவரின் கை விரல் ரேகை பதிவு செய்யப்பட்டிருக்கும், இனி ரேஷன் பொருட்கள் வாங்குவதற்கு அந்த கைரேகை பதிவு செய்யப்பட்ட நபர் மட்டுமே வந்து தங்களது கைரேகையை வைத்து பொருட்கள் வாங்கி செல்ல முடியும்.

மேலும் இதுகுறித்து ரேஷன் கடை ஊழியர்களுக்கு உதவி ஆணையர் எழுதியுள்ள கடிதத்தில், ரேஷன் கடை விற்பனையாளர்களுக்கு கடந்த 25, 26 ஆகிய தேதிகளில் சமூக இடைவெளி பற்றிய புதிய இயந்திரப் பயிற்சி அளிக்கப்பட்டதாகவும், புதிய விற்பனை இயந்திரத்தை எவ்வாறு பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும், இயந்திரத்தை அலட்சியமாகவோ அல்லது தவறான முறையில் கையாண்டு சேதப்படுத்தினால் சரிசெய்வதற்கு அல்லது அந்த இயந்திரம் மாற்றி புதிதாக வழங்கப்படுவதற்கு ஏற்ற தொகையை சம்பந்தப்பட்ட நியாய விலை கடை விற்பனையாளர் செலுத்த வேண்டும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.

author avatar
Rebekal
Join our channel google news Youtube